Uses of Jathikai : சருமம் பொலிவு பெற, மூட்டுவலி குணமாக 10 ரூபாய் போதும்! நம்ப முடியவில்லையா? எப்டின்னு பாருங்க!
Uses of Jathikai : சருமம் பொலிவு பெற, மூட்டுவலி குணமாக 10 ரூபாய் போதும்! நம்ப முடியவில்லையா? எப்டின்னு பாருங்க!
அந்த காலத்தில் நமது முன்னோர்கள் பயன்படுத்தி பயன்பெற்ற மருத்துவ குறிப்புதான் இது. அதற்கு முக்கிய பொருள் ஜாதிக்காய், இதை நீங்கள் நாட்டு மருந்து கடைகள், மளிகைக்கடைகள், டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்கள் என எதிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒன்றுதான்.
ஜாதிப்பழம் என்று கூறுவார்கள் அதிலிருந்து கிடைக்கும் வித்துக்கள்தான ஜாதிக்காய் என்பது, அதற்கு மேலே உள்ள தோல்தான் ஜாதிபத்திரி, நாம் மசாலாப்பொருட்களில் பயன்படுத்துவது.
இந்த ஜாதிக்காயை முக்கியமாக ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் நெய்யில் வறுத்து பொடித்து தினமும் இரவில் பாலில் கலந்து குடித்துவந்தால் நல்ல பலன் தரும். நரம்பு தளர்ச்சி தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்ய உதவுகிறது.
மூட்டுவலிக்கு ஜாதிக்காய்களை எடுத்து உரலில் சேர்த்து தட்டிவிட்டு, பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பொடியாக பொடித்து எடுத்துக்கொள்ளலாம்.
இதை மூட்டு வலிக்கு பயன்படுத்துவதற்கு, ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் ஜாதிக்காயை சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு வேப்பெண்ணெய் சேர்க்க வேண்டும்.
வேப்பெண்ணெய்தான் பயன்படுத்த வேண்டும். வேப்பெண்ணெயை பயன்படுத்தும்போது, ஜாதிக்காயின் பலன்கள் இரட்டிப்பாகும்.
இதை அடுப்பில் வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் மிதமாக சூடேற்ற வேண்டும். கொதிக்க விடக்கூடாது.
இதை வலி உள்ள இடங்களில் மிதமான சூட்டில் தேய்க்க வேண்டும். குறிப்பாக கை மூட்டு, கால் மூட்டு என வலி உள்ள இடங்களில் எங்கு வேண்டுமானாலும் தடவிக்கொள்ளலாம்.
நன்றாக மசாஜ் செய்துவிட்டு, ஒன்று முதல் இரண்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் கூட அப்படியே விட்டுவிடலாம்.
முதல் இரண்டு நாள் தடவும்போதே உங்களுக்கு நல்ல பலன் தரும். இதை ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை தேவைப்படும் வரை பயன்படுத்தினால் நாள்பட்ட மூட்டுவலியும் சரிசெய்யப்படும்.
இந்த ஜாதிக்காயை பசுப்பாலில் உரைத்து (அதற்காக பிரத்யேக உரைக்கல்கள் கிடைக்கும்) இரவு உறங்கச்செல்லும் முன் முகத்தில் தடவிவிட்டு, தூங்கி எழுந்து அடுத்தநாள் காலையில் பார்த்தால், முகப்பருக்களை அப்படியே மறைந்துபோகச்செய்யும்.
ஜாதிக்காயின் பொடியை வயோதிகத்தை தடுக்கும் அழகுசாதன பொருட்களில் பயன்படுத்துகிறது.
இந்தப்பவுடரை கற்றாழை ஜெல்லில் சேர்த்து கண்ணுக்கு கீழ் அல்லது உடலில் வேறு எங்கேனும் சுருக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளில் தடவினால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும். சருமம் பளபளப்படையும். இது ஒருவித எரிச்சலை தரும். இதை குறைவான அளவுதான் பயன்படுத்த வேண்டும். அதிகளவும் பயன்படுத்தக்கூடாது.
இதை பாலில் கலந்து பருகும்போது நரம்பு தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் குணப்படுத்தப்படும். மலக்குடலை சுத்தம் செய்யும்.
ஜாதிக்காய் மேலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதை உட்கொள்ளவும் முடியும். வெளி உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம். அதனால் இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
குழந்தைக்கு உரை மருந்து கொடுக்கும்போது இதை கட்டாயம் சேர்ப்பார்கள். இதில் உள்ள மருத்துவ குணங்களுக்காக இது புகழ்பெற்றது.
\சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்