Top 10 Parenting Tips : உங்கள் குழந்தைகள் பெரும் சோம்பேறிகளாக? அவர்களை ஊக்கப்படுத்துவது எப்படி? 10 விஷயங்கள் உதவும்!
சோம்பேறி குழந்தைகளை ஊக்கப்படுத்துவது எப்படி எனப்பாருங்கள். இந்த 10 குறிப்புகள் உதவும்.

உங்கள் குழந்தைகள் பெரும் சோம்பேறிகளாக உள்ளார்களா? அவர்களை ஊக்கப்படுத்துவது எப்படி என்று பாருங்கள். கொஞ்சம் கடினமான காரியமாக இருக்கலாம். ஆனால் செய்ய முடியாத காரியம் கிடையாது. உங்கள் குழந்தைகளுக்கு ஊக்கம் கிடைக்கவில்லையா? நீங்கள் மட்டும் தனியாக இல்லை. எண்ணற்ற பெற்றோரின் கவலையாக இது உள்ளது.
உங்கள் குழந்தைகளின் விருப்பங்களை வளர்த்தெடுங்கள்
உங்கள் குழந்தைகளை அவர்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வதற்கு ஊக்குவியுங்கள். அது கலை, விளையாட்டு அல்லது இசை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் அதைச் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுங்கள். அதை செய்ய நேரத்தை ஒதுக்குங்கள். இது அவர்களுக்கு ஏதோ செய்து முடித்த திருப்தியைக் கொடுக்கும். அவர்களுக்கு ஊக்கமளிக்கும்.
உங்கள் குழந்தைகளின் சாதனைகள் குறித்து பேசுங்கள்
உங்கள் குழந்தைகளின் வெற்றி குறித்து அவர்களிடம் எப்போதும் பேசுங்கள். அது சிறியதோ அல்லது பெரியதோ எதுவாக இருந்தாலும் அது நல்லது. அவர்களுக்கு ஒரு ஸ்கிராப் புத்தகத்தை பரிசளியுங்கள். அதில் அவர்கள் அவர்களின் சாதனைகள் குறித்து எழுதட்டும். அவர்கள் வாங்கிய பரிசுகள் அல்லது அவர்கள் முடித்த விஷயங்களை அவர்கள் அதில் குறித்து வைத்துக்கொள்ளட்டும். இதை அவர்களிடம் எப்போதும் காட்டுங்கள். அவர்களுக்கு, அவர்கள் எத்தனை பெரிய சாதனையாளர்கள் என்பதை நினைவூட்டும். இதனால் அவர்களுக்கு ஊக்கம் கிடைக்கும். அவர்கள் இன்னும் செய்ய வேண்டும் என்று முயற்சிப்பார்கள்.
அவர்கள் வேலையை முடிக்கும்போது பாராட்டுங்கள்
உங்கள் குழந்தைகள் குறிப்பிட்ட வேலைகளை முடிக்கும்போது, அவர்களை பாராட்டுங்கள். சிறப்பான வேலை என்று கூறுவதற்கு பதில், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடங்களை முடிப்பதற்கான உங்களின் முயற்சியை நான் விரும்புகிறேன் என்று கூறிப்பாருங்கள். இது அவர்களை சிறப்பான முயற்சிகள் செய்ய ஊக்கமாக இருக்கும். இது அவர்களை நீங்கள் மதிப்பதையும், அவர்கள் தொடர்ந்து செய்வதற்கு உற்சாகப்படுத்துவதையும் காட்டும்.
உங்கள் குழந்தைகளின் பலம் எதுவென்பதில் கவனம் செலுத்துங்கள்
உங்கள் குழந்தைகள் எதை சிறப்பாக செய்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். அவர்களுக்கு கணிதம் பிடிக்கும் என்றால், அந்த பாடத்தில் அவர்கள் முன்னேற உதவுங்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை மட்டுமல்ல, அவர்களை மேலும் முயற்சி செய்யவும் ஊக்குவிக்கும்.
டாஸ்குகள் சவாலானவை என்பதை உறுதிப்படுத்துங்கள்
அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்குகள் சவாலானவை என்பதை உறுதிப்படுத்துங்கள். அவர்களுக்கு சவாலாக தோன்றவில்லையென்றால், அவர்களின் ஆர்வம் படிப்படியாகக் குறையும். கடைசியில் அவர்களுக்கு போர் அடித்துவிடும்.
அவர்களுக்கு குறைவான அளவு தேர்வுகளைக் கொடுங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு குறைவான தேர்வுகளையே வழங்குங்கள். இது அவர்களின் முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கும். அவர்களை வீட்டுப் பாடங்களை செய்ய அறிவுறுத்துவதை விட, அவர்கள் இப்போது பள்ளி வீட்டுப்பாடங்களை முடிக்கிறார்களா அல்லது ஸ்னாக்ஸ் சாப்பிட்டுவிட்டு செய்கிறார்களா என்று கேளுங்கள். இது அவர்களுக்கு ஒழுங்கு, கட்டுப்பாடு மற்றும் ஒரு வரைமுறையைக் கற்றுக்கொடுக்கும்.
ஊட்டச்சதுதக்கள் நிறைந்த உணவு மற்றும் ஆரோக்கியமாக சாப்பிடும் பழக்கம்
உங்கள் குழந்தைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து அதிகம் சாப்பிடுகிறார்களா? என்பதை உறுதிப்படுத்துங்கள். அவர்களுக்கு ஜங்க் உணவுகள் கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். ஆரோக்கிய உணவுகள் உட்கொள்ளும்போது, உங்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆற்றல் அளவு அதிகரிக்கிறது. அவர்களுக்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்கள் கொடுங்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் என இரண்டையும் கொடுக்கும்.
வேலைகளை விளையாட்டாக்குங்கள்
குழந்தைகளுக்கு விளையாட்டுகள் பிடிக்கும். எனவே நீங்கள் கற்றல் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுடன் விளையாட்டுக்களை இணைக்கவேண்டும்.
கடுமையான வேலைகளை தவிர்க்கவேண்டும்
அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது குறித்து மெதுவாக உரையாடுங்கள். அதுகுறித்து தீவிர உரையாடல் வேண்டாம். சோம்பேறித்தனம் குறித்து பேசவேண்டாம். உங்கள் வேலையை முடிப்பது எத்தனை மகிழ்ச்சியானது என உணர்த்துங்கள். இந்த அணுகுமுறை உங்களின் அழுத்தத்தைக் குறைக்கும். அவர்களை தொடர்ந்து செயல்பட ஊக்குவிக்கும்.
பிரச்சனைகளுக்கான காரணங்களை புரிந்துகொள்ளுங்கள்
உங்கள் குழந்தைகள் தொடர்ந்து சோம்பேறிகளாக இருந்தால், அவர்களுக்கு வேறு ஏதோ பிரச்னைகள் உள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு பதற்றம் அல்லது பய உணர்வு என மருத்துவ கவனம் செலுத்தவேண்டிய விஷயம் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எனவே தேவைப்பட்டால் மருத்துவர் அல்லது குழந்தை உளவியல் நிபுணரை அணுகுவது சிறந்தது. இதனால் உங்கள் குழந்தைக்கு போதிய உதவி கிடைக்கிறது என்று பொருள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்