Triphala Choranam : இந்த இரண்டு பொருள் போதும்! தலைமுடி ஆரோக்கியம் சிறக்கும்! சருமம் பளபளக்கும்!
Tripala Choranam : மோர் மற்றும் திரிபலா சூரணம் என்ற இரண்டு பொருள் மட்டும் போதும். தலைமுடி ஆரோக்கியம் அதிகரிக்கும். சருமம் பளபளக்கும்!

கடும் கோடை வெயில் உங்கள் சருமம் மற்றும் தலைமுடியை பாதிக்கிறது. இதனால் உங்கள் சருமம் பொலிவை இழக்கும். மேலும், பொடுகு போன்ற முடி பிரச்னைகளும் வரும். சுட்டெரிக்கும் கோடையின் அசவுகர்யத்தை அதிகரிக்கும். கோடையில் உங்கள் தலைமுடியை ஊட்டமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருப்பதன் மூலம் அதை கவனித்துக்கொள்வது முக்கியம்.
உங்கள் தலைமுடி இழந்த பிரகாசத்தை மீட்டெடுக்க ஒரு பழமையான ஆயுர்வேத தீர்வு, மோர் மற்றும் திரிபலா சூரணத்தை சேர்த்து, ்தலையில் ஓரிவு ஊறவைத்தால் உங்களுக்கு அது நல்ல பலனைத்தரும். இதனால் உங்கள் தலைமுடி பளபளக்கும், மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். வேரில் இருந்து உங்கள் தலைமுடியை பாதுகாக்க உதவுகிறது.
தலையை முழுமையாக சுத்தம் செய்வதைத் தவிர, இது முடி முன்கூட்டியே நரைப்பதையும் தடுக்கிறது. மோரில் உள்ள லாக்டிக் அமிலம், சாதாரண ஆல்பா ஹைட்ராலிக் அமிலம் ஆகும். இது உச்சந்தலையை குளிர்வித்து இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. இது உங்கள் தலைமுடிக்கு வலுகொடுக்கிறது.