Uric Acid Home Remedy : யூரிக் அமிலப்பிரச்னையால் அவதியா? இதோ இந்த ஒரு ஜூஸ் மட்டும் போதும்!
Uric Acid Home Remedy : யூரிக் அமிலப்பிரச்னையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இந்த இரண்டு பொருட்களை மட்டும் வைத்து, இந்த ஒரு ஜூஸ் மட்டும் போதும் தயாரித்து பருகுங்கள் போதும்.

Uric Acid Home Remedy : யூரிக் அமிலப்பிரச்னையால் அவதியா? இதோ இந்த ஒரு ஜூஸ் மட்டும் போதும்! (care hospital)
யூரிக் அமிலம்
உங்கள் உடலில் அதிகம் யூரிக் அமிலம் இருந்தால், அது ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படும். நீங்கள் சாப்பிடும் உணவு மற்றும் பானங்களில் உள்ள பியூரின்கள் என்ற வேதிப்பொருட்களை உடைக்கும்போது உங்கள் உடலில் உருவாகும் கழிவுப்பொருள் ஆகும்.
பொரும்பாலான யூரிக் அமிலத்தை உங்கள் ரத்தமே கரைத்துவிடும். அதை உங்கள் சிறுநீரத்திற்கு கொண்டு சென்று நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, வெளியேற்றிவிடும். ஆனால் உங்கள் உடலில் அதிகளவில் யூரிக் அமிலம் இருந்தால், அப்போது ஹைப்பர்யூரிசிமியா ஏற்படுகிறது.
இந்த அதிகப்படியாக யூரிக் அமிலம் உங்கள் உடலில் ஒன்றுசேர்ந்து கற்களாக மாறி, உங்கள் மூட்டுகளில் ஆரித்ரிட்டிஸ் நோயை ஏற்படுத்துகிறது. உங்கள் சிறுநீரகத்தில் சிறுநீரக கற்களையும் ஏற்படுத்துகிறது.