Top 8 Parenting Tips : எச்சரிக்கை பெற்றோரே! இந்த 8 தவறுகளை மட்டும் செய்துவிடாதீர்கள்! குழந்தைகளின் வாழ்கையே போய்விடும்!
Top 8 Parenting Tips : எச்சரிக்கை பெற்றோரே, இந்த 8 தவறுகளை மட்டும் செய்துவிடாதீர்கள், குழந்தைகளின் வாழ்கையே போய்விடும், உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையே புரட்டிப்போடும் வகையில் என்ன செய்துவிடப்போகிறீர்கள் என ஆச்சர்யமாக உள்ளதா?
நீங்கள் செய்யக்கூடிய இந்த 8 தவறுகள்தான் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையையே பாழக்கிவிடும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா? உங்கள் குழந்தைகளை சிறந்தவர்களாகவும், மரியாதைக்குரியவர்களாகவும் வளர்ப்பது ஒவ்வொரு குழந்தைக்கும் சவாலான ஒன்று. எனினும், பெற்றோர் செய்யும் சில தவறுகள், உங்கள் குழந்தைகளை பாதிக்கும். அவற்றை உங்களால் கட்டுப்படுத்தவும் முடியாது. எனவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தெரியாமல் செய்யும் இந்த தவறுகளை நீங்கள் கட்டாயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். இது உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கெடுக்கும் சில தவறுகள் ஆகும். நீங்கள் செய்யும் இந்த 8 தவறுகள் தான் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையையே பாதிக்கும்.
கோபம்
பெற்றோர் செய்யும் ஒரு மிகப்பெரிய தவறே, அவர்கள் குழந்தைகளை அவர்கள் கோவத்தை அடக்க கற்றுக்கொடுக்காமல் விடுவதுதான். பொது இடத்தில் அவர்கள் சங்கடத்தை தவிர்க்க அல்லது சிறு அமைதிக்காக அவர்கள் அதை செய்யாமல் விட்டுவிடுகிறார்கள்.
விளையாட்டு பொருட்கள்
குழந்தைகளுக்கு அதிகப்படியான விளையாட்டு பொருட்களை வாங்கிக்கொடுத்து, அவர்களுக்கு கேட்ஜெட்கள் மற்றும் பரிசுப்பொருட்களைக் கொடுத்து அவர்களுக்கு பொருட்களின் மீது பற்றை ஏற்படுத்தி, அவர்களுக்கு அதுவே மகிழ்ச்சியையும், அன்பையும் கொடுத்துவிடும் என்ற தோற்றத்தை உருவாக்கக்கூடாது.
இது அவர்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ள முடியும் என்ற நிலையை ஏற்படுத்தும். அவர்களுக்கு தேவைப்படும்போது எதுவும் கிடைக்கும் என்ற எண்ணமும் தோன்றும். அவர்களுக்கு மதிப்புமிக்க அனுபவங்களைக் கொடுப்பது, உறவுகள் பொருட்களைவிட சிறந்தது என்பதை சொல்லிக்கொடுப்பதும்தான் நல்லது. இது அவர்களின் உணர்வுரீதியான வளர்ச்சிக்கு உதவும்.
எல்லைகள் வரைமுறைகள் சரியாக வகுக்காமல் போவது
உங்கள் குழந்தைகளுக்கு சரியான எல்லைகள் மற்றும் விதிமுறைகளை வகுக்காமல் போனால், அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும். இதனால் அவர்கள் தாங்கள் விரும்பியதை செய்யலாம். எந்த பிரச்னைகளையும் சந்திக்க தேவையில்லை என்று எண்ணிக்கொள்வார்கள்.
எனவே அவர்களுக்கு முறையான விதிகள் மற்றும் எல்லைகளை வகுக்கவேண்டும். இது குழந்தைகளுக்கு எது நல்ல பழக்கம் மற்றும் எதைச் செய்யக்கூடாது என்பதை கற்றுத்தரும். இது குழந்தைகள் மரியாதை மற்றும் சுய ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள மிகவும் முக்கியமானது.
பொறுப்புகள்
குழந்தைகளுக்காக பெற்றோர்கள் அனைத்தையும் செய்யும்போது, அவர்களின் வேலைகளைக் கூட பெற்றோரே செய்வது, அவர்களுக்கு பொறுப்பை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது. குழந்தைகள் அவர்களின் வேலைகளை அவர்களே செய்துகொள்ளவேண்டும். வீட்டிலும் உதவிகள் செய்து பழகவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சோம்பேறிகளாகிவிடுகிறார்கள்.
மற்றவர்கள் அனைத்தையும் அவர்களுக்காக செய்துவிட வேண்டும் என எண்ணுகிறார்கள். எனவே குழந்தைகளுக்கு வீட்டிலும், அவர்கள் வேலையிலும் சில பொறுப்புக்களைக் கொடுக்கவேண்டும். அவர்களின் வயதுக்கு ஏற்ப அவர்கள் பொறுப்பேற்பது அவர்களுக்கு சுதந்திர உணர்வைத் தரும்.
இல்லை என்பதை தவிர்த்தல்
சில பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் இல்லை என்று கூற மறுக்கிறார்கள். அப்படி கூறும்போது குழந்தைகள் பாதிக்கப்பட்டுவிடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். எனினும், எப்போதும் ஆமாம் சொல்வது, உண்மையில்லாத எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு இல்லை எனும்போது அவர்கள் மீண்டெழும் திறனையும், இல்லை என்ற சூழலிலும் வாழ்க்கையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும், அவர்கள் விரும்பியது கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து செல்வதும் எப்படி என்று கற்றுக்கொள்கிறார்கள்.
அவர்களின் நடவடிக்கைகளும் எதிர்விளைவுகளும்
குழந்தைகளின் நடவடிக்கைகளுக்கு எதிர் விளைவுகள் உண்டு என்று அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். குழந்தைகளின் தவறான நடத்தைகளை பெற்றோர்கள் கவனிக்கவில்லையென்றாலோ அல்லது அதனால் ஏற்படும் விளைவுகளை தெரிவிக்கவில்லையென்றாலே குழந்தைகள் தாங்க எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்று எண்ணிக்கொள்வார்கள். எனவே தவறான நடத்தைகளுக்கான விளைவுகளைகளை கூறுவதன் மூலம் அவர்களுக்கு பொறுப்புடன் நடந்துகொள்வது மற்றும் மரியாதை ஆகியவை கற்பிக்கப்படுகிறது.
ஒழுக்கம்
சீரற்ற ஒழுக்கம் என்பது குழந்தைகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். அவர்களின் எல்லைகளை அவர்கள் அடிக்கடி பரிசோதித்துக்கொள்ள தூண்டும். அவர்களின் நடத்தைகளுக்கு சில சமயத்தில் தண்டனைகள் அல்லது வேறு சில சமயத்தில் ஒன்றும் கொடுக்கப்படவில்லையென்றால், குழந்தைகள் விதிகளை கடுமையாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே அவர்களின் சீரான ஒழுக்கம் அவர்களுக்கு விதிக்கப்படும் விதிகளை அவர்கள் கடுமையாக எடுத்துக்கொள்ள உதவும். அதை அவர்கள் பின்பற்ற வலியுறுத்தும்.
எடுத்துக்காட்டு அல்லது உதாரணம்
குழந்தைகள் அவர்கள் பெற்றோரிடம் இருந்துதான சில விஷயங்களை கற்கிறார்கள். பெற்றோரே பொறுமையின்மை அல்லது அவமரியாதை போன்றவற்றை காட்டினால், குழந்தைகள் அந்த நடத்தைகளை அப்படியே கற்றுக்கொள்கிறார்கள்.
எனவே செயல்கள் மூலம் நல்ல உதாரணமாக பெற்றோர் இருக்கவேண்டும். அவர்களின் வார்த்தைகள் குழந்தைகளுக்கு எப்படி சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையும், எப்படி மரியாதையுடன் உரையாட வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்