Tomato Thokku : ஒருமுறை இதுபோன்ற முறையில் தக்காளி தொக்கு! மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tomato Thokku : ஒருமுறை இதுபோன்ற முறையில் தக்காளி தொக்கு! மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்!

Tomato Thokku : ஒருமுறை இதுபோன்ற முறையில் தக்காளி தொக்கு! மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்!

Priyadarshini R HT Tamil
Published May 24, 2024 05:50 AM IST

Tomato Thokku : ஒருமுறை இதுபோன்ற முறையில் தக்காளி தொக்கு செய்து பாருங்கள். மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் வகையில் இருக்கும்.

Tomato Thokku : ஒருமுறை இதுபோன்ற முறையில் தக்காளி தொக்கு! மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்!
Tomato Thokku : ஒருமுறை இதுபோன்ற முறையில் தக்காளி தொக்கு! மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும்!

எண்ணெய் – 4 ஸ்பூன்

பூண்டு – 20 பல்

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

மல்லித்தழை – கைப்பிடியளவு (பொடியாக நறுக்கியது)

செய்முறை

தக்காளிகளை பாதியாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன் அதில் பாதியாக வெட்டிய தக்காளியை சேர்க்கவேண்டும்.

அது வெந்தவுடன், அதின் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு, அதை ஒரு ஸ்மாஷர் வைத்து நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூளை சேர்க்கவேண்டும்.

அனைத்தையும் நன்றாக மசித்து பின்னர், அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

சிறிதுநேரம் கொதித்தபின் இறக்கவேண்டும். சூடான, சுவையான தக்காளி தொக்கு தயார்.

இதை சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

ஒருமுறை இதுபோல் தக்காளி தொக்கு செய்து சுவைத்தால் அடிக்கடி செய்வீர். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையில் இந்த தக்காளி தொக்கு இருக்கும்.

இதுபோன்ற ஒரு தக்காளி தொக்கு செய்து கட்டாயம் சாப்பிட்டு பாருங்கள்.

குறிப்புகள் - 

இதை சாதாரண நாட்டுத்தக்காளியிலும் செய்யலாம். ஆனால் அது வேறு சுவையான இருக்கும். பெங்களூர் தக்காளியில் செய்வது வித்யாசமான அசத்தலான சுவையில் இருக்கும். 

காரம் குறைவாக விரும்புபவர்கள் பச்சைமிளகாயை தவிர்த்துவிடலாம். 

இறுதியில் தாளிப்பு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். வழக்கம்போல் ஒரு ஸ்பூன் எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து சேர்த்து தாளித்து தொக்கில் சேர்த்துவிட சுவை அள்ளும். 

தக்காளியின் நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

தக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.

இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.

ஒரு தக்காளி நாளைக்கு தேவையான அளவில் 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இத்தனை சத்துக்கள் நிறைந்த தக்காளியை நாம் பல்வேறு உணவுகளில் சேர்த்து செய்கிறோம். இதுபோல் சட்னியான அரைத்து சாப்பிடும்போது கூடுதலான சுவை கிடைக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9