Urad Dhal Milk : உடலை உறுதியாக்கும் உளுந்து பால்; காலை உணவுக்கே சிறந்தது! செய்வது எப்படி எனப்பாருங்கள்!
Urad Milk : உடலை உறுதியாக்கும் உளுந்து பால், காலை உணவுக்கே சிறந்தது, இதைச்செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தியாவில் உளுந்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியமாகக் கருதப்படுகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகள் இதை கட்டாயம் எடுத்துக்கொள்ள வைக்கிறது. இதை உணவில் சாப்பிடலாம். ஆயுர்வேத மருந்துகளிலும் கலக்கப்படுகிறது. இதில் எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உளுந்தை கருப்பு உளுந்து மற்றும் தோல் நீக்கிய வெள்ளை உளுந்து என இரண்டு வகைகளிலும் சாப்பிடலாம். 100 கிராம் உளுந்தில் 1.6 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. 59 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. 25 கிராம் புரதச்சத்து, 0.93 கிராம் பொட்டாசியம், 0.38 கிராம் சோடியம் மற்றும் 341 கலோரிகள் உள்ளது. இதில் கூடுதலாக கால்சியம், இரும்பு, வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. உளுந்தில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.
உளுந்தின் நன்மைகள்
உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கிறது
உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகவும், உங்களை மகிழ்ச்சியாகவும் வைக்கிறது.
உளுந்து, நீரிழிவு நோயின் நண்பனாக உள்ளது.
தலைமுடிக்கு பளபளப்பை கொடுக்கிறது.
உளுந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
உங்கள் எலும்பை உறுதியாக்குகிறது.
உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கிறது.
உங்கள் சருமத்துக்கு நல்லது
ஆண் இனப்பெருக்க உறுப்புக்கு உதவுகிறது
உளுந்தில் பலவகை உணவுகள் செய்யலாம். குறிப்பாக நாம் தினமும் உண்ணும் இட்லி, தோசையில் அதிகமாக பயன்படுத்தப்படுவது உளுந்து. மேலும் இதில் லட்டு, கஞ்சி என பல வகை உணவுகளும் செய்யலாம். அனைத்து வகையிலும் உளுந்தை சேர்த்து ஊட்டம் பெறுங்கள். இன்று அதில் இருந்து உளுந்தம் பால் தயாரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
உளுந்து – கால் டம்ளர்
பால் அல்லது தேங்காய்ப்பால் – ஒரு டம்ளர்
நாட்டுச்சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை
ஒரு கப் உளுந்தை நன்றாக அலசி அரை மணிநேரம் ஊறவைத்து, அதை குக்கரில் சேர்த்து வேகவைக்கவேண்டும். 6 விசில் வரை விட்டு வேகவைத்தால்தான் நன்றாக வெந்து வரும்.
பின்னர் அதை நன்றாக ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அந்த மாவை எடுத்து அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவேண்டும். பின்னர் பால் சேர்த்து கலந்து கொதிக்க விடவேண்டும்.
இதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து இறக்கினால், சூப்பர் சுவையில் உளுந்து பால் தயார். இதை தினமும் பருகினால் உங்கள் உடலுக்கு அது எண்ணற்ற நன்மைகளைத்தரும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இடுப்பு வலியைப்போக்கும்.
மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும்.
நரம்பு மண்டலம் வலிமை பெறும். மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் குணமாகும். புரதச்சத்துக்கள் நிறைந்தது. இதை தினமுமே ஒரு வேளை டீ அல்லது காபிக்கு பதில் எடுத்துக்கொள்ளலாம் அல்லது காலை உணவாகவே சாப்பிடலாம். இதனால் உடலுக்கு மேலும் சில நன்மைகளும் கிடைக்கின்றன.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்