இந்த கால பெண் குழந்தைகளுக்கு ஏற்ற அல்ட்ரா மார்டன் பெயர்கள்; உங்கள் தேவதைகளுக்கு தேர்ந்தெடுங்கள்!
பெண் குழந்தைகளுக்கு ஏற்ற அல்ட்ரா மார்டன் பெயர்கள் இதோஸ
உங்கள் வீட்டு தேவதைகளுக்கு ஏற்ற பெயர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இந்த காலத்துக்கு ஏற்ற மார்டன் பெயர்கள் இவை. இந்தப்பெயர்கள் உங்கள் குழந்தைகளுக்கு தனித்துவத்தைக் கொடுக்கும். இந்த காலத்தில் குழந்தைகளுக்கு பழைய பெயர்கள் மற்றும் மார்டன் பெயர்களை கலந்து தேர்ந்தெடுத்து வைக்கிறார்கள். இந்தப்பெயர்கள் அவர்களுக்கு தனித்தன்மையைக் கொடுப்பவையாகும். இந்தப் பெயர்கள் கலாச்சாரத்தில் போற்றப்படும் பெயர்களாகும். இந்தப்பெயர்கள் உங்கள் வீட்டில் நேர்மறை எண்ணங்களைக் கொண்டு வருகிறது. இந்தப்பெயர்கள் உங்கள் குழந்தைகளுக்கு தனித்தன்மையைக் கொடுக்கின்றன. மாறிவரும் உலகத்துக்கு ஏற்ற மார்டன் பெயர்களாக இந்தப்பெயர்கள் உள்ளன.
யுக்தா
யுக்தா என்பது சமஸ்கிருத வார்த்தை. திறமையான அல்லது கவர்ந்திழுக்கக் கூடிய எனும் பொருளைத் தரக்கூடிய பெயர்களாகும். இந்தப்பெயரைக் கொண்ட நபர்கள் கட்டாயம் திறமை சாலிகளாகவும், அறிவார்ந்தவர்களாகவும், வாழ்க்கையில் நடுநிலையை வகிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்களிடம் நல்லிணக்கம் இருக்கும். இந்தப்பெயரை உங்கள் பெண் குழந்தைகளுக்கு சூட்டினால் அவர்கள் கட்டாயம் திறமையாளர்களாக எதிர்காலத்தில் ஜொலிப்பார்கள்.
விரிதி
விரிதி என்றால் செல்வம் மற்றும் வளர்ச்சி என்று பொருள். அதிகப்படியான அல்லது நேர்மறை எண்ணங்கள் என்பதையும் இந்தப்பெயர் குறிப்பிடுகிறது. தங்கள் குழந்தைகள் வெற்றியாளர்களாகவும், வாழ்வில் சிறந்து விளங்கவும் வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்றது. இந்தப்பெயர் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க உதவும்.
சாலாக்
சாலான் என்றால் ஒளிரும் தன்மை கொண்ட என்று பொருள். இது அழகு, அறிவு என்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது. இந்தப்பெயரும் தனித்தன்மையான பெயர். இது வாழ்வில் ஜொலிக்கும் நபர் என்ற பொருளைத் தருகிறது.
வனிகா
வனிகா என்றால் வனம் மற்றும் இளமை என்று பொருள். இது இயற்கையின் அழகையும், அதன் தூய்மை குணத்தையும் குறிக்கும் பெயராகும். இந்தப்பெயரை உங்கள் வாழ்க்கையும் தொடர்புபடுத்திக்கொள்ளுங்கள். இதற்கு எளிமையான மற்றும் ஆற்றல் கொண்ட நபர் என்று பொருள் உள்ளது.
உனதி
உனதி என்றால், வளர்ச்சி, முன்னேற்றம், மேலெழும்புதல் என்று பொருள். இந்தப்பெயர் வளர்ச்சியை எதிர்நோக்கும் என்பதைக் குறிக்கிறது. எடுத்த காரியங்களில் இவர்கள் முன்னேறிக்கொண்டே இருப்பார்கள் என்பதை இந்தப்பெயர் காட்டுகிறது. இந்தப்பெயர் உங்கள் வீட்டு தேவதைகளுக்கு ஏற்ற பெயர்.
சாச்சி
சாச்சி என்றால் உண்மை மற்றும் கருணை என்று பொருள். இந்தப்பெயர் எந்த காலத்துக்கும் ஏற்ற பெயர். நேர்மையை நம்புபவர் மற்றும் அவரது வாழ்க்கை பயணத்தில் அவர்கள் கருணையை கொண்டிருப்பார் என்பதை இந்தப்பெயர் குறிப்பிடுகிறது.
நிஷ்கா
நிஷ்கா என்றால் தூய்மையான மற்றும் நேர்மையான என்று பொருள். இதற்கு தெளிவு மற்றும் நேர்மையான என்று பொருள். இந்தப்பெயரைக் கொண்ட குழந்தை, உண்மை அன்பு கொண்டிருப்பார்கள். கருணை நிறைந்தவர்களாக இருப்பார்கள். இது மிகவும் மதிப்புமிக்க பெயராகும்.
லாவண்யா
லாவண்யா என்றால் அழகு மற்றும் கருணை என்று பொருள். இந்த வார்த்தை கருணை மற்றும் நேர்த்தியான என்ற அர்த்தங்களைக் கொடுக்கிறது. இந்தப்பெயரும் எந்த காலத்துக்கும் ஏற்ற பெயர். இது உள்புற அழகு என்பதைக் குறிக்கும்.
லைலா
லைலா என்றால் இரவு நிலவு ஒளி என்று பொருள். அமைதியான, மவுனம் மற்றும் பிரகாசமான என்று பொருள். இது அமைதியை விரும்பும் நபருக்கு ஏற்ற பெயர். இந்தப்பெயர் ஒளிமயமான என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்