Cooking Ideas - டீ சரியாகப்போடுவது முதல் பழத்தைப் பாதுகாப்பது வரை - பயனுள்ள சமையல் டிப்ஸ்
Cooking Ideas - டீ சரியாகப்போடுவது முதல் பழத்தைப் பாதுகாப்பது வரை - பயனுள்ள சமையல் டிப்ஸ் பற்றிப் பார்க்கலாம்.
Cooking Ideas - டீ சரியாகப்போடுவது முதல் பழத்தைப் பாதுகாப்பது வரை - பயனுள்ள சமையல் டிப்ஸ்
Cooking Ideas - நம் வீட்டில் சமைக்கும்போது பின்பற்றவேண்டிய பயனுள்ள சமையல் குறிப்புகள் பற்றிப் பார்க்கலாம்.
- நம் வீட்டில் சமையலில் பொரியல் செய்யும்போதும் கூட்டு செய்யும்போது உப்பு அதிகமாகிவிட்டால், யாருமே சாப்பிடமுடியாது. முழுவதும் வீண் ஆவதுபோல் தோன்றும். குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் உருளைக்கிழங்கி போடலாம். இதுவே பொரியலில் உப்பு அதிகமானால், ஒரு சின்ன மிக்ஸி ஜாரில், இரண்டு டீஸ்பூன் அளவு கடலை சேர்த்து இருக்கலாம். அதனை நன்கு பொடியாக்கிவிட்டு, பொரியலில் சேர்த்துவிடுங்கள். அதனை மூன்று நிமிடங்கள் அடுப்பில் வைத்துவிட்டு, கீழே இறக்கலாம். இதனால், உப்பு பேலன்ஸ் ஆகிடும்.
- குக்கரில் சாதம் சமைக்கும் போது, ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். பானையில் வடிப்பதுபோல் வராது. எனவே, குக்கரில் வைக்கும் அரிசி வெந்தபின், உதிரி உதிரியாக இருக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம். முதலில் குக்கரில் வைக்கப்போகும் அரிசியை ஒருமுறைக்கு இருமுறை நன்கு அலசிக்கொள்ளவும். அதன்பின், ஒருகிளாஸ் குளிர்ச்சியான நீரைப் போட்டு 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். மேலும், அதில் நான்கு பனிக்கட்டிகளைப்போட்டு 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். அதன்பின், வழக்கம்போல், அரிசியை குக்கரில்போட்டு வேக வைக்கவும். அதன்பின், அரிசி சாதம் உதிரி உதிரியாக இருக்கும்.
டீ எப்படி சரியாகப் போடுவது?
- சிலருக்கு டீ போடும்போது அதிகமாக டீத்தூள் செலவாகும். சிலருக்கு சரியாக நிறம் வராது. அப்படியிருப்பவர்கள், அரை கண்ணாடி பாட்டில் அளவிலான டீத்தூளில், ஒரு தேக்கரண்டி காபித்தூளை கலக்கி நன்கு மிக்ஸ் செய்யவும். இதன்பின், ஒரு தேக்கரண்டி எடுத்து டீ போட்டால், குறைவான டீத்தூளில் நன்கு சுவையான நிறமான தேநீரை குடிக்கலாம்.
- பருப்பில் வண்டு வருவதைத்தடுக்க சில முறைகளைப் பார்க்கலாம். பருப்பில் தேங்காய் சிரட்டையின் துண்டுகளை போட்டு வைக்கலாம்.இதன்மூலம், பருப்பில் இருக்கும் ஈரப்பதத்தை தேங்காய் சிரட்டை உறிஞ்சிவிடும். மேலும், வெள்ளைப்பூண்டின் நடுக்காம்பு மற்றும் தலைப்பகுதியை நன்கு வெயிலில் காயவைத்து அதன்பின், அந்த பருப்பில் போட்டுவைத்தால் வண்டுக்கள் மற்றும் பூச்சித்தொல்லை ஆகியவை இருக்காது.
பழத்தைப் பாதுகாப்பது எப்படி?
- பருப்பு வகைகளை உணவில் சேர்க்கும்போது வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு, வாயு மற்றும் செரிமானப் பிரச்னைகள் வரும். சிலருக்கு என்னதான் பூண்டு மற்றும் பெருங்காயம் சேர்த்தாலும் அது இருக்கலாம். இதில் இருந்து தப்ப, நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் துவரம்பருப்பையே எடுத்துக்கொண்டு நீரில் கொதிக்கவைக்கவும். அப்போது நீரின் மேல் வரும் நுரையை கரண்டியை வைத்து எடுக்கவும். அதன்பின், அந்த பருப்பினை சாம்பார் வைக்கவோ, இதரத் தேவைகளுக்கோ பயன்படுத்தலாம்.
- பாலை அடுப்பில் கொதிக்கவைக்கும்போது, நாம் வேறுவேலைகளில் இருந்தால், பால் பொங்கி சிந்தாமல் இருக்க ஒரு டிப்ஸைப் பார்க்கலாம். அதன்படி, பால் மெதுவாகபொங்கி வந்ததும், அதன்மேல், ஸ்டீலில் செய்யப்பட்ட வடிகட்டியைத்தூக்கி வைத்துவிட்டால், அது பாத்திரத்தில் இருந்து கீழே போகாது. இதன்மூலம் பாலைக் கீழே விடாமல் பாதுகாக்கலாம்.
- கிர்ணி மற்றும் தர்பூசணிப்பழத்தை வாங்கி பாதி பயன்படுத்தியபின், மீதியை எப்படி சேமிக்கலாம் என்பது குறித்துப்பார்க்கலாம். அதன்படி, அந்தப் பழத்தின் நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிடவேண்டும். அப்போது கிடைக்கும் ஜூஸை தனியாக வடிகட்டிக்கொண்டு எடுத்துக்கொள்ளலாம். அதன்பின், விதை நீக்கப்பட்ட கிர்ணி பழத்தையோ, தர்பூசணிப்பழத்தையோ அதன் மேல் பகுதியில் அதற்கேற்ற தட்டினை வைத்து, கவர்செய்து ஃபிரிட்ஜில் வைக்கலாம். இது ஒரு நாளுக்கு தாங்கும். இதுவே இரண்டு மூன்று நாட்களுக்கு பழம் வாடாமல் இருக்கவேண்டும் என்றால், அதன் மேல்பகுதியில் சிலிகான் அல்லது பிளாஸ்டிக் கவரை வைத்து விதை நீக்கப்பட்ட பழத்தினை மூடி கவர் செய்யலாம். இப்படி செய்யும்போது பழம் கெடாது. ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.