Ulcer Remedy : அல்சரைப் போக்கும் அருமருந்து; சமையலறையில் உள்ள இரண்டு பொருட்கள் மட்டும் போதும் – 2 டிப்ஸ்!
Ulcer Remedy : அல்சரைப் போக்கும் அருமருந்தாக நமது வீட்டு சமையலறையிர் உள்ள விரலி மஞ்சளும், சமையலறையில் உள்ள இரண்டு பொருட்கள் மட்டும் போதும். உங்களுக்கு இன்னுமொரு டிப்ஸ்ம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்.
நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
அல்சரால் அவதிப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்கு நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு டிப்ஸ். இதை நீங்கள் மூன்று நாட்கள் செய்தாலே போதும். அல்சர் பிரச்னை இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போதும். அல்சர் பிரச்னை உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் வராமல் தடுக்க இந்த இரண்டும் குறிப்புகளும் உங்களுக்கு உதவும்.
டிப்ஸ் – 1
தேவையான பொருட்கள்
விரலி மஞ்சள் – 1
மஞ்சளில் நிறைய வகைகள் உண்டு. இது கொம்பு மஞ்சள் என்று அழைக்கப்படும். சருமத்து கஸ்தூரி மஞ்சளும், உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க கஸ்தூரி மஞ்சளும் பயன்படுத்தப்படுகிறது. குழம்புக்கு பயன்படுத்தக்கூடிய விரலி மஞ்சள்தான் பயன்படுத்தவேண்டும். மஞ்சள் பொடியை மட்டும் எடுத்துவிடக்கூடாது. ஏனெனில், நீங்கள் மார்க்கெட்டில் வாங்கக் கூடிய மஞ்சள் தூளில் மரப்பொடிதான் கலந்துள்ளது. எனவே விரலி மஞ்சளைத்தான் எடுக்கவேண்டும்.
சீரகம் – கால் ஸ்பூன்
தேன் – ஒரு ஸ்பூன்
செய்முறை
அடுப்பு அல்லது கேஸ் ஸ்டவில் மஞ்சளை நேரடியாக காட்டி அதை சுடவேண்டும். இந்த மஞ்சளில் இருந்து வரும் புகையை முகர்ந்தாலே போதும் உங்களின் சளி, இருமல் போன்ற அனைத்தும் குணமாகும்.
மஞ்சள் நன்றாக கருகிவந்ததும், அதை ஆறவைத்து கருகிய பகுதியை மட்டும் உரலில் வைத்து, இடித்துக்கொள்ளவேண்டும். அதனுடன் சீரகத்தையும் சேர்த்து இடித்துக்கொள்ளவேண்டும். இதை ஒரு ஸ்பூன் எடுத்து, அதே அளவு தேன் கலந்து, இதை காலையில் தினமும் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும்.
டிப்ஸ் – 2
தேவையான பொருட்கள்
தயிர் – 2 ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை
அல்சர் வயிற்றின் இடது புறத்தில் நெஞ்சுக்கு கீழே வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். சாப்பிட முடியாது. வாந்தியுணர்வு ஆகியவை ஏற்படும். சாப்பிட அரை மணி நேரம் முன்னர், எப்போதும், ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு 2 ஸ்பூன் மோர் கலந்து, அதனுடன் சீரகம், சிட்டிகை பெருங்காயப் பொடி, சேர்த்து நன்றாக கலந்து பருகவேண்டும்.
அதன் பின்னர் நீங்கள் நன்றாக சாப்பிடமுடியும். ஆனால் இந்த மோரை பருகியவுடனே சாப்பிடக்கூடாது. சிறிது நேரம் கழித்துதான் சாப்பாடு சாப்பிடவேண்டும். இதை நீங்கள் மூன்று வேளை உணவுக்கு முன்னரும், செய்தாலே உங்களை விட்டு அல்சர் ஓடிவிடும். வயிற்றுப்புண் முழுமையாக குணமாகிவிடும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்