Top 10 Parenting Tips : குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளும் பெற்றோரா? அதனால் ஏற்படும் 10 பாதிப்புகள்!
Top 10 Parenting Tips : குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளும் பெற்றோரா? அதனால் ஏற்படும் இந்த 10 பாதிப்புக்களையும் தெரிந்துகொண்டால் நீங்கள் இனி அந்த தவறை செய்யவே மாட்டீர்கள்.
நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அதிக கடுமையாக நடந்துகொள்ளும் பெற்றோர் என்றால், அது அவர்களிடம் ஏற்படுத்தும் 10 பாதிப்புக்கள் என்னவென்று பாருங்கள்.
கண்டிப்பான பெற்றோர் ஏற்படுத்தும் பாதிப்புக்கள்
கடுமையாக நடந்துகொள்ளும் பெற்றோர் அல்லது ஏனெனில் நான் கூறினேன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட பெற்றோர், இவர்கள் குறைந்த பொறுப்புக்களையே ஏற்கிறார்கள். ஆனால் அதிக தேவைகளைக் கொண்டுள்ளார்கள். குழந்தைகளிடம் ஒழுக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டுமெனில், பெற்றோர் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
ஆனால் நீங்கள் குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்ளும் பெற்றோராக இருந்தால், அது எதிர்மறை விளைவுகளை மட்டுமே ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நீங்கள் கடுமையான பெற்றோராக இருந்தால், அது என்ன மாதிரியான பாதிப்புக்களை ஏற்படுகிறது என்று பாருங்கள்.
படிப்பில் குறைவது
நீங்கள் உங்கள் குழந்தைகள் படிப்பில் சாதிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தால், அந்த அழுத்தம் எதிர்மறையான பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. அந்த அழுத்தம் குழந்தைகளுக்கு தோல்வி பயம், தண்டனை, ஒப்பீடு மற்றும் அவமானம் போன்ற எண்ணங்களை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்கள் கல்வியில் பின்தங்குகிறார்கள். கற்றல், கல்வி மற்றும் பள்ளி குறித்த எதிர்மறை எண்ணங்களை இது ஏற்படுத்துகிறது.
அதிகரிக்கும் அச்ச உணர்வு
அதிகளவில் பெற்றோர் கண்டித்தால், அது அவர்கள் மீது தொடர்ந்து அழுத்தம் உள்ள ஒரு சூழலை உருவாக்குகிறது. இதனால் அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு, அது அச்சம், பதற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தி, மனதளவில் பாதிப்பை உண்டாக்குகிறது.
இது குழந்தை தொடர்ந்து, தவறுகளை செய்துவிடுவோம் என்ற பதற்றத்தை அவர்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது. இதனால் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்ற எண்ணமும் தோன்றி அவர்களின் நிம்மதியைக் குலைத்துவிடுகிறது.
மனஅழுத்தப் பிரச்னைகள்
தோற்றுவிடுவோமோ என்ற பதற்றத்தில் அவர்கள், கடுமையான பெற்றோரால் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். இதனால் அவர்களுக்கு நாள்பட்ட மனஅழுத்தம் ஏற்படுகிறது. இவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், அது அவர்கள் உடலிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
கூடுதலாக அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்ற அச்சம், அவர்களின் கனவுகளை தகர்க்கிறது, நீங்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என அவர்களை கவலைகொள்ளச் செய்கிறது. இதனால் அவர்களின் பதற்றம் அதிகரிக்கிறது.
முடிவெடுக்கும் திறன் இல்லாதது
கடுமையான அல்லது குழந்தைகளை அதிகம் பாதுகாக்கும் பெற்றோர் என்றால், அவர்கள் தங்கள் குழந்தைகளை முடிவெடுக்க அனுமதிப்பதில்லை. இது அவர்களின் முடிவெடுக்கும் திறன்களை நீண்ட காலத்துக்கு பாதிக்கிறது.
முக்கிய முடிவுகளை எடுக்கும்போதும், பிரச்னைகளை தீர்க்கும்போதும் ஏற்படும் திறன் குறைபாடுகள், அவர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது. மாறாக நீங்கள் குழந்தைகளை தவறுகள் செய்ய அனுமதிக்க வேண்டும். அவர்கள் அவற்றில் இருந்துதான் கற்க முடியும். அவர்கள் வளர்ந்து வயதானவுடன், அவர்கள் முக்கிய முடிவுகளைக் கூட எடுக்க முடியும்.
சமூக திறன்கள் குறைபாடு
நீங்கள் உங்கள் குழந்தையை தொடர்ந்து ஒப்பிட்டுக்கொண்டே இருந்தீர்கள் என்றால், மற்றவர்களுடன் ஒப்பிடுவது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது அவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கும் செயல்களுள் ஒன்றாகும். அவர்கள் மற்றவர்களைவிட தங்களை குறைத்து மதிப்பிட்டுக்கொள்கிறார்கள்.
எனவே கடுமையான பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் வயதையொத்தவர்களுடன் இணைந்திருக்கும் வாய்ப்பை குறைக்கிறார்கள். இது அவர்களின் சமூகத்திறன் வளர்ச்சியை பாதிக்கிறது. இது குழந்தைகள் நட்பு மற்றும் உறவுகளை வளர்த்துக்கொள்வதிலும், அதை பராமரிப்பதிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
முரட்டுத்தனம் அதிகரிக்கும்
உங்கள் குழந்தைகளை நீங்கள் அதிகம் கட்டுப்படுத்தினால், அவர்கள் தங்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்வதில் போராடுவார்கள். அவர்களின் உணர்வுகளை எப்படி சரியான முறையில் கையாள்வது என்பதை அவர்கள் அறிந்திருப்பதில்லை என்பதால், அவர்களால் தங்களின் உணர்வுகளை சரியாக கையாள முடியாமல் போயிருக்கும்.
இது அவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் விரக்தியை ஏற்படுத்தும். அவர்களை முரட்டு குணம் கொண்டவர்களாக மாற்றும். இதனால் கோவப் பிரச்னைகள் ஏற்படும்.
எதிர்க்கும் குணம் மற்றும் போராட்டம்
முரட்டு குணம் மற்றும் கோவம் ஆகிய அனைத்தும், அவர்களை கலகம் செய்பவர்களாக மாற்றிவிடும். அவர்கள் நீங்கள் என்ன கூறுகிறீர்களோ அதற்கு அப்படியே எதிர்மறையாக செயல்படுவார்கள். இந்த கலக குணம், பல வழிகளில் அவர்களிடம் இருந்து வெளிப்படும். அது அவர்கள் தங்கள் முடியின் நிறத்தை மாற்றிக்கொள்வார்கள்.
பள்ளியில் வேண்டுமென்றே கெட்ட பெயர் வாங்குவார்கள். டாட்டூ, பியர்சிங் என செய்துகொள்வார்கள். சண்டைகளில் ஈடுபடுவார்கள். அவர்களின் பெற்றோர் நினைக்கும் எதையுமே கற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு எதிரான ஒன்றைத்தான் எப்போது தேர்ந்தெடுப்பார்கள்.
அவர்களின் கிரியேட்டிவிட்டி குறையும்
பெற்றோர், தங்கள் குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்வது, குழந்தைகளின் கிரியேட்விட்டி அல்லது ஒன்றை புதுமையாக உருவாக்கும் திறன் குறையும்.
இது அவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் திறனை பாதிக்கும். இது அவர்களின் எழுத்து மற்றும் பேச்சுத்திறன் என்ற ஒன்றையும் பாதிக்கும். இதனால் குழந்தைகள் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுபிடிப்பதில் சிரமப்படுவார்கள்.
பெற்றோர் – குழந்தைகள் உறவு பாதிக்கும்
நீங்கள் கடுமையான பெற்றோராக இருந்தீர்கள் என்றால், அது உங்கள் பெற்றோர் – குழந்தைகள் உறவை கடுமையாக பாதிப்பதாக இருக்கும். இதனால், அவர்கள் சுமூகமாக பழகமாட்டார்கள். பெற்றோர் குழந்தைகளை புரிந்துகொள்வதில், அனுதாபம் கொள்வதில் சிக்கல் ஏற்படும்.
அவர்களிடையேயான மனக்கசப்பு ஆண்டு முழுவதும் தொடரும். ஒரு கட்டத்தில் அது வெறுப்பாக மாறிவிடும். இறுதியில் குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதையே நிறுத்திக்கொள்வார்கள். அனைத்து பிணைப்புகளையும் துண்டித்துவிடுவார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்