Top 8 Benefits of Sabudana : ஜவ்வரிசியை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?-top 8 benefits of sabudana do you know the reasons why you should include sorghum in your diet more often - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Top 8 Benefits Of Sabudana : ஜவ்வரிசியை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?

Top 8 Benefits of Sabudana : ஜவ்வரிசியை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Sep 28, 2024 09:44 AM IST

Top 8 Health Benefits of Sabudana : ஜவ்வரிசியை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியதற்கான காரணங்கள் என்ன தெரியுமா? தெரிந்தால் விடமாட்டீர்கள்.

Top 8 Benefits of Sabudana : ஜவ்வரிசியை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?
Top 8 Benefits of Sabudana : ஜவ்வரிசியை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?

உடற்பயிற்சி

நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு 2 மணி நேரம் முன்னர் ஜவ்வரிசியை சாப்பிட்டால், அது உங்களின் உடற்பயிற்சித்திறன் மேம்பட உதவும். இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் உங்களுக்கு உடனடி ஆற்றலைத் தரும். இதை ஆராய்ச்சிகளும் நிரூபித்துள்ளன. பயிற்சி முடிந்ததும் நீங்கள் விரைவில் மீள்வதற்கும் ஜவ்வரிசி உதவும். ஜவ்வரிசி கலந்த பானங்களைப் பருகும்போது, அது உங்களின் உடற்பயிற்சி திறனை அதிகரிக்கச் செய்யும். சோர்வை தாமதப்படுத்தும். உங்கள் உடற்பயிற்சித்திறனை 37 சதவீதம் அதிகரிக்கச் செய்யும்.

உடல் எடை அதிகரிக்க உதவும்

நீங்கள் ஒல்லியாக இருப்பதாக உணர்ந்தால், ஜவ்வரிசி உங்களுக்கு உடல் எடையை அதிகரிக்க உதவும். எனவே இதை உங்கள் அன்றாட உணவில் சேர்த்தால் உடல் எடை அதிகமாகும். ஜவ்வரிசியில் உள்ள அடர் கார்போஹைட்ரேட்கள் அதற்கு காரணமாகின்றன. இது உங்கள் உடலுக்கு தேவையான கொழுப்பு திசுக்களை அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் உடலின் உள்ளுறுப்புக்களை பாதுகாக்கிறது. கொழுப்பை உடல் முழுவதும் சீராகப் பரவச்செய்கிறது. இது எடை குறைவானவர்களுக்கு சிறந்த தேர்வு.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்தில் குழந்தைகள் வளர உதவுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ளும்போது, குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவுகிறது. வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட்கள் கருவின் வளர்ச்சிக்கு உதவும். இது குழந்தைகளுக்கு நரம்பியல் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும்.

செரிமானத்தை அதிகரிக்கும்

இதில் உள்ள ஸ்டார்ச்சுகள் செரிமானத்தை அதிகரிக்கும். செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் உடலுக்கு மிகவும் அவசியம். குடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்திக்கும் உதவுகிறது. இது மலத்தை வெளியேற்றி மலச்சிக்கலையும் போக்குகிறது.

உடலில் ஃப்ரி மாலிக்யூல்கள் ஏற்படுத்தும் சேதத்தை குறைக்கிறது

ஜவ்வரிசியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உடலில் ஃப்ரி மாலிக்யூல்கள் ஏற்படுத்தும் ஆபத்துக்களை சமப்படுத்தி தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது. உங்கள் உடலில் ஃப்ரி மாலிக்யூல்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அது செல்களில் சேதத்தை ஏற்படுத்தும். இது புற்றுநோய் மற்றும் இதய நோய் ஆகியவற்றை ஏற்படுத்தும். ஜவ்வரிசியில் டானின்கள் மற்றும் ஃப்ளேவனாய்ட்கள் போன்ற பாலிஃபினால்கள் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும். வீக்கத்தைக் குறைக்கும், இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

எலும்பு ஆரோக்கியம்

ஜவ்வரிசியில் கால்சியம் மற்றும் மெக்னீசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும். எலும்பு அடர்த்தியை அதிகமாக்கும். எனவே ஜவ்வரிசியை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது, அது எலும்புப்புரை நோய் மற்றும் ஆர்த்ரிட்டிஸ் நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.

ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தும்

இன்று ரத்த அழுத்தம் பொதுவான பிரச்னையாகிவிட்டது. இனால் எண்ணற்ற ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படுகிறது. இதற்கு வீட்டில் இருந்து பெறப்படும் தீர்வுகளுள் ஒன்றாக ஜவ்வரிசி உள்ளது. ஜவ்வரியில் உள்ள பொட்டாசியச் சத்துக்கள் அதற்கு உதவுகின்றன. அது ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. மனஅழுத்தத்தை குறைக்கிறது. இதனால் இதய நோய்கள் அல்லது பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது

இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைப்பதாக எலிகளில் நடந்த ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்களின் அளவை குறைத்து இது இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. இதில் அதிகளவில் அமிலூஸ் என்ற ஸ்டார்ச் உள்ளது. இது செரிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் சர்க்கரை அளவு குறைவாகவே உற்பத்தியாகிறது. இதனால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்களின் அளவும் குறைகிறது.

இத்தனை நன்மைகள் நிறைந்த ஜவ்வரியில் பாயாசம் செய்து இனிப்பாகவும், வடை, கிச்சடி செய்து காரமாகவும் சாப்பிடலாம். நீங்கள் அன்றாடம் அரைக்கும் இட்லி மாவு அரைப்பதற்கே பயன்படுத்தலாம். இதனால் உங்களுக்கு தினமுமே ஜவ்வரிசியும், அதன் நன்மைகளும் உடலில் சேர்ந்துவிடும். இதில் கார்போஹைட்ரேட்கள் அதிகம். எனவே இதன் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்க ஜவ்வரிசியை மற்ற காய்கறிகள் அல்லது கடலையுடன் சேர்த்து சாப்பிடலாம். ஜவ்வரிசி முழுதாவும், பொடியாகவும் கிடைக்கிறது. முழுதாக பயன்படுத்த வேண்டுமெனில் ஓரிரவு ஊறவைக்கவேண்டும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.