உடுப்பி தேங்காய்ச் சட்னி : உடுப்பி ஸ்டைல் தேங்காய் சட்னி; இட்லி, தோசையை மிதக்கவிட்டுதான் சாப்பிடுவீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உடுப்பி தேங்காய்ச் சட்னி : உடுப்பி ஸ்டைல் தேங்காய் சட்னி; இட்லி, தோசையை மிதக்கவிட்டுதான் சாப்பிடுவீர்கள்!

உடுப்பி தேங்காய்ச் சட்னி : உடுப்பி ஸ்டைல் தேங்காய் சட்னி; இட்லி, தோசையை மிதக்கவிட்டுதான் சாப்பிடுவீர்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Mar 28, 2025 10:14 AM IST

உடுப்பி தேங்காய்ச் சட்னி : வழக்கமான தேங்காய் சட்னியைவிட இது வித்யாசமான சுவை கொண்டது. இந்த உடுப்பி ஸ்டைல் தேங்காய் சட்னியை நீங்கள் இட்லியில் மிதக்கவிட்டுத்தான் சாப்பிடுவீர்கள். அத்தனை சுவையானது.

உடுப்பி தேங்காய்ச் சட்னி : உடுப்பி ஸ்டைல் தேங்காய் சட்னி; இட்லி, தோசையை மிதக்கவிட்டுதான் சாப்பிடுவீர்கள்!
உடுப்பி தேங்காய்ச் சட்னி : உடுப்பி ஸ்டைல் தேங்காய் சட்னி; இட்லி, தோசையை மிதக்கவிட்டுதான் சாப்பிடுவீர்கள்!

தேவையான பொருட்கள்

• பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்

• கடலை – 2 டேபிள் ஸ்பூன்

• தேங்காய்த் துருவல் – ஒரு கப்

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• பச்சை மிளகாய் – 2

• உப்பு – தேவையான அளவு

• இஞ்சி – ஒரு இன்ச்

• புளி – ஒரு துண்டு

• மல்லித்தழை – சிறிதளவு

• பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை

தாளிக்க தேவையான பொருட்கள்

• கடலை எண்ணெய் – 2 ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

• ஒரு சிறிய கடாயில் பொட்டுக்கடலை மற்றும் கடலையை வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். எண்ணெய் எதுவும் சேர்க்காமல் ட்ரையாக வறுத்துக்கொள்ளவேண்டும். வறுத்தவற்றை எடுத்து தனியாக ஆறவைத்துவிடவேண்டும்.

• ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும். அதையும் ஆறவைத்துவிடவேண்டும்.

• ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த கடலைகளுடன், தேங்காய் சேர்த்து முதலில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

• அடுத்து வதக்கிய கடுகு உள்ளிட்டவற்றை சேர்க்கவேண்டும். புளி, இஞ்சி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். கடைசியாக மல்லித்தழை மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து பல்ஸ் மோடில் அரைத்துக்கொள்ளவேண்டும்.

• ஒரு கடாயில் கடலை எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து சட்னியில் இதை சேர்த்துவிடவேண்டும். சூப்பர் சுவையான உடுப்பி ஸ்டைல் தேங்காய்ச் சட்னி தயார். இதை சூடான இட்லியில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

இப்படி சட்னி செய்தால், அதை தொட்டு சாப்பிட மாட்டீர்கள். இட்லியில் மிதக்கவிட்டுத்தான் சாப்பிடுவீர்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டுப்பாருங்கள்.