Urinary Infections: பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று - செய்யவேண்டியவை
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Urinary Infections: பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று - செய்யவேண்டியவை

Urinary Infections: பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று - செய்யவேண்டியவை

Marimuthu M HT Tamil Published Jan 05, 2024 05:19 PM IST
Marimuthu M HT Tamil
Published Jan 05, 2024 05:19 PM IST

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு சில வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்துக் காண்போம்.

Urinary Infections: பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று - செய்யவேண்டியவை
Urinary Infections: பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று - செய்யவேண்டியவை

அவை சிறுநீர் பாதை நோய்த்தொற்றை (யுடிஐ) ஏற்படுத்தும். சிறுநீர்ப் பாதை தொற்று மிகவும் பொதுவானதாக இருப்பதால், இது பிறப்புறுப்புப் பகுதியில் பாதிப்பினை உண்டாக்கலாம். 

யசோதா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தின் மூத்த மருத்துவர் கௌரி அகர்வால், நமது ஊடகத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "பெண்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று அதிகம் ஏற்படுகிறது. ஏனெனில் அவர்களின் சிறுநீர்க்குழாய்கள் குறுகியதாகவும் மலக்குடலுக்கு நெருக்கமாகவும் இருப்பதால் பாக்டீரியா நுழைவை எளிதாக்குகிறது. கூடுதலாக, கர்ப்பம், வயது முதிர்வு, மாதவிடாய் நிறுத்தம் மற்றும் மோசமான பிறப்புறுப்பு சுகாதாரம் ஆகியவை சிறுநீர் பாதை நோய்த்தொற்று அபாயத்தை அதிகரிக்கின்றன.

சிறுநீர் பாதை நோய்த்தொற்று அறிகுறிகள் பின்வருமாறு:

  • சிறுநீர் கழிக்கும்போது எரியும் உணர்வு
  • உங்கள் சிறுநீர்ப்பை காலியாக இருக்கும்போது கூட அவசரமாக சிறுநீர் கழிக்க தூண்டப்படுதல்.
  • காய்ச்சல், குளிர், குமட்டல் அல்லது வாந்தி
  • சிறுநீரில் ஒரு விசித்திரமான, கடுமையான வாசனை
  • கீழ் முதுகில் வலி மற்றும் அழுத்தம்
  • மங்களான நிறத்தில் சிறுநீர் அல்லது இரத்தம் வெளியேறுவது ஆகியவை, சிறுநீர் பாதை நோய்த்தொற்றின் அறிகுறிகளாகும். 

சிறுநீர் பாதை நோய்த்தொற்று அறிகுறிகளின் அடிப்படையில், மருத்துவர் சிறுநீர் பகுப்பாய்வினை கேட்பார். சோதனைகளின் முடிவுகள் சிகிச்சையின் போக்கை தீர்மானிக்கும். சிறுநீர் பாதை நோய்த்தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளில் சல்போனமைடுகள், அமோக்ஸிசிலின், செபலோஸ்போரின்கள் மற்றும் டாக்ஸிசைக்ளின் ஆகியவை மாத்திரைகளில் அடங்கும். 

சில வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்வது குறித்து மருத்துவர் அளித்த பரிந்துரைகள்:

  • குடிநீர் குடிப்பதை வழக்கம் ஆக்கவும்: சிறுநீர் பாதையில் இருந்து பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவ தண்ணீர் சிறந்த வழி. தினமும் குறைந்தது 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கிறது. இதனால் உங்கள் சிறுநீர்ப்பை உங்கள் உடலில் இருந்து கழிவுகளை அடிக்கடி அகற்றிவிடும்.
  • வசதியான ஆடைகளை அணியுங்கள்: இறுக்கமான பொருத்தமான ஆடைகள் நம் பிறப்புறுப்புகளைச் சுற்றியுள்ள பகுதியை மிகவும் ஈரப்பதமாக்குகின்றன. இது நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்திற்கு உதவும் சரியான சூழல். உங்கள் பிறப்புறுப்பினைச் சுற்றி, ஈரப்பதம் குவிவதைத் தடுக்க பருத்தி உள்ளாடைகளை அணிய விரும்புங்கள்.
  • சுகாதாரமான உடலுறவைத் தேர்ந்தெடுங்கள்: உடலுறவுக்கு முன்னும் பின்னும் சுகாதார பழக்கவழக்கங்கள் சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகளின் அபாயத்தை தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக, உங்கள் சிறுநீர்க்குழாயில் உள்ள எந்தவொரு பாக்டீரியாவையும் வெளியேற்ற உடலுறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிக்க முயற்சிக்கவும். உங்களால் சிறுநீர் கழிக்க முடியாவிட்டால், நிச்சயமாக பிறப்புறுப்பினை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். நீங்கள் பிறப்புறுப்பில் எண்ணெயைப் பயன்படுத்தினால், அது எளிதில் ஊடுருவ முயற்சிசெய்யும். முடிந்தவரை சுகாதாரத்தைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். மேலும், பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளுக்கு வரும்போது, நீங்கள் ஒரு நிபுணரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.