Ulcer Home Remedy : அல்சருக்கு அருமருந்து! 11 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த பானம் மட்டும் போதும்!-ulcer home remedy ulcer home remedy just drink this drink on an empty stomach in the morning for 11 days - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ulcer Home Remedy : அல்சருக்கு அருமருந்து! 11 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த பானம் மட்டும் போதும்!

Ulcer Home Remedy : அல்சருக்கு அருமருந்து! 11 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த பானம் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Sep 28, 2024 04:20 PM IST

Ulcer Home Remedy : அல்சருக்கு அருமருந்தாகும். 11 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருகிகனால் மட்டும் போதும். அல்சர் பறந்தோடும்.

Ulcer Home Remedy : அல்சருக்கு அருமருந்து! 11 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த பானம் மட்டும் போதும்!
Ulcer Home Remedy : அல்சருக்கு அருமருந்து! 11 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த பானம் மட்டும் போதும்!

அல்சர்

வயிற்றின் மேல்புறத்தில் சிறு குடலில் ஏற்படும் புண்களே அல்சர் என்று அழைக்கப்படுகிறது. அல்சர் இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். இதுவே பொதுவான அறிகுறியாகும்.

கேஸ்டரிக் அல்சர் என்பது வயிற்றுக்கு உள்ளே வருகிறது.

டியோடெனல் அல்சர் என்பது உங்கள் சிறுகுடலின் மேல் பகுதியில் ஏற்படுகிறது.

அல்சரின் அறிகுறிகள்

வயிறு எரிச்சல்

வயிறு வலி

வயிறு உப்புசம், வயிறு நிறைந்த உணர்வு

கொழுப்பு உணவுகளை ஏற்காமை

நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் ஆகிய அறிகுறிகள் தோன்றும்.

தீவிர அல்சர் பிரச்னைகள் ஏற்பட்டால்

வாந்தி

ரத்த வாந்தி,

கருப்பாக மலம் கழித்தல்,

மூச்சுத்திணறல்

மயக்கம்

சோர்வு

வாந்தி

உடல் எடையிழப்பு

பசியின்மை

பசியில் மாற்றம்

எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?

உங்களுக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாகும்போது, உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே அல்சருக்கு நல்லது. நீங்களாகவே செரிமான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும்.

வயிற்றின் வலது புறத்தில் வலி இருந்தால், மேல்புறம் வலி இருந்தால், ஃபேட்டி லிவர் அல்லது பித்தப்பை கற்களால் ஏற்படலாம். அடிவயிறு வலி இருந்தால், பெண்களுக்கு கருப்பை பிரச்னைகளாகவும், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் பிரச்னைகளாகவும் இருக்கலாம்.

அல்சர் இருப்பவர்களுக்கு மேல் வயிற்றில் நடுப்பகுதியில் வலி இருக்கும். கடும் அல்சராக இருந்தால், வயிற்றுக்குள் இருக்கக்கூடிய புண் கடுமையாகி உள்ளே ரத்தக்கசிவு ஏற்பட்டு, மலம் கருப்பாகிவிடும்.

ஆனால் நாம் வயிறு வலித்தாலே அதை ஒட்டுமொத்தமாக வயிறு வலி என்றே குறிப்பிடுகிறோம். இந்த அல்சரை குணப்படுத்த நீங்கள் வீட்டிலேயே சில விஷயங்களைச் செய்ய முடியும். அதில் ஒன்றைத்தான் நீங்கள் இன்று தெரிந்துகொள்ளப்போகிறீர்கள்.

நெஞ்செரித்தல், உணவுக்குழாயில் எரிச்சல், வயிறு எரிவது போன்றவற்றுக்கு பல்வேறு காரணங்களுடன் உங்கள் உடலில் வைட்டமின் சி சத்துக்கள் குறைவதும் காரணமாகும். வைட்டமின் சி என்பதுதான் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இந்த வயிறு எரிச்சலைப்போக்க

தேவையான பொருட்கள்

கசகசா – 2 ஸ்பூன்

தேங்காய் துருவல் – அரை கப்

செய்முறை

கசகசாவை இரவு முழுவதும் ஊறவைத்துவிடவேண்டும். அடுத்த நாள் காலையில் அதில் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் 11 நாள் பருகினால் அது அல்சரை முற்றிலும் குணப்படுத்திவிடும்.

இது அல்சருக்கு நல்ல தீர்வாகும். இந்த கலவையில் அதிகம் தண்ணீர் சேர்த்து பருகினால் நல்லது. இதை பருகியபின் வேறு எதையும் பருகக்கூடாது. மூன்று மணி நேர இடைவேளைக்குப்பின்னர் காலை உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.