Train Your Teen : ‘இதுகத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவத்தில் நண்பர்களா – குடும்பமா என குழப்பமா?
Train Your Teen : ‘இதுகத்தியில் நடந்திடும் பருவம்’ டீன் ஏஜ் பருவத்தில் நண்பர்களா – குடும்பமா என குழப்பமா? அதை எதிர்கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இது கத்தியில் நடந்திடும் பருவம் தொடரில் உங்கள் டீன் ஏஜ் குழந்தைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று இங்கு சில வழிகாட்டுதல்கள் கொடுப்பட்டுள்ளது. எனவே இந்தப்பருவத்தில் அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துக்கூற இவற்றை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தையின் 13 முதல் 18 வயது வரை அவர்களின் டீன்ஏஜ் பருவம் உள்ளது. அப்போது அவர்கள், புதிய திறன்களை கற்கிறார்கள். தினமும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முனைகிறார்கள்.
வளரிளம் பருவம் என்பது, முக்கியமான காலகட்டம், இந்த காலகட்டத்தில்தான் அவர்கள் வளர்ந்தவர்களாக இந்த சமுதாயத்தில் எப்படி வலம் வரப்போகிறார்கள் என்பது தெரியவரும். அவர்களின் வளர்ச்சியும் அபிரிமிதமாக இருக்கும்.
உங்கள் டீன்ஏஜ் குழந்தைகள் பல வழிகளில் சுதந்திரமாகவும், தனித்துவமாகவும் இருக்க முயல்வார்கள். ஆனாலும் அவர்கள் உங்களின் வழிகாட்டுதல் தேவை. உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள் சவால்களை சந்திக்கும்போது, அவர்களுக்கு புதிய வாழ்வியல் திறன்களை கற்றுக்கொடுக்க வாய்ப்புக்கள் வழங்குகள்.
அவர்களுக்கு சுதந்திரமாகவும், பொறுப்புடனும் செயல்பட வாய்ப்புக்களை வழங்குங்கள். ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அடித்தளமாகும். உங்களின் பிணைப்பையும் வலுப்படுத்தும்.
ஆரோக்கிய பழக்க வழக்கங்களை கற்பது டீன்ஏஜ் பருவத்தின் முதல்படி. அடுத்து, அவர்களின் சமூக பழக்கவழக்கங்கள். டீன் ஏஜ் வயதுடையவர்களுக்கான ப்ரைவசி மற்றும் இடம் ஆகியவற்றைக் கொடுக்கும்போது, அது உங்கள் உறவை வலுப்படுத்துகிறது.
சுய விழிப்புணர்வு
உங்கள் டீன் ஏஜ் குழந்தை, இந்த உலகம் அவர்களைச் சுற்றி இயங்குவதாக கற்பனை செய்து கொள்வார்கள். உண்மையில், அவர்கள் கற்பனையில் பார்வையாளர்களையும் வைத்துக்கொள்வார்கள். அவர்களின் ஒவ்வொரு அசைவையும், பார்ப்பார்கள் விமர்சிப்பார்கள். இந்த கற்பனை பார்வையாளர்கள் உள்ளதாக நம்புவது அவர்களுக்கு, வளரிளம் பருவத்தின் ஈகோவால் ஏற்பட்டது.
டீன்ஏஜ் குழந்தைகள், இந்த உலகம் அவர்களைச் சுற்றி இயங்குவதாக கற்பனை செய்துகொள்கிறார்கள். அவர்களை அனைவரும் உற்றுப்பார்ப்பதாக நினைக்கிறார்கள். இது அவர்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்றுதான். இதனால் அவர்கள் வெளியே கிளம்பும் முன் 5 முறை தங்களின் உடையை மாற்றினால் கூட வருத்தப்படாதீர்க்ள். இதுதான் டீன்ஏஜ்களின் நடவடிக்கை.
தன்னம்பிக்கை மற்றும் சுய மதிப்பு
அவர்கள் சரியில்லை என்று அவர்கள் எண்ணுவது டீன் ஏஜ்கள் மத்தியில் பொதுவான ஒன்றுதான். அவர்கள் விமர்சனங்களுக்கு கடுமையான எதிர்வினையாற்றுவார்கள். அவர்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்படும்.
யாருக்கு சமுதாயத்துடன் ஒத்துப்போகவில்லையோ, அவர்களுக்கு வளரிளம் பருவம் கடுமையானது. உங்கள் டீன்ஏஜ் குழந்தைகள் சமூகப்பழக்கங்களை ஏற்கவில்லையென்றால், அவர்களுக்கு மருத்துவர்களின் அறிவுரைகள் தேவை. தனிமை மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
தனிப்பட்ட மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகள்
உங்கள் டீன் ஏஜ் குழந்தைகள் வளர்ந்துவிட்டால், அவர்களின் தனிப்பட்ட மதிப்பீடுகள் குறித்து அவர்கள் யோசிப்பார்கள். அவர்கள் சமூக நலன் சார்ந்து சிந்திக்க துவங்குவார்கள். அவர்களின் நம்பிக்கை குறித்து கேள்விகள் எழுப்புவார்கள். இது உங்கள் டீன்ஏஜ் குழந்தைகள் தங்களுக்கென தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள உதவும்.
அவர்களின் குடும்பத்தை கடந்து அவர்கள் தாங்கள் யார் என்ற அடையாளம் மற்றும் நம்பிக்கையை வளர்க்க இது சிறந்த தருணம். பெற்றோர் தங்கள் குழந்தைகள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள கொஞ்சம் இடம்கொடுக்கவேண்டும். அவர்களுக்கு அடிப்படை பொறுப்புகள் மற்றும் பாதுகாப்பான நடத்தையும் முக்கியம்.
மனஅழுத்தம்
உங்கள் குழந்தையின் மனஅழுத்தம் குறித்து நீங்கள் அறிவது அவசியம். படிப்பு, சமூக பிரச்னைகள், விளையாட்டு தொடர்பான பிரச்னைகள், எதிர்காலத்திற்கான தயாரிப்பு என அவர்கள் எதிலும் பாதிக்கப்படுகிறார்களா என்பது குறித்து கண்காணித்துக்கொள்ளவேண்டும்.
உங்கள் டீன்ஏஜ் குழந்தைகளுக்கு அதிக டாஸ்குகளை கொடுப்பதில்லை என்பதை உறுதிப்படுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு, அவர்களின் மனஅழுத்த அளவு அதிகரிப்பதை புரிந்துகொள்ள வழிகாட்டுங்கள், அதை எப்படி ஆரோக்கியமான வழிகளில் கையாள்வது என்பதையும் கற்றுக்கொடுங்கள். மனதை அமைதிப்படுத்தும் வழிகளைக் கற்றுக்கொடுங்கள்.
குடும்பம் மற்றும் நண்பர்களுக்கான நேரம்
உங்கள் டீன்ஏஜ் குழந்தைகள், தங்களின் பெரும்பாலான நேரத்தை அவர்களின் நண்பர்களுடன் செலவிட விரும்புகிறார்கள். அவர்களுடன் சில மணிநேரங்கள் செலவிடுவதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். குடும்பத்திற்காக நேரம் செலவிடுவதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தவேண்டும்.
மாதம் ஒருமுறை குடும்பத்தினருடன் நேரம் செலவிடவேண்டும். வாரம் ஒருமுறை உணவு விடுதிகளுக்குச் செல்லவேண்டும். குடும்பத்தினருடன் சேர்ந்து உணவருந்தவேண்டும். இதுதான் நீங்கள் உங்கள் டீன்ஏஜ் குழந்தைகளுடன் தொடர்பில் இருப்பதற்கு உதவக்கூடியது.

டாபிக்ஸ்