Top 8 Parenting Tips : எச்சரிக்கை பெற்றோரே! இந்த 8 தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்! இது குழந்தையை சுயநலவாதியாக்கிவிடும்!
- Top 8 Parenting Tips : எச்சரிக்கை பெற்றோரே! இந்த 8 தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்! இது குழந்தையை சுயநலவாதியாக்கிவிடும்!
- Top 8 Parenting Tips : எச்சரிக்கை பெற்றோரே! இந்த 8 தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்! இது குழந்தையை சுயநலவாதியாக்கிவிடும்!
(1 / 8)
அவர்களின் தேவைகளை அதிகப்படியாக நிறைவேற்றுவது - உங்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து, அவர்களின் தேவைகளை வழங்கிக்கொண்டே இருப்பது மிகவும் தவறு. அவர்களுக்கு பொறுமை என்பதே இல்லாமல் போய்விடும். மேலும் அவர்களுக்கு பணத்தின் அருமையும் புரியாமல் போய்விடும். அது அவர்கள் அனைத்தையும் உரிமை கொண்டாடச் செய்யும். குழந்தைகள் தாங்கள் எதிர்பார்ப்பது அனைத்தையும் பெறுவது, எதையும் புரிந்துகொள்ளாமல் இருப்பது என வளர்வார்கள். எனவே கடின உழைப்பு மற்றும் நன்றி ஆகியவற்றின் முக்கியத்துவம் அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.
(2 / 8)
ஒழுக்கம் குறைவாக இருப்பது - நீங்கள் தெளிவான எல்லைகளை உருவாக்காமல், விதிகளை வகுக்காமல் இருந்தால், குழந்தைகள் அவர்கள் எவ்வித விளைவுகளையும் சந்திக்காமல் நாம் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும் என நம்பிவிடுவவார்கள். இதனால் அவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரிவதில்லை. மேலும் விதிகளை புரிந்துகொள்வதில் சிக்கலும், அதை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் உணராமல் போய்விடுவார்கள். மற்றவர்களின் எல்லைகளையும் அவர்கள் மதிக்க மாட்டார்கள்.
(3 / 8)
தொடர்ச்சியில்லாத விதிகளை விதிக்கும் பெற்றோர் - பெற்றோர் எப்போதும் தாங்கள் விதிக்கும் விதிகள் மற்றும் எதிர்பார்ப்புகளில் தொடர்ச்சியில்லாமல் இருந்தால், குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்பட்டுவிடும். அவர்களின் நடத்தைகள் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற சந்தேகம் ஏற்படும். இந்த தொடர்ச்சியில்லாத செயல்பாடுகள், உங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை மற்றும் சுயநலத்தை தோற்றுவிக்கும். குழந்தைகளுக்கு எல்லைகள் இல்லாமல் போய்விடும். எப்போது, எதில் இருந்து அவர்கள் விலகியிருக்கவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.
(4 / 8)
அனுதாபம் கற்றுக்கொடுக்காமல் இருப்பது - உங்கள் குழந்தைக்கு மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுக்காமல் போய்விட்டால், அவர்களுக்கு மற்றவர்கள் மீது அனுதாபம் ஏற்படாது. அவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். குழந்தைகள், சுயநலவாதிகளாகி, தங்களின் நலன் ஒன்றை மட்டுமே கவனத்தில் கொள்வார்கள். அவர்கள் தங்களின் தேவைகள் மற்றும் ஆசைகள் என அதில்தான் கவனம் செலுத்துவார்கள். அவர்களின் செயல்கள் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து அவர்கள் மனதில் கொள்ள மாட்டார்கள்.
(5 / 8)
விளைவுகளை சந்திக்க விடாமல் அவர்களை பாதுகாத்து வைப்பது - உங்கள் குழந்தைகளை, அவர்களின் செயல்களுக்கு, இயற்கையாகவே ஏற்படும் விளைவுகளில் இருந்து பாதுகாப்பு கொடுப்பது மிகவும் தவறான ஒன்று. இதனால் அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதை கற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு பொறுப்புடன் நடந்து கொள்ள முயல மாட்டார்கள். இதனால் அவர்களின் செயல்கள் மற்றவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதும் தெரியாமல் போய்விடும்.
(6 / 8)
சாதனைகள் புரிய வேண்டும் என அழுத்தம் கொடுப்பது - உங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் அல்லது படிப்பு அல்லாத விஷயங்களில் ஈடுபட்டு அதில் வெற்றி பெறவேண்டும். அதாவது சாதித்தே தீரவேண்டும் என அழுத்தம் கொடுப்பது, அவர்கள் சாதித்தால்தான் அவர்களுக்கு மதிப்பு என்ற நிலையை உருவாக்குவது அவர்க்கு ஆபத்தை ஏற்படுத்தும்இதனால் அவர்களுக்கு தாங்கள் சாதித்தே தீரவேண்டும் என்ற அழுத்தம் ஏற்படும். இது அவர்களை சுயநலவாதியாகவும், தவறுகள் செய்யவும் தூண்டும். இவர்கள் தனிப்பட்ட வெற்றிக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். குழுவாகவோ அல்லது ஒன்றிணைந்தோ இவர்களால் செயல்படவே முடியாது.
(7 / 8)
வீட்டு வேலைகள் கொடுக்காதது மற்றும் பொறுப்பின்மை - உங்கள் குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்றவாறு வீட்டு வேலைகளை பகிர்ந்துகொடுக்காமல் விட்டால், அது அவர்களுக்கு வீடு மற்றும் சமூகத்துக்கு நாம் என்ன செய்யவேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தாமல் விட்டுவிடும். இதனால் அவர்கள் சுயநலவாதிகளாகவும், தங்களுக்கு அனைத்தும் சொந்தம் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் மாறிவிடுவார்கள். தங்களின் வேலைகளை மற்றவர்கள்தான் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
(8 / 8)
நேர்மை மற்றும் அன்புக்கு மாதிரியாக இல்லாமல் போவது - குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் இருந்துதான் அனைத்து குணங்களையும் கற்கிறார்கள். பெற்றோர் அன்பு, இரக்க குணம், நல்ல நடத்தை என எதையும் காட்டவில்லையென்றால், குழந்தைகளுக்கு அதே பண்புகளை வளர்த்துக்கொள்கிறார்கள். இதனால், அன்பு மற்றும் நேர்மை குணங்கள் அவர்களிடம் இல்லாமல் போய்விடும். அவர்களுக்கு முக்கிய சமூகத்திறன்களே வளரமுடியாமல் போய்விடும். இதனால் அவர்கள் அடுத்தவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்க முடியாதவர்களாகவும், சுயநலவாதியாகவும் மாறிவிடுகிறார்கள்.
மற்ற கேலரிக்கள்