Top 10 Kidney Disease Symptoms : உங்கள் சிறுநீரகம் ஆபத்தில் உள்ளது என்பதை அறிய இந்த 10 அறிகுறிகள் உள்ளதா பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Top 10 Kidney Disease Symptoms : உங்கள் சிறுநீரகம் ஆபத்தில் உள்ளது என்பதை அறிய இந்த 10 அறிகுறிகள் உள்ளதா பாருங்கள்!

Top 10 Kidney Disease Symptoms : உங்கள் சிறுநீரகம் ஆபத்தில் உள்ளது என்பதை அறிய இந்த 10 அறிகுறிகள் உள்ளதா பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Oct 04, 2024 12:51 PM IST

Top 10 Kidney Disease Symptoms : உங்கள் சிறுநீரகம் ஆபத்தில் உள்ளது என்பதை அறிய வேண்டுமா? இதோ இந்த 10 அறிகுறிகள் உள்ளதா என்று பாருங்கள்.

Top 10 Kidney Disease Symptoms : உங்கள் சிறுநீரகம் ஆபத்தில் உள்ளது என்பதை அறிய இந்த 10 அறிகுறிகள் உள்ளதா பாருங்கள்!
Top 10 Kidney Disease Symptoms : உங்கள் சிறுநீரகம் ஆபத்தில் உள்ளது என்பதை அறிய இந்த 10 அறிகுறிகள் உள்ளதா பாருங்கள்!

சோர்வு

சிறுநீரகங்கள் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுகிறது. அது முறையாக இயங்காவிட்டால், ரத்தத்தில் கழிவு சேரும். இதனால் சோர்வு ஏற்படும். இதனால் உங்களால் எந்த வேலையையும் கவனித்து செய்ய முடியாது. மேலும் உங்கள் சிறுநீரகங்கள் எரித்ரோபோசனை தயாரிக்கும். இது ரத்த சிவப்பணுக்கள் உருவாக காரணமாகும் ஹார்மோனாகும். உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை ரத்த சிவப்பணுக்கள்தான் சுமந்து செல்கின்றன. ரத்த சிவப்பணுக்கள் உடலில் குறைந்தால், நாம் சோர்வடைகிறோம். அப்போது அனீமியா ஏற்படுகிறது.

குளிர்

வெப்பம் இருந்தாலும் குளிர் ஏற்படுகிறது. இதனால் உங்களுக்கு அனீமியா ஏற்பட்டு, அது உங்களுக்கு மேலும் குளிரை ஏற்படுத்துகிறது. இது சிறுநீரக கோளாறால் ஏற்படும் அறிகுறி. ஆனால் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. நாம் இதை அனீமியா என்று கடந்து சென்றுவிடுகிறோம்.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல் இருந்தால் அது இதயம் அல்லது நுரையீரல் பாதிப்பு என்று எண்ணிக்கொள்வீர்கள். ஆனால் சிறுநீரகக் கோளாறுகளாலும் இது ஏற்படலாம். உங்கள் உடலில் உள்ள கூடுதல் தண்ணீர் மற்றும் நச்சுக்களை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாவிட்டாலும், அது மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்கள் மற்றும் அனீமியாவாலும் உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். இதனால் நீங்கள் படுத்து உறங்கும்போது உங்களுக்கு முழுகும் உணர்வு ஏற்படலாம்.

வறண்ட சருமம் மற்றும் அரிப்பு

சருமத்தில் வறட்சியோ அல்லது அரிப்போ ஏற்பட்டால், சிறுநீரகத்தால் சரியாக செயல்பட முடியாமல் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் அதை சருமம் வெளியேற்ற முயலும்போது, அதிகப்படியாகி இந்த அரிப்பு ஏற்படுகிறது. சிறுநீரகம் செயலிழந்தால், உங்கள் உடலில் சரியான மினரல் சமநிலையை செய்ய முடியவில்லை என்று பொருள். உங்கள் ரத்தத்தில் சேரும் நச்சுக்களும் சருமத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

கணுக்காலில் வீக்கம்

உங்களின் சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லையென்றால் உங்கள் கணுக்காலில் வீக்கம் ஏற்படும். சிறுநீரகங்கள் முறையாக செயல்படவில்லையென்றால், உங்கள் உடலில் தண்ணீர் அதிகம் சேர்ந்துவிடும். இதனால் சோடியம் அதிகமாகி, உங்கள் கணுக்கால்களில் அது வீக்கத்தை ஏற்படுத்தும். கைகளும் வீங்கும், கணுக்கால் முதல் பாதம் வரையிலும் வீக்கம் இருக்கும். இது கல்லீரல், இதயம், நரம்பு மண்டல பாதிப்புக்களிலும் ஏற்படும்.

கண்களில் வீக்கம்

உங்கள் கண்ளைச் சுற்றி வீக்கம் ஏற்பட்டால், அப்போது உங்கள் சிறுநீர் வழியாக புரதம் வெளியேறுகிறது என்று பொருள். இதுவும் உங்களுக்கு சிறுநீரகக் கோளாறு உள்ளது என்பதன் அறிகுறியாகும்.

வாய் துர்நாற்றம் மற்றும் சுவை

உங்கள் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உங்கள் சுவையில் மாற்றம் தெரியும். அவர்களுக்கு வாயில் எப்போதும் துர்நாற்றம் ஏற்படும். பசியும் இருக்காது. இது உங்கள் ரத்த யுரிமியாவில் சேரும் நச்சுக்களால் ஏற்படுகிறது. வாந்தி, மயக்கமும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சாப்பிடுவதைப் பற்றி எண்ணினாலே உங்களுக்கு சிரமமாக இருக்கும். எனவே இந்த அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவேண்டும்.

சிறுநீர் கழிப்பதில் பிரச்னைகள்

அடிக்கடி சிறுநீர் கழிப்புது மற்றும் சிறுநீர் கழிக்கும்போது வலி, எரிச்சல் ஏற்படுவது. சிறுநீர் அதிகரித்தாலும் அது சிறுநீர் கோளாறு என்று பொருள். இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் பிரச்னைதான்.

சிறுநீரத்தில் ரத்தம் மற்றும் நுரை

சிறுநீரில் ரத்தம் அல்லது நுரை வந்தால், சிறுநீரகத்தில் கட்டி என்று பொருள். அல்லது சிறுநீரக செயலிழப்பு அல்லது சிறுநீரக கற்கள் என்று பொருள். இதனால் சிறுநீர் சிவப்பு, பழுப்பு அல்லது பர்பிள் நிறமாக மாறும். பெண்கள் இதை மாதவிடாயுடன் தொடர்புபடுத்திக்கொண்டு விட்டுவிடுவார்கள். எனவே பழுப்பான சிறுநீர் வெளியேற்றம், நுரை அல்லது சிறுநீரில் முட்டைகள் தோன்றுவது குறித்து கவனிக்கவேண்டும். இது உங்கள் சிறுநீரில் அதிகளவில் புரதம் சேர்ந்துள்ளதைக் குறிக்கும்.

உறக்கத்தில் சிரமம்

உங்கள் உடலில் சிறுநீரகம் முறையாக செயல்படவில்லையென்றால், உங்களால் நிம்மதியாக உறங்க முடியாது. அடிக்க சிறுநீர் கழிக்க விழிக்க வேண்டியிருக்கும். எனவே இந்த 10 அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்த வழி.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.