Top 10 Benefits of Orange Peels : சருமம் மட்டுமா ஜொலிக்கும் உடலே மின்னும் மாயம் செய்யும் ஆரஞ்சு பழத் தோலின் குணங்கள்!
Top 10 Benefits of Orange Peels : சருமம் மட்டுமா ஜொலிக்கும் உடலே மின்னும் மாயம் செய்யும் ஆரஞ்சு பழத் தோலின் நற்குணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆரஞ்சு பழத்தைவிட அதன் தோலில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. பழத்தைவிட 4 மடங்கு கூடுதல் சத்துக்கள் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆரஞ்சு பழத்தின் தோலில் பாலிமெத்தாக்ஸி ஃபளாவன்ஸ் மற்றும் ஹெஸ்பெரிடின் என்ற ஃப்ளாவனாய்ட்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள மற்ற ஃபைட்டோகெமிக்கல்கள்களும் உடலுக்கு நன்மை கொடுப்பவையாகும். ஃப்ளாவனாய்ட்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும். இது இதயநோய்கள் மற்றும் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் அதிகளவில் சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. மேலும் ஆரஞ்சு பழத்தின் தோலில் காப்பர், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவையும் உள்ளன. பொதுவாக ஆரஞ்சு பழத்தின் தோலை நாம் தூக்கி வீசுகிறோம். ஆனால் அதில் நாம் சட்னி, பச்சடி என எண்ணற்ற உணவுகள் செய்து சாப்பிட முடியும். ஆரஞ்சு பழத்தின் தோலில் இருந்து தயாரிக்கப்படும். இவை சிறந்த சைட்டிஷ்களாகும்.
ஆரஞ்சு பழத்தோலில் உள்ள நன்மைகள்
இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
ஆரஞ்சு பழத்தின் தோல்களில் ஹெஸ்பெரிடின் என்ற உட்பொருள் உள்ளது. இது ரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் பராமரிக்க உதவும் ஒரு ஃப்ளாவனாய்ட் ஆகும். இதில் உள்ள பாலிமெத்தாக்ஸிலேடட் என்ற ஃப்ளாவனாய்ட் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. இது மாத்திரைகளைவிட சிறந்தது.
அலர்ஜிகள் ஏற்படாமல் தடுக்கிறது
அலர்ஜி ஏற்பட ஹிஸ்டாமைன் என்ற வேதிப்பொருட்கள்தான் காரணம். ஆரஞ்சு பழத்தின் தோல்களில் ஹிஸ்டாமைகளை தடுக்கும் உட்பொருட்கள் உள்ளன.
புற்றுநோய் வராமல் தடுக்கிறது
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்க ஆரஞ்சு பழத்தின் தோல் உதவுகிறது. இது சரும புற்றுநோயை ஏற்படுத்தும் ஸ்குவாமோஷ் செல் கார்சினோமா என்பதன் எண்ணிக்கையை குறைக்கிறது. எனவே ஆரஞ்சு பழத்தின் தோலை எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டவர்களுககு, பழத்தை மட்டும் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களைவிட நுரையீரல் மற்றும் சரும புற்றுநோய்களை தடுக்கும் அளவு அதிகம் உள்ளது ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடல் எடை குறைக்க உதவுகிறது
ஆரஞ்சு பழத்தின் தோல் உடல் வளர்சிதை அதிகரித்து, உங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. இதனால் ஆரஞ்சு பழத்தின் தோல்கள் உடல் எடையை குறைக்க உதவுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
செரிமான கோளாறுகளைப் போக்குகிறது
ஆரஞ்சு பழத்தின் தோல்களில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உங்கள் உடலில் ஏற்படும் செரிமானம், குடல் மற்றும் வாயுத்தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றைத் தடுக்கிறது.
மது அருந்துவதால் ஏற்படும் அதீத போதையை தடுக்கிறது
மது அருந்துவதால் ஏற்படும் அதீத போதையால் கண்விழிக்கக் கூட முடியாத போதை நிலையைத் தடுக்கிறது. ஆரஞ்சு பழத்தின் தோலை 15 முதல் 20 நிமிடங்கள் வேகவிடவேண்டும். இதை உங்களுக்க போதை தெளிய டீ போல் பருகவேண்டும்.
வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது
ஆரஞ்சு பழத்தின் தோல் பற்சிதைவுகளை சரிசெய்து உங்கள் சுவாச புத்துணர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
தொற்று, சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராடுகிறது
ஆரஞ்சு பழத்தின் தோலில் வைட்டமின் சி மற்றும் ஏ சத்து அதிகம் உள்ளது. இது ஆரஞ்சு பழத்தோலில் இயற்கை ஆன்டி ஆக்ஸிடன்ட்களை அதிகரித்து உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட உதவுகிறது. இது கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராட உதவுகிறது.
சரும பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கிறது
கருவளையம், கருப்புப்படலம், இறந்த செல்கள், முகப்பரு, முகத்தில் துவாரம், கருந்திட்டுக்கள் மற்றும் வறண்ட சருமம் உள்ளிட்ட எண்ணற்ற சருமப்பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
ஆஸ்துமாவைப் போக்குகிறது
சளியைப்போக்கி ஆஸ்துமா ஏற்படாமல் தடுக்கிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த ஆரஞ்சு பழத்தின் தோலை இனிமேல் தூக்கி வீசாதீர்கள். பழத்தை சாறு அல்லது அப்படியேவோ சாப்பிட்டுவிட்டு, தோலை எடுத்து கழுவி சுத்தம் செய்து ஆரோக்கியமான உணவு வகைகளை செய்து சாப்பிடுங்கள். இதுபோல் நீங்கள் செய்யும்போது, அதன் நன்மைகளும் கிடைக்கும். ஆனால் சாப்பிடுபவர்களுக்கு அது ஆரஞ்சு பழத்தின் தோல் என்றே தெரியாது அத்தனை சுவை நிறைந்ததாக இருக்கும். உங்களுக்காக இதுபோன்ற வித்யாசமான ரெசிபிக்களை ஹெச்.டி தமிழ் தொகுத்து வழங்கி வருகிறது. சூப்பர் சுவையான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் பக்கத்தை தொடருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்