Cleaning Tips - பாத்திரக்கறைகளைப் போக்குவது எப்படி? - வீட்டில் பின்பற்றவேண்டிய பயனுள்ள சுத்தக்குறிப்புகள்-useful cleaning tips to follow in our home - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cleaning Tips - பாத்திரக்கறைகளைப் போக்குவது எப்படி? - வீட்டில் பின்பற்றவேண்டிய பயனுள்ள சுத்தக்குறிப்புகள்

Cleaning Tips - பாத்திரக்கறைகளைப் போக்குவது எப்படி? - வீட்டில் பின்பற்றவேண்டிய பயனுள்ள சுத்தக்குறிப்புகள்

Marimuthu M HT Tamil
Aug 26, 2024 10:46 PM IST

Cleaning Tips - பாத்திரக்கறைகளைப் போக்குவது எப்படி? - வீட்டில் பின்பற்றவேண்டிய பயனுள்ள சுத்தக்குறிப்புகள் சிலவற்றைக் காண்போம்.

Cleaning Tips - பாத்திரக்கறைகளைப் போக்குவது எப்படி? - வீட்டில் பின்பற்றவேண்டிய பயனுள்ள சுத்தக்குறிப்புகள்
Cleaning Tips - பாத்திரக்கறைகளைப் போக்குவது எப்படி? - வீட்டில் பின்பற்றவேண்டிய பயனுள்ள சுத்தக்குறிப்புகள்
  • நம் வீட்டில் இருக்கும்போது சமைக்கப்பயன்படுத்தும் ஸ்டவ்வில் இருக்கும் அழுக்குகளை நீக்க, டெட்டால் ஹேண்ட் வாஷ் எடுத்து, அந்த ஸ்டவ் தீப்பற்றும் பகுதிக்கு அருகில் இருக்கும், பாத்திரத்தின் உட்பகுதியில் ஊற்றி, நாம் பயன்படுத்திவிட்டு ஒதுக்கிய பிரஷ்ஷை வைத்து நன்கு தேய்க்க வேண்டும். அதன்பின், மூன்று நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு, கம்பிநார் வைத்து தேய்த்தால், அதில் இருக்கும் அழுக்குகள் வெளியேறிவிடும்.
  • நாம் சமைக்கும்போது பாத்திரத்தில் அடிபிடித்துவிட்டால் அதனை எளிதாக நீக்கலாம். என்னவென்றால், அந்த அடிப் பிடித்தப் பகுதியின் மேல் இரண்டு டம்ளர்கள் நீர் ஊற்றி அதனை சூடாக்க வேண்டும். சூடாக்கியபின், அடுப்பினை அணைத்துவிட்டு, அதில் ஒட்டியிருக்கும் பகுதியினை நன்கு கரண்டியை வைத்து சுரண்டி நீக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது அடிபிடித்த கசடு முற்றிலும் வெளியில் வந்துவிடும்.
  • மீன் சுத்தம் செய்தபின் வெகுநேரமாகியும் பலருக்கு மீன் வாடை அடிக்கும். அப்படியிருந்தால், மீன் சுத்தம் செய்வதற்குமுன், கையில் ஏதாவது ஒரு சில துளிகள் எண்ணெயினை எடுத்து அதன் உட்பகுதியில் தேய்த்துக்கொள்ளவேண்டும். அதன்பின் நாம் மீன் கழுவும் பணிகளைச் செய்ய வேண்டும். இறுதியாக ஒரு முறை மட்டும் சோப்பு போட்டுக்கழுவ வேண்டும். இவ்வாறு செய்யும்பட்சத்தில் மீன் கழுவியபோது நமது கைகளில் இருந்த துர்நாற்றம் மீண்டும் அடிப்பதில்லை.

பூச்சித்தொல்லைகளை சமாளிப்பது எப்படி?

  • வீட்டில் பாத்திரங்கள் கழுவியபின், கைகளில் கொஞ்சம் கரடுமுரடாக இருக்கும். அப்போது கையில் ஹேண்ட் வாஷ் உபயோகித்தபின், கைகளைக் கழுவிவிட்டால், கை இலகுவாகிவிடும்.
  • நம் சமையலறையில் இருக்கும் கிச்சனில் இருக்கும் ஸிங்கில் பூச்சிகள் தொல்லை அதிகம் இருந்தால், நீரை கொதிக்க வைத்து, அதில் உப்பு போட்டு ஊற்றிவிடவும். இவ்வாறு செய்யும்போது,பூச்சிகள் தொல்லை ஸிங்கில் இருக்காது. எண்ணெய்ப்பசையும் இருக்காது.
  • நம் பாத்ரூமில் உள்ள இரும்புக்குழாயில் இருக்கும் அழுக்குகளை நீக்க, டூத் பேஸ்ட்டை அதன்மேல் அப்ளைசெய்து, மூன்று நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் அதை கம்பிநார் கொண்டு அழுத்தி தேய்த்து கழுவவும், இதனால் அந்த குழாய் பளபளப்பாக மாறிவிடும்.
  • வீட்டை சுத்தம் செய்யும்போது ஒட்டடையையும் உடனே எடுத்துவிட்டால் வீடு பளீச்சென்று இருக்கும். பூச்சிகள் தொல்லை இருக்காது.
  • இரவில் சிறு பூச்சிகளின் தொல்லை அதிகம் இருந்தால், வீட்டில் ஒரு ஓரத்தில் மின்சாரம் அதிகம் பிடிக்காத, சிஎஃப்சி பல்புகளைப் பொருத்த வேண்டும். இதனால் ஓரளவுக்கு பூச்சிகளின் தொல்லையைக் குறைக்கலாம்.

பாத்திரக்கறைகளைப் போக்குவது எப்படி?

  • சமைக்கும்போது அடுப்பு மேடையில் சில நேரம் கரண்டியை வைப்போம். இதனால் துடைக்கும்போது கொஞ்சம் கடினமாக இருக்கும். இந்தப் பிரச்னையைச் சமாளிக்க, அடுப்பு மேடையின் நடுவில் ஒரு தட்டினை வைத்து, அதில் கரண்டியை வைக்கலாம். இவ்வாறு செய்வதன்மூலம், கறைப் பிரச்னையை உருவாக்காமல் தடுக்கலாம்.
  • நம் வீட்டில் வடை சுடும்போது மீதமாகும் எண்ணெய்யை ஒரு ஜாரில் ஊற்றி வைக்கவேண்டும். இதை சாதாரணமாக சமையலறையின் மேல்பகுதியில் வைத்து ஊற்றும்போது, ஜாரின் கீழே எண்ணெய்ப் படியும். அதற்குப் பதிலாக, ஒரு தட்டினை வைத்து, அதன் மேல், ஜாரினை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். இப்படி செய்வதால் கிச்சனை எளிதாக கிளீன் செய்யலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.