Ulcer Home Remedy : கடும் அல்சரால் அவதிப்படுகிறீர்களா? அதற்கு ஏலக்காயை என்ன செய்து சாப்பிட வேண்டும் பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ulcer Home Remedy : கடும் அல்சரால் அவதிப்படுகிறீர்களா? அதற்கு ஏலக்காயை என்ன செய்து சாப்பிட வேண்டும் பாருங்கள்!

Ulcer Home Remedy : கடும் அல்சரால் அவதிப்படுகிறீர்களா? அதற்கு ஏலக்காயை என்ன செய்து சாப்பிட வேண்டும் பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Jul 14, 2024 09:12 AM IST

Ulcer Home Remedy : கடும் அல்சரால் அவதிப்படுகிறீர்களா? அதற்கு ஏலக்காயை என்ன செய்து சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொண்டால் அல்சரை நீங்கள் எளிதில் குணப்படுத்தலாம்.

Ulcer Home Remedy : கடும் அல்சரால் அவதிப்படுகிறீர்களா? அதற்கு ஏலக்காயை என்ன செய்து சாப்பிட வேண்டும் பாருங்கள்!
Ulcer Home Remedy : கடும் அல்சரால் அவதிப்படுகிறீர்களா? அதற்கு ஏலக்காயை என்ன செய்து சாப்பிட வேண்டும் பாருங்கள்! (wikipedia )

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

அல்சர்

வயிற்றின் மேல்புறத்தில் சிறு குடலில் ஏற்படும் புண்களே அல்சர் என்று அழைக்கப்படுகிறது. அல்சர் இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். இதுவே பொதுவான அறிகுறியாகும்.

கேஸ்டரிக் அல்சர் என்பது வயிற்றுக்கு உள்ளே வருகிறது.

டியோடெனல் அல்சர் என்பது உங்கள் சிறுகுடலின் மேல் பகுதியில் ஏற்படுகிறது.

அல்சரின் அறிகுறிகள்

வயிறு எரிச்சல்

வயிறு வலி

வயிறு உப்புசம், வயிறு நிறைந்த உணர்வு

கொழுப்பு உணவுகளை ஏற்காமை

நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் ஆகிய அறிகுறிகள் தோன்றும்.

தீவிர அல்சர் பிரச்னைகள் ஏற்பட்டால்

வாந்தி

ரத்த வாந்தி,

கருப்பாக மலம் கழித்தல்,

மூச்சுத்திணறல்

மயக்கம்

சோர்வு

வாந்தி

உடல் எடையிழப்பு

பசியின்மை

பசியில் மாற்றம்

எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?

உங்களுக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாகும்போது, உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே அல்சருக்கு நல்லது. நீங்களாகவே செரிமான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும்.

வயிற்றின் வலது புறத்தில் வலி இருந்தால், மேல்புறம் வலி இருந்தால், ஃபேட்டி லிவர் அல்லது பித்தப்பை கற்களால் ஏற்படலாம். அடிவயிறு வலி இருந்தால், பெண்களுக்கு கருப்பை பிரச்னைகளாகவும், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் பிரச்னைகளாகவும் இருக்கலாம்.

அல்சர் இருப்பவர்களுக்கு மேல் வயிற்றில் நடுப்பகுதியில் வலி இருக்கும். கடும் அல்சராக இருந்தால், வயிற்றுக்குள் இருக்கக்கூடிய புண் கடுமையாகி உள்ளே ரத்தக்கசிவு ஏற்பட்டு, மலம் கருப்பாகிவிடும். 

ஆனால் நாம் வயிறு வலித்தாலே அதை ஒட்டுமொத்தமாக வயிறு வலி என்றே குறிப்பிடுகிறோம். இந்த அல்சரை குணப்படுத்த நமக்கு ஏலக்காய் உதவும். அல்சர் உள்ளவர்கள் ஏலக்காயை என்ன செய்து சாப்பிடவேண்டும்.

தேவையான பொருட்கள்

பால் – ஒரு டம்ளர்

ஏலக்காய் – 4 (தோல் நீக்கி உள்ளே உள்ள பருப்பை எடுத்து நுணுக்கி சேர்க்கவேண்டும்)

தேன் அல்லது பனங்கற்கண்டு – 2 ஸ்பூன்

செய்முறை

பாலை சூடாக்கி அதில் ஏலக்காயின் உள்ளே உள்ள அதன் விதைகளை மட்டும் நுணுக்கி சேர்க்கவேண்டும். அதனுடன் பனங்கற்கண்டு மற்றும் தேன் கலந்து இரவு உறங்கச் செல்லும்முன் பருகவேண்டும்.

இதை பருகும்போது, உங்களுக்கு வயிற்றின் உள்ளே உள்ள புண் குணமாகும். இதை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் பருகலாம். எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. உங்களின் அல்சர் பிரச்னையை தீர்க்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.