Tasty recipe: மணக்க மணக்க சுவையான வான்கோழி குழம்பு செய்முறை

I Jayachandran HT Tamil
Mar 31, 2023 07:57 PM IST

மணக்க மணக்க சுவையான வான்கோழி குழம்பு செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

சுவையான வான்கோழி குழம்பு
சுவையான வான்கோழி குழம்பு

ட்ரெண்டிங் செய்திகள்

கோழி இறைச்சியை விரும்பிச் சாப்பிடுபவர்கள் கூட வான்கோழியைச் சாப்பிடுவதற்கு சற்றுத் தயக்கம் காட்டுவார்கள். காரணம் வான் கோழி இறைச்சியின் வாடை சற்றுத் தூக்கலாக இருக்கும். அத்தோடு வான்கோழி இறைச்சி கோழி இறைச்சியை விட சற்று கெட்டியாக இருக்கும்.

வான்கோழியை பிரியாணியாக சமைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். தம் போட்டு வான்கோழி பிரியாணி செய்தால் வாசனை மூக்கைத் தூக்கும். கறியும் பஞ்சுபஞ்சாகப் போய்விடும்.

அதேபோல் வான்கோழி குழம்பு செய்யும்போது அதை குக்கரில் வைத்து 5-8 விசில்கள் விட்டு பின்னர் அதை வெட்டித்துண்டுகளாக்கி குழம்பு வைத்தால் கறி மென்மையாக இருக்கும். கடைகளில் இருந்து துண்டுகளாக வெட்டி வாங்கி வந்தாலும் அவற்றை பிரஷர் குக்கர், பிரஷர் பேனில் 8 விசில்கள் வரை வேகவைத்து பின் குழம்புக்குப் பயன்படுத்துங்கள். வான்கோழி துண்டுகளை நன்றாக மஞ்சள் பூசி கழுவினால் கவுச்சி மணம் போய்விடும்.

மண்சட்டியில் வான்கோழி குழம்பு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் அதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.

வான்கோழி குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்:

வான்கோழி - 1/2 கிலோ

உப்பு - தேவையான அளவு

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

மசாலாவுக்கு-

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 2 (நறுக்கியது)

தக்காளி - 3 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் - 2 1/2 டேபிள் ஸ்பூன்

சோம்பு பொடி - 2 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

வான்கோழி குழம்பு செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வான்கோழி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின் அடுப்பை அணைத்து, விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி விழுதை சேர்த்து, 15 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.

பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் கிளறி, உப்பு மற்றும் அனைத்து மசாலா பொடியையும் தூவி கிளற வேண்டும்.

பின்பு அதில் வேக வைத்துள்ள வான்கோழியை நீருடன் ஊற்றி கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கி கொத்த மல்லியைத் தூவினால், வான்கோழி குழம்பு ரெடி!

WhatsApp channel

டாபிக்ஸ்