Top 10 Parenting Tips : உங்கள் குழந்தைகளுடன் ஆழ்ந்த பிணைப்பில் இருக்கவேண்டுமா? இதோ இந்த 10 விஷயங்களை பின்பற்றுங்கள்!
Top 10 Parenting Tips : உங்கள் குழந்தைகளுடன் ஆழ்ந்த பிணைப்பில் இருக்கவேண்டுமா? அதற்கு உங்களுக்கு இந்த 10 விஷயங்கள் உதவும். இதைப்பின்பற்றி பயன்பெறுங்கள்.
உங்கள் குழந்தைகளுடன் ஆழ்ந்த பிணைப்பில் இருப்பதற்கு இந்த 10 விஷயங்களை பின்பற்றுங்கள்.
ஆழ்ந்த பிணைப்புகளை கட்டமைக்கும் வழிகள்
உங்கள் குழந்தைகளுக்கு ஆழ்ந்த பிணைப்புகளை ஏற்படுத்திக்கொள்வது, அவர்களின் உணர்வு ரீதியான நலன்களுக்கும், வளர்ச்சிக்கும் மிகவும் தேவை. இது அவர்களுடனான உங்கள் உறவை நீண்ட நாள்ட்களுக்கு வைத்திருக்கவும், நம்பிக்கையை வளர்க்கவும், புரிந்துகொள்ளவும், பரஸ்பர மரியாதைககும் உதவுகிறது. உங்கள் குழந்தைகளுடன் ஆழ்ந்த பிணைப்பை உருவாக்க வேண்டுமா? இதோ இந்த 10 வழிகளை மட்டும் கடைபிடியுங்கள் போதும்.
அவர்களின் அன்பு மொழியை புரிந்துகொள்ளுங்கள்
உங்கள் குழந்தைகளின் அன்பு மொழி என்னவென்று தெரிந்துகொள்வது அவசியம். ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் உணர்வுகளை ஒவ்வொரு வகையில் வெளிப்படுத்துவார்கள். எனவே உங்கள் குழந்தைகளின் அன்பு மொழியை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். உறுதியான வார்த்தைகள், பரிசு பொருட்கள் கொடுப்பது, தரமான நேரம் செலவிடுவது, தொடுதல் அல்லது சேவை என உங்களின் குழந்தைக்கு எது பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு அதை செய்யவேண்டும். இது அவர்களை நீங்கள் உண்மையிலேயே நேசிக்கிறீர்கள் அல்லது பாராட்டுகிறீர்கள் என்பதை காட்டும்.
அவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்
உங்கள் குழந்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் மிகவும் முக்கியம். அவர்களை தாழ்வு மனப்பான்மை கொள்ளவைக்காதீர்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள். அவர்களை உற்று கவனியுங்கள். அவர்களின் கருத்துக்களை கேளுங்கள். அவர்களின் அனுபவங்களுக்கு மதிப்பு கொடுங்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்து, உங்களுடன் அவர்களுக்கு தனிப்பிணைப்பை ஏற்படுத்தும்.
உரையாடலில் நகைச்சுவை
உங்கள் குழந்தைகளுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள நகைச்சுவை உதவும். எனவே உங்கள் உரையாடலில் நகைச்சுவையை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனால் அவர்கள் உங்களுடன் உரையாடுவதை மகிழ்ச்சியாக கருதுவதுடன் அதை நினைவில்கொள்கிறார்கள். அவர்களுடன் ஜோக்குகளை பகிர்ந்துகொள்வது, அவர்களுடன் விளையாடிக்கொண்டே பேசுவது என இவற்றையெல்லாம் அவர் விரும்புகிறார்கள். இதனால் வீட்டில் மகிழ்ச்சி குடிகொள்ளும், உங்கள் வீட்டின் சூழலையே நிம்மதியானதாக மாற்றிவிடும்.
இலக்குகள்
உங்கள் குழந்தைகளின் இலக்குகளின் மீது உங்களுக்கு உள்ள உண்மையான ஆர்வத்தை காட்டுங்கள். பள்ளி ப்ராஜெக்ட்டோ அல்லது, விளையாட்டோ, ஹாபியோ அல்லது ஒன்றாக சேர்ந்து பணி செய்வதோ எதுவாக இருந்தாலும், அவர்களின் இலக்குகளில் உங்களின் ஆர்வத்தை காட்டுங்கள். அவர்களுடன் சேர்ந்து அதில் ஈடுபடுங்கள். அவர்களுக்கு நீங்கள் இதுபோன்ற விஷயங்களில் காட்டும் ஆதரவு, அவர்களை வளர்த்தெடுக்க உதவும். மேலும் உங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள பிணைப்பை அதிகரிக்கும். இது அவர்களுக்கு குழுப்பணியின் மதிப்பையும், விடாமுயற்சியையும் கற்றுத்தரும்.
குடும்ப நேரம்
குடும்பத்திற்கான நேரம் என்ற ஒன்றை கட்டாயமாக்குங்கள். வீட்டு வேலைகளை ஒன்றிணைந்து செய்வது உங்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கும். வாரந்தோறும் சேர்ந்து இரவு விளையாட்டு, படம் பார்ப்பது, வார இறுதியில் வெளியே செல்வது போன்றவை நீங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து ஒன்றாக நேரம் செலவிட உதவும். இதனால் நீங்கள் தரமான நேரத்தையும் செலவிட முடியும். நிறைய நினைவுகளையும் உருவாக்க முடியும்.
வீட்டு வேலைகளை ஒன்றிணைந்து செய்யுங்கள்
உங்கள் குழந்தைகளை வீட்டு வேலைகளை செய்ய அறிவுறுத்துங்கள். உங்களுடன் இணைந்து வேலை செய்யும்போது அவர்களுக்கு பொறுப்புணர்வு கற்பிக்கப்டுகிறது. அவர்களுக்கு ஒன்றாக சேர்ந்து வேலைசெய்யும் போது உங்களுடன் பிணைப்பும் உருவாகிறது. ஒன்றாக சேர்ந்து சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, தோட்டம் அமைப்பது என நீங்கள் விளையாட்டாக அனைத்தையும் செய்தால் வேலைகளும் முடியும். ஒன்றிணைந்து செயல்பட உங்களுக்கு உதவும். குழுப்பணியும் தொடரும். எனவே ஒன்றிணைந்து பணிசெய்வது அவசியம்.
அன்றாட அட்டவணை
அவர்களின் அன்றாட அட்டவணைக்கு மதிப்பு கொடுங்கள். உங்கள் குழந்தைகளின் தினசரி திட்டம் மிகவும் முக்கியமானது. எனவே அவர்களுக்கு ஏற்ற நடவடிக்கைகளை திட்டமிட்டு, ஒரு வழக்கத்துக்குள் கொண்டுவாருங்கள். அதில் நீங்கள் அவர்களுடன் செலவிடும் நேரமும் இருக்கவேண்டும். ஆனால் அது அவர்களின் நேரத்தையும், பணிகளையும் பாதிக்கக்கூடாது. இதனால் அவர்களுக்கு நேரத்தின் மதிப்பும், பொறுப்பும் ஏற்படுகிறது.
தனிப்பட்ட பாரம்பரியம்
உங்கள் குடும்பத்திற்கான தனிப்பட்ட பாரம்பரியத்தை உருவாக்குங்கள். இது உங்கள் குடும்பத்துக்கு தனி அடையாளத்தையும், தனித்தன்மையையும் உருவாக்கும். அது ஒரு விடுமுறை கொண்டாட்டம் அல்லது ஆண்டு குடும்ப பயணம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த குடும்ப பாரம்பரியங்கள், நினைவுகளைக் கொண்டிருக்கும். அது உங்கள் குடும்பத்தின் பிணைப்பை அதிகரிக்கும்.
ஆழ்ந்த உரையாடல்
உங்கள் குழந்தைகளுடன் அர்த்தமுள்ள உரையாடல்களை நடத்துங்கள். உங்கள் குழந்தைகளுடன் பேசும்போது, அவர்களின் சிந்தனைகள் குறித்து பேசுங்கள், அவர்களின் அக்கறையை கேளுங்கள். அவர்களின் கனவுகளை தெரிந்துகொள்ளுங்கள். உங்களின் அனுபவங்கள் மற்றும் மதிப்பீடுகளை அவர்களிடம் கூறுங்கள். இது உங்கள் புரிதலை அதிகரிக்கும். இது உங்களுடன் உணர்வு ரீதியான தொடர்பை உருவாக்கும். இருவரும் பரஸ்பர அன்பை அதிகரிக்க இது உதவும்.
கிரியேட்விட்டி
உங்கள் குழந்தைகளின் கிரியேட்விட்டியை அதிகரிக்க உதவுங்கள். உங்கள் குழந்தைகள் இசை, கலை, எழுத்து என எதில் ஆர்வமாக இருந்தாலும் அவர்களுக்கு அதை அதிகம் கற்றுக்கொடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு இதை கற்றுக்கொடுக்கும்போது உங்களுக்கு அவர்களுடன் நல்ல தொடர்பு ஏற்படும். அவர்களின் கிரியேடிவ் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளுங்கள். அவர்களின் முயற்சிகளை பாராட்டுங்கள். அவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்கிக்கொடுங்கள். அவர்கள் தங்களின் சுயத்தை வெளிப்படுத்த உதவுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்