Rose Petals for Skin: பளபளப்பான, பிரகாசமான சருமம் வேண்டுமா? ரோஜா இதழ்களை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள்
ரோஸ் வாட்டர் உங்கள் சருமத்தில் சில மேஜிக்குகளை வெளிப்படுத்தும். ரோஜா இதழ்கள் மூலம் மேற்கொள்ளும் சரும பராமரிப்பையும் தெரிந்துகொள்ளுங்கள்.
விஷ்ணு பகவானின் பிரியமான பூவாகவும், காதலை வெளிப்படுத்தும் சின்னமாகவும் திகழும் ரோஜா அதன் நிறம், அற்புதமான மனம் போன்றவற்றால் பலராலும் கவரும் மலராக திகழ்கிறது. இந்த மலரால் சருமத்துக்கு எக்கச்சக்கமான நன்மைகள் கிடைக்கின்றன.
காலத்தை தாண்டி நிலைத்து நிற்கும் அழகு பொருள் என ரோஜா மலர் பற்றி வரலாறு கூறுகிறது. , ரோஜா மலரின் அழகான தோற்றம் மட்டுமல்லாமல், சருமத்துக்கு அவை ஏற்படுத்தும் அற்புதங்கள் மூலமாகவும் முகலாய ராணியான நூர் ஜகான் அந்த மலர் மீது தனியொரு ஈடுபாடு கொண்டார். இதனால் தனக்கென தனித்துவமாக ரோஸ் வாட்டர் தயார் செய்து தனது அழகை பேனி பாதுகாத்தார்.
ரோஜா இதழ்கள் சரும அழகை பேனி பாதுகாக்க எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி பிரபல ஆயுர்வேத நிபுணர்களின் டிப்ஸ்களை பார்க்கலாம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ரோஜா இதழ்கள் ஆயுர்வேதத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரோஜாக்களில் காணப்படும் இயற்கை எண்ணெய்கள் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.
ரோஜா இதழ்களில் உள்ள சர்க்கரைகள், உணர்திறன் மிக்க சருமம் உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பயனளிக்கும். ரோஸ் ஆயிலில் சிட்ரோனெல்லோல், யூஜெனால், ஃபார்னெசோல் மற்றும் பல கூறுகள் உள்ளன, அவை உங்கள் தோல் மற்றும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பேனி காக்கிறது.
ரோஜா இதழ்கள் முகப்பருவை தணிக்கும் பேஸ்பேக்:
ரோஜாக்களில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை ஏற்படுவதை தடுக்கிறது. சருமம் தொடர்பான தொற்றுகளையும் தடுக்கிறது. முகப்பருவால் ஏற்படும் சிவப்பிலிருந்து உங்கள் சருமத்தை மென்மையாக்கும் வரை, ரோஜா இதழ்க
டாபிக்ஸ்