Top 11 Parenting Tips : அச்சச்சோ பெற்றோரே நிறுத்துங்கள்! குழந்தைகள் முன் இந்த 11 விஷயங்களை மட்டும் செய்ய வேண்டாம்!
Top 10 Parenting Tips : குழந்தைகள் முன் பெற்றோர் செய்யக்கூடாத 11 விஷயங்கள் என்ன?

குழந்தைகள் முன் பெற்றோர் இந்த 11 விஷயங்களை மட்டும் செய்துவிடக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம்.
உரையாடலில் கவனம்
பெற்றோர் தங்கள் குழந்தைகள் முன் செய்யும் உரையாடலில் கவனம் இருக்கவேண்டும். குறிப்பாக அவர்கள் குறித்து பேசும்போது அதிக கவனம் தேவை. சில டாபிக்குகள் அவர்களுக்கு மனஅழுத்தத்தைக் கொடுக்கிறது. குழப்பதிலும் தள்ளும். எனவே அவர்களின் உணர்வு நலன்களை பாதிக்கும் விஷயங்களை பேசுவது அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கும்.
நிதிப் பிரச்னைகள்
உங்கள் குழந்தைகளுடன் நிதிப் பிரச்னைகள் குறித்து பேசாதீர்கள். இது அவர்களுக்கு மனஅழுத்தம், பதற்றம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு போன்றவற்றை உருவாக்கும். அவர்கள் குடும்பத்தின் எதிர்காலம், நிலையின்மை குறித்து வருந்துவார்கள். இது அவர்களின் உணர்வு நலனை பாதிக்கும்.
அரசியல்
அரசியல் தொடர்பான விஷயங்களை குழந்தைகள் முன்னிலையில் உரையாடக் கூடாது. உங்களின் தனிப்பட்ட கோணங்கள் என்னவென்று வெளிப்படுத்தக் கூடாது. இது குழப்பத்தை உருவாக்கும். தேவையற்ற டென்சனை குழந்தைகளின் மனதில் ஏற்றும்.
விவாகரத்து திட்டங்கள்
நீங்கள் விவாகரத்து செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அதுகுறித்து குழந்தைகள் முன்னிலையில் நீங்கள் விவாதிக்கக் கூடாது. அது தொடர்பான விஷயங்களை நீங்கள் பேசும்போது கவனம் தேவை. உங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ப, அவர்கள் புரிந்துகொள்ளும் பருவத்தில் இருந்தால், அவர்கள் முன் நீங்கள் வெளிப்படையாக உரையாடலாம். பிஞ்சு குழந்தைகள் முன்னிலையில் உரையாடக் கூடாது.
உறவுச் சிக்கல்கள்
உங்கள் குழந்தைகள் முன் சண்டையிடக் கூடாது. உங்கள் இருவருக்குள் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தனிப்பட்ட பிரச்னைகள் இரண்டையும் குழந்தைகள் முன்னிலையில் விவாதிக்கக்கூடாது. இது அவர்களுக்கு பாதுகாப்பின்மை உணர்வைக் கொடுக்கும். அவர்களுக்கு குழப்பம் மற்றும் உணர்வு ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்தும்.
குடும்ப விஷயங்கள்
உங்கள் உறவினர்கள் குறித்து எதிர்மறையான விஷயங்களை குழந்தைகள் முன்னிலையில் பேசக்கூடாது. உங்கள் குடும்பத்தினர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டுவது அவர்களுக்கு தேவையற்ற பிரச்னைகள், சார்புநிலையை ஏற்படுத்தி, அவர்களை குழப்பமடையச் செய்யும்.
பாலியல் விவகாரங்கள்
உங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ப எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள். பாலியல் தொடர்பான விஷயங்களை குழந்தைகள் முன்னிலையில் பேசக்கூடாது. இது அவர்களின் உணர்வு ரீதியான சவுகர்யங்களை பாதிக்கும். ஆரோக்கியமான மற்றும் சரியான சூழலை உருவாக்கித் தரவேண்டும்.
ஆரோக்கிய கோளாறுகள்
சில விஷயங்களை நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் விளக்கித்தான் ஆகவேண்டும். ஆனால் உங்களுக்கு கடுமையாக உள்ள பாதிப்புக்கள் குறித்து உங்கள் குழந்தைகளுக்கு விளக்கினால், அவர்கள் வருத்தம் கொள்வார்கள். எனவே தீவிர பிரச்னைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து நீங்கள் தேவைப்பட்டால் மட்டும் உங்கள் குழந்தைகளுக்கு விளக்கவேண்டும்.
பணி தொடர்பான அழுத்தம்
உங்கள் குழந்தைகளிடம் பணியில் உள்ள அழுத்தத்தைக் கூறக்கூடாது. இது அவர்களுக்கு தேவையற்ற அச்சத்தை உருவாக்கும். அவர்களுக்கு குடும்பத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தைக் கொடுக்கும் என்பதால், அவர்களிடம் இதுகுறித்து உரையாடக் கூடாது.
மரணம்
அவர்கள் மரணம் குறித்து கேட்டால் மட்டும் விளக்குங்கள். இல்லாவிட்டால் மரணம் குறித்து தெரிவிக்காதீர்கள். இது மிகவும் சென்சிட்டிவான டாபிக் என்பதால் இதை நீங்கள் தவிர்த்தல் நலம்.
மற்றவர்கள் குறித்த விமர்சனம்
மற்றவர்கள் குறித்து எதிர்மறையாகப் பேசக்கூடாது. குறிப்பாக உங்கள் குழந்தைகள் முன்னிலையில் மற்றவர்களை மட்டம் தட்டக்கூடாது. இது உங்கள் குழந்தைகளின் கோணத்தை மாற்றும். எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்