Uric Acid : எச்சரிக்கை மக்களே! இந்த காய்கறிகள் உங்கள் உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கிறது!
Uric Acid : எச்சரிக்கை மக்களே, இந்த காய்கறிகள் உங்கள் உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கிறது. எனவே அவற்றை எடுத்துக்கொள்ளும்போது எச்சரிக்கை தேவை.
யூரிக் அமிலம்
உங்கள் உடலில் அதிகம் யூரிக் அமிலம் இருந்தால், அது ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படும். நீங்கள் சாப்பிடும் உணவு மற்றும் பானங்களில் உள்ள பியூரின்கள் என்ற வேதிப்பொருட்களை உடைக்கும்போது உங்கள் உடலில் உருவாகும் கழிவுப்பொருள் ஆகும்.
பொரும்பாலான யூரிக் அமிலத்தை உங்கள் ரத்தமே கரைத்துவிடும். அதை உங்கள் சிறுநீரத்திற்கு கொண்டு சென்று நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, வெளியேற்றிவிடும். ஆனால் உங்கள் உடலில் அதிகளவில் யூரிக் அமிலம் இருந்தால், அப்போது ஹைப்பர்யூரிசிமியா ஏற்படுகிறது.
இந்த அதிகப்படியாக யூரிக் அமிலம் உங்கள் உடலில் ஒன்றுசேர்ந்து கற்களாக மாறி, உங்கள் மூட்டுகளில் ஆரித்ரிட்டிஸ் நோயை ஏற்படுத்துகிறது. உங்கள் சிறுநீரகத்தில் சிறுநீரக கற்களையும் ஏற்படுத்துகிறது.
இந்நோயை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். இந்நோய் ஏற்பட்டால் நீங்கள் அதிகளவு தண்ணீர் குடிக்கவேண்டும். மருந்து மாத்திரைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். 5ல் ஒருவருக்கு இந்நோய் ஆபத்து உள்ளது.
அறிகுறிகள்
உங்கள் ஹைப்பர்சிமீயா உள்ளது எனில, அது உங்கள் வலிகளைக் கொடுத்து, உங்கள் உடல் முழுவதிலும் சேதத்தை ஏற்படுத்தும்.
உங்கள் எலும்புகள், மூட்டுகள், சவ்வுகளில் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும்.
சிறுநீரக நோய், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ஃபேட்டி லிவர் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்கள் என அனைத்தை நோய்களையும் ஏற்படுத்தும்.
ஹைப்பர்யூரிசிமியா ஏற்பட்டால், பெரும்பாலும், அறிகுறிகள் தோன்றுவதில்லை. பெரும்பாலும், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாதவரை பெரும்பாலானோருக்கு இது தெரிவதில்லை.
மூட்டுகளில் கடும் வலி, சிவத்தல், இறுக்கம், வீக்கம், கொழகொழப்பு, நெருப்பு போன்ற சூரி ஆகியவை ஏற்படும்.
சிறுநீரகத்தில் கற்கள் தோன்றினால் ஏற்படும் அறிகுறிகள்
பின்புறத்தில் வலி
வாந்தி
காய்ச்சல்
சிறுநீரில் ரத்தம்
சிறுநீர் கழிக்கும்போது வலி
சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமம்
அடிக்கடி சிறுநீர் கழிப்பது
சிறுநீரில் துர்நாற்றம்
உடலில் அதிக யூரிக் அமிலத்தை கொண்டுவரும் உணவுகள்
சிவப்பு இறைச்சி
ஈரல்
கால் உணவுகள்
ஃப்ரூக்டோஸ் கார்ன் சிரப் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள்
மது
பாதிப்பு ஆபத்துக்கள்
உடல் பருமன்
ஆண் குழந்தைக்கு பிறக்கும்போதே ஏற்படும்
மதுவை வழக்கமாக எடுத்துக்கொள்ளும்போது
அதிக ப்யூரின்கள் நிறைந்த உணவு உட்கொள்ளும்போது
மரபணுக்கள்
யூரிக் அமிலம் உடலில் அதிக அளவு உள்ளவர்கள் மாதுளை மற்றும் வெள்ளிரி பழத்தின் சாறை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
உங்கள் உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் இந்த காய்கறிகளை மட்டும் உணவில் அளவாக எடுத்துக்கொள்ளவேண்டும். யூரிக் அமில பிரச்னைகள் உள்ளவர்கள் இவற்றை முற்றிலும் தவிர்த்தல் நலம்.
யூரிக் அமில பிரச்னைகளை சமாளிக்க நீங்கள் சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளவேண்டும். உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகம் சுரக்கச்செய்யும் காய்கறிகள் இவைதான். எனவே கவனம் தேவை.
கத்தரிக்காய்
கத்தரிக்காயில் அதிகளவில் பியூரின்கள் உள்ளது. இது அதிக யூரிக் அமிலத்தால் ஏற்படும் வலிகளை அதிகரிக்கும்.
காளான்
காளானில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம்தான். அதற்காக அதை அதிகம் எடுத்துக்கொண்டால் அது உங்கள் உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.
பச்சை பட்டாணி
பட்டாணியிலும் பியூரின்கள் உள்ளன, இதை ஏற்கனவே உடலில் யூரிக் அமிலப் பிரச்னைகள் உள்ளவர்கள் எடுத்துக்கொண்டால், அதை அதிகரிக்கச் செய்யும்.
ப்ராக்கோலி
ப்ராக்கோலி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு காய்ததான், அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. என்றாலும், இதை அதிகம் எடுத்துக்கொண்டால் அது உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கச் செய்யும்.
கீரை
கீரையில் ஃபோலேட் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால், அதை அதிகம் உட்கொள்ளும்போது, அதில் உள்ள ப்யூரின்கள் யூரிக் அமிலத்தை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே ஏற்கனவே யூரிக் அமிலப் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் இந்த காய்கறிகளை எச்சரிக்கையுடன் சாப்பிடவேண்டும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்