Top 5 Good Foods for Liver : உங்கள் கல்லீரலை சுத்தம் செய்யக்கூடிய டாப் 5 உணவுகள்! லிவரை பத்திரமா பாத்துக்கங்க!
Top 5 Good Foods for Liver : உங்கள் கல்லீரலை சுத்தம் செய்யக்கூடிய டாப் 5 உணவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். லிவரை பத்திரமா பார்த்துக்கொள்ள என்ன செய்வது என்று பார்ப்போம்.

கல்லீரல் ஆரோக்கியம்
நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். ஆனால் இதயம், நுரையீரல், மூளை ஆகியவற்றைதான் மருத்துவ உலகம் முக்கியமான உறுப்பாக கூறும்.
ஆனால், கல்லீரல்தான் உண்மையில் நமது உடலின் முக்கிய பாகம். அது உடலில் பல்வேறு வேலைகளை செய்து நமது உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது.
இது உடலுக்கு கிடைக்கும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவை பராமரித்து, ரத்தம் உறைதலை முறைப்படுத்தி, உடலுக்கு தேவையான பல்வேறு முக்கிய பணிகளை செய்கிறது. இது உடலின் வலது புறத்தில் வயிற்றுப்பகுதியில் உள்ளது.
நமது உடலில் கல்லீரல் 500க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. ரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
உங்கள் கல்லீரலை சுத்தம் செய்யும் டாப் 5 உணவுகள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் உடலில் ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடிய மிக முக்கிய உறுப்பாக கல்லீரல் உள்ளது. அதுதவிர அது எண்ணற்ற பணிகளையும் செய்கிறது.
கல்லீரல் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ளும் திறன் கொண்டது என்றாலும், உங்கள் அன்றாட உணவில் இதையெல்லாம் சேர்த்து வந்தால் அந்த வேலைக்கு உதவக்கூடிய ஒன்றாக இருக்கும். கல்லீரல் பாதிப்பு உலகளவில் பெருகிவரும் வேளையில் நீங்கள் இந்த உணவுகளை அதிகம் சேர்க்கவேண்டியது அவசியம்.
பூண்டு
பூண்டில் உள்ள் அலிசின் மற்றும் செலனியம் என்ற இரண்டு சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவைதான் உங்கள் கல்லீரலை சுத்தம் செய்ய உதவக்கூடியது. எனவே பூண்டை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது உங்கள் கல்லீரலை காக்கும்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் உள்ள பெட்டலைன் என்ற உட்பொருள் உங்கள் கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகிறது. எனவே நீங்கள் பீட்ரூட் சாறை அதிகம் பருகவேண்டும். உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்துக்கு பீட்ரூட் சாறு உதவுகிறது. எனவே உணவில் அடிக்கடி பீட்ரூட் சேர்த்துக்கொள்வது கல்லீரல் பாதுகாப்புக்கு மட்டுமின்றி உடலுக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது.
கிரீன் டீ
கிரீன் டீயில் உள்ள கேன்டஜென்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் கல்லீரலின் வாழ்நாளை நீட்டிக்கும். கிரீன் டீ உடல் எடை குறைக்க, சருமம் பளபளக்க என பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. உங்கள் கல்லீரல் நீண்ட நாட்கள் வாழ கிரீன் டீ உதவுவதால், இதை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
கீரைகள்
அனைத்து வகை கீரைகளையும் அடிக்கடி எடுத்துக்கொள்ளவேண்டும். வாரத்திற்கு இரண்டு நாட்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ளும்போது, உங்கள் கல்லீரல் பாதுகாக்கப்படும்.
ஆலிவ் ஆயில்
நல்ல கொழுப்பை உடலுக்கு கொடுக்கிறது. இதில் உள்ள கொழுப்புகள் உங்கள் கல்லீரல் மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. இது கல்லீரல் மற்றும் உடல் இரண்டுக்கும் ஆலிவ் ஆயில் நல்லது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்