முகப்பருக்களை அகற்ற வேண்டுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த பேஸ் பேக்குகளை முயற்சி செய்து பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  முகப்பருக்களை அகற்ற வேண்டுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த பேஸ் பேக்குகளை முயற்சி செய்து பாருங்கள்!

முகப்பருக்களை அகற்ற வேண்டுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த பேஸ் பேக்குகளை முயற்சி செய்து பாருங்கள்!

Suguna Devi P HT Tamil
Published May 08, 2025 11:23 AM IST

கோடையில், முகப்பரு மற்றும் சரும பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், முகத்தில் சரியான பராமரிப்பு தேவை. வீட்டிலேயே செய்யக்கூடிய சில ஃபேஸ் பேக்குகளை எப்படி தயாரிப்பது என்பதை இங்கே காண்போம். இவை உங்களின் முகத்தை பருக்களில் இருந்து பாதுகாக்கலாம்.

முகப்பருக்களை அகற்ற வேண்டுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த பேஸ் பேக்குகளை முயற்சி செய்து பாருங்கள்!
முகப்பருக்களை அகற்ற வேண்டுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த பேஸ் பேக்குகளை முயற்சி செய்து பாருங்கள்!

தேன் மற்றும் இலவங்கப்பட்டை ஃபேஸ் பேக்

ஒவ்வொரு வீட்டிலும் தேன் மற்றும் இலவங்கப்பட்டை உள்ளது. இதன் மூலம் நீங்கள் ஒரு அற்ப்புதமான ஃபேஸ் பேக் செய்யலாம். இதற்கு, இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேன் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து மென்மையான பேஸ்ட் தயாரிக்கவும். இப்போது இந்த கலவையை முகத்தில் தடவவும். 10-15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

பொதுவாகவே மஞ்சள் மற்றும் தயிர் இல்லாத வீடுகள் இருக்காது. எனவே இந்த ஃபேஸ் பேக்கை யார் வேண்டுமானாலும் தயார் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு டீஸ்பூன் மஞ்சள், இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் எடுத்து, பின் தயிரில் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க, இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதனை கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

வேப்பிலை மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

இரண்டு டேபிள் ஸ்பூன் வேப்பங்கொடி, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ரோஸ் வாட்டரில் வேப்பிலை தூள் மற்றும் மஞ்சள் கலந்து மென்மையான பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

மஞ்சள் மற்றும் பால் ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க, இரண்டு டீஸ்பூன் மஞ்சள் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

இங்கு ஃபேஸ் பேக் போட அதிக செலவு ஆகாது, எனவே பியூட்டி பார்லருக்கு சென்று நூற்றுக்கணக்கான ரூபாய் செலவழிப்பதை விட, வீட்டிலேயே ஃபேஸ் பேக் அணிவது நல்லது.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், லைப்ஸ்டைல் சர்வதேசம், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும் ஈடிவி பாரத் தமிழ், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான இதழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.