தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  How To Eat Cucumber: ‘வெள்ளரிக்காயை இப்படி சாப்பிடக்கூடாது!’ எச்சரிக்கும் மருத்துவர்கள்! இத பாலோ பண்ணுங்க!

How to eat cucumber: ‘வெள்ளரிக்காயை இப்படி சாப்பிடக்கூடாது!’ எச்சரிக்கும் மருத்துவர்கள்! இத பாலோ பண்ணுங்க!

Kathiravan V HT Tamil
Apr 15, 2024 11:27 AM IST

”100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 15 கலோரிகள் மட்டுமே உள்ளது. 3 முதல் 3.5 கிராம் வரையிலான மாவு சத்தும். 0.5 கிராம் முதல் 1 கிராம் வரை நார்ச்சத்தும், வைட்டமின் கே 16 மில்லி கிராமும், வைட்டமின் சி 3 மில்லி கிராமும் உள்ளது. மேலும் 60 முதல் 70 சதவீதம் நீர்ச்சத்துக்கள் உள்ளது”

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய்

ட்ரெண்டிங் செய்திகள்

வெள்ளரிக்காய் சாப்பிடும் போது செய்யும் சில தவறுகளால் கிடக்கும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைப்பது இல்லை. 

வெள்ளரிக்காயின் தொடக்கம் இந்தியாதான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இமாலய பகுதிகளில் முதல் முதலாக தோன்றிய வெள்ளரிக்காய் பிற்காலங்களில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 15 கலோரிகள் மட்டுமே உள்ளது. 3 முதல் 3.5 கிராம் வரையிலான மாவு சத்தும். 0.5 கிராம் முதல் 1 கிராம் வரை நார்ச்சத்தும், வைட்டமின் கே 16 மில்லி கிராமும், வைட்டமின் சி 3 மில்லி கிராமும் உள்ளது. மேலும் 60 முதல் 70 சதவீதம் நீர்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளதால் கோடை காலத்தில் வெள்ளரிக்காய் எடுத்து கொள்வதன் மூலம் சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைவாக கிடைக்கும். 

வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் கே சத்து நிறைந்து உள்ளதால் 2 அல்லது 3 வெள்ளரிக்காய் சாப்பிட்டாலே நமது ரத்தம் உறைவதற்கான வைட்டமின் கே சத்துக்கள் கிடைத்துவிடும். 

இரத்தக்குழாய்களில் ரத்தம் உறையாமல் இருக்க மருந்துகளை எடுத்து கொண்டு இருப்பவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 

வெள்ளரிக்காய் சாப்பிடும்போது நிறைய பேர் செய்யும் தவறு என்ன வென்றால், பலரும் நாட்டு வெள்ளரிக்காயை தவிர்த்துவிட்டு, ஹைப்பிரிட் வெள்ளரிக்காயை சாப்பிடுகின்றனர். இதில் கசப்புத்தன்மை உள்ளதாலும், தோல் கெட்டியாக உள்ளதாலும் தோலை சீவிய பின்னர் சாப்பிடுகின்றனர். 

தோலை சீவுவதால் பெரும்பாலான வைட்டமின் சத்துக்கள் தோலோடு போய்விடுகின்றது. இதனால் வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் கிடைக்காது. 

வெள்ளரிக்காயில் உள்ள குக்குர்பிட் ஆசின் என்ற சத்து உடலில் உள்ள உள்காயங்களை ஆற்றும் தன்மை கொண்டது.  எனவே வெள்ளரிக்காயை தோலோடு சாப்பிடும் போதுதான் முழு பலன்களை அடைய முடியும். 

வெள்ளரிகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன:

வெள்ளரி காய்களில் சுமார் 95% நீர்சத்துக்களை கொண்டு இருப்பதால் வெப்பமான காலநிலைகளுக்கும், அல்லது உடற்பயிற்சிக்கும் சாப்பிடக்கூடிய முக்கிய உணவுகளில் ஒன்றாக உள்ளது. 

கலோரிகள் குறைவாக இருந்தாலும், வெள்ளரிகளில் வைட்டமின் கே, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடல் சரியாக செயல்பட உதவுகின்றன.

வெள்ளரி காய்களில் பீட்டா கரோட்டின் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

வெள்ளரிக்காயில் உள்ள அதிக நீர் மற்றும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலைத் தடுக்கும். கூடுதலாக, வெள்ளரிகளில் "குக்குர்பிடாசின்" என்ற கலவை உள்ளது, இது  மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. 

வெள்ளரிகளில் கலோரிகள் குறைவாகவும், நீர் மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், அவை உங்களை நிறைவாகவும் திருப்தியாகவும் உணர உதவும், எடை மேலாண்மை அல்லது எடை குறைப்பு செய்ய விரும்புபவர்களின் முதன்மை தேர்வாக வெள்ளரிக்காய் உள்ளது. 

ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியான பண்புகளை கொண்டு உள்ளதல் வெள்ளரிக்காய்களை சருமத்தில் தடவுவது எரிச்சலை தணிக்கவும், வீக்கத்தை குறைக்கவும், சருமத்தை ஈரப்பதமாக்கவும் உதவுகிறது.

வெள்ளரியில் உள்ள பொட்டாசியம் உள்ளடக்கம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு அவசியம். கூடுதலாக, வெள்ளரிகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன.

வெள்ளரிகளில் வைட்டமின் கே உள்ளது, இது எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.

உங்கள் உணவில் வெள்ளரிகளைச் சேர்ப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும் வழியாகும். 

WhatsApp channel

டாபிக்ஸ்