Uludodharai : இப்படி ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி நீங்கள் கேட்டிருக்கவே மாட்டீர்கள்! உளுந்தோதரை சாதம் செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Uludodharai : இப்படி ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி நீங்கள் கேட்டிருக்கவே மாட்டீர்கள்! உளுந்தோதரை சாதம் செய்வது எப்படி?

Uludodharai : இப்படி ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி நீங்கள் கேட்டிருக்கவே மாட்டீர்கள்! உளுந்தோதரை சாதம் செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Published Jul 25, 2024 05:21 PM IST

Uludodharai : இப்படி ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள். உடலுக்கு ஊட்டம் தரும் உளுந்தோதரை சாதம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Uludodharai : இப்படி ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி நீங்கள் கேட்டிருக்கவே மாட்டீர்கள்! உளுந்தோதரை சாதம் செய்வது எப்படி?
Uludodharai : இப்படி ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி நீங்கள் கேட்டிருக்கவே மாட்டீர்கள்! உளுந்தோதரை சாதம் செய்வது எப்படி?

அதே நேரத்தில் லன்ச் பாக்ஸ் ரெசிபியும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அந்த வகையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்த உளுந்தோதரை சாதம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

உளுந்து பொடி செய்ய

உளந்து – கால் கப்

வர மிளகாய் – 2

மிளகு – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

உளுந்தோதரை சாதம் செய்ய தேவையான பொருட்கள்

வேகவைத்து வடித்த சாதம் – ஒரு கப்

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

வேர்க்கடலை – ஒரு கைப்பிடியளவு

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

முந்திரி பருப்பு – 10

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் உளுந்து, மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து வறுக்கவேண்டும். உளுந்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும்.

இதை ஆறவைத்து கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவேண்டும். இதை நீங்கள் ஒரு மாதம் வரை வைத்துக்கொள்ளலாம். காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்து, வேர்க்கடலை, முந்திரி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவேண்டும். 

அனைத்து பொரிந்தவுடன், துருவிய தேங்காய் மற்றும் வறுத்து அரைத்து வைத்துள்ள உளுந்து மசாலாப் பொடி சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். கடைசியாக வேக வைத்த சாதம் சேர்த்து பிரட்டி எடுத்தால் சூப்பர் சுவையான உளுந்தோதரை சாதம் தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள ஏதேனும் ஒரு காயை வறுத்து அல்லது பொரியல் செய்துகொள்ளலாம். பெரும்பாலும் இதற்கு உறுகாய், அப்பளமே போதுமான சைட்டிஷ்தான். ஆனால் இவற்றை செய்துகொள்வதன் மூலம் கூடுதல் சத்துக்கள் கிடைக்கும்.

இதை லன்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிட்டால், குழந்தைகள் மிச்சம் வைக்காமல் கட்டாயம் காலி செய்துவிட்டு வருவார்கள் என்பது உறுதி. பெரியவர்களுக்கும் பிடித்த சாதமாக இருக்கும். மேலும் பெண்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சாதமாக உளுந்தோதரை சாதம் உள்ளது.

உளுந்தின் நன்மைகள்

சர்க்கரை நோயாளிகள் கருப்பு உளுந்தை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு முறையாக பராமரிக்கப்படும்.

கருப்பு உளுந்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுகிறது.

கருப்பு உளுந்து சருமத்துக்கு நல்லது.

கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்து போராட உதவும்.

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.

செரிமானத்துக்கு நல்லது. குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

மலச்சிக்கலுக்கு நல்லது. வயிற்றுப்போக்கை எதிர்த்து போராட உதவுகிறது.

உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை வழங்குகிறது.

உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது.

எலும்புகளை வலுவாக்குகிறது.

மூட்டு வலி மற்றும் எலும்பு பிரச்னைகளை தடுக்கிறது.

உடலில் இரும்புச்சத்தை அதிகப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நல்லது.

உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.