BUDGET CARS:இந்தியாவில் 5 லட்ச ரூபாய்க்குள் வாங்க ஏற்ற சிறந்த மூன்று கார்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள்
BUDGET CARS:இந்தியாவில் 5 லட்ச ரூபாய்க்குள் வாங்க ஏற்ற சிறந்த மூன்று கார்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்ப்போம்.
BUDGET CARS: இன்றைய நவீன காலத்தில் எல்லோரும் குடும்பத்துடன் வெளியில் செல்ல நான்கு சக்கர வாகனங்கள் என்பது இன்றியமையாதது. அதில் மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு ஏற்ற பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படும் சில கார்களைப் பற்றிப் பார்க்கலாம்.
பஜாஜ் கியூட் (Bajaj Qute): பஜாஜ் கியூட்(RE 60) ஆனது, 1 சி.என்.ஜி(Compressed Natural Gas) இன்ஜினைக் கொண்டுள்ளது. மேலும் இது 216 சி.சி திறன் கொண்டது. இதனுடைய நீளம் 2,752 மி.மீ; அகலம் 1,312 மி.மீ மற்றும் ரூ. 1, 925 மி.மீ வீல்பேஸ் கொண்டது. இதில் நான்கு பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஷோரூம் விலை ரூ.3.61 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதன் மைலேஜ் ஒரு கிலோ வாயுவுக்கு 43 கி.மீ ஆகும். எரிபொருள் தொட்டியின் கொள்ளளவு - 35 லிட்டர் ஆகும். பஜாஜ் க்யூட் அலாய் வீல்களைக் கொண்டுள்ளன. மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது பஜாஜ் கியூட்.இதில் 1 ஏர் பேக் உள்ளது. தானியங்கி கதவு திறத்தல் இருக்கிறது. வானொலி, ஆடியோ சிஸ்டம் ரிமோட் கண்ட்ரோல், யூஎஸ்பி உள்ளீடு, புளூடூத் இணைப்பு, யூ.எஸ்.பி போர்ட்கள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மாருதி சுசுகி ஆல்டோ கே 10(Maruti Alto K10):
மாருதி சுசுகி ஆல்டோ கே 10 காரின் சென்னை ஷோரூம் விலை ரூ. 3, 98, 948ஆகும். இது பார்ப்பதற்கு மிக இளமையான லுக்கிலும், ஆட்டோ கியர் ஷிஃப்ட் தொழில் நுட்பத்திலும், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் குரல் கட்டுப்பாடு, டிஜிட்டல் ஸ்பீடு டிஸ்ப்ளே கொண்ட ஸ்பீடோ மீட்டர், ஸ்மார்ட்போன் செலுத்தும் வசதி பேசும் வசதி ஆகியவை கொண்டுள்ளன. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 24.39 கி.மீ மைலேஜ் கொண்டது. மேலும், இந்த காரில் இரட்டை ஏர் பேக்குகள் இருக்கிறது. மேலும், இதனுள் ஹீட்டர் கொண்ட ஏர் கண்டிஷனர், பவர் ஸ்டீயரிங், ரிமோட் பின் கதவு திறப்பான், எலக்ட்ரானிக் பிரேக் விநியோகத்துடன் கூடிய ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன.
மாருதி சுசுகி டூர் ஹெச் 1( Maruti Suzuki Tour H1):
மாருதி சுசுகி டூர் ஹெச் காரின் ஷோரூமின் விலை ரூ.4,80,500ஆகும். டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 5 பேர் அமர்ந்து செல்லும் வகையில் ஷீட்டிங் கேபசிட்டி உள்ளது. இதனுடைய சக்கரமானது 2,380 மி.மீட்டரும், காரின் நீளம் 3,530 மி.மீட்டரும், அகலம் 1490 மி.மீட்டரும் அளவு கொண்டது. இதனுடைய எரிபொருள் டேங் கொள்ளளவு 27 லிட்டர் முதல் 55 லிட்டர் வரை கிடைக்கிறது.. மேலும் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் டிரம் பிரேக் வசதியும் உள்ளது. இதனுடைய மைலேஜ் லிட்டர் பெட்ரோலுக்கு 24.60 கி.மீட்டரும், சி.என்.ஜிக்கு 34.46 கி.மீட்டர் திறனும் கொண்டது. பாதுகாப்புக்கு அனைவருக்கும் ஃபெல்ட் மாட்டிக்கொள்ளும் திறன் கொண்டது. மணிக்கு ரூ.80 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். மேலும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹை மவுண்டட் ஸ்டாப் விளக்கு ஆகியவை உள்ளன.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்