Tomato Thokku : குக்கரில் இனி ஈசியா செய்யலாம் சூப்பர் சுவையில் தக்காளி தொக்கு? எப்படி தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tomato Thokku : குக்கரில் இனி ஈசியா செய்யலாம் சூப்பர் சுவையில் தக்காளி தொக்கு? எப்படி தெரியுமா?

Tomato Thokku : குக்கரில் இனி ஈசியா செய்யலாம் சூப்பர் சுவையில் தக்காளி தொக்கு? எப்படி தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Jun 27, 2024 12:16 PM IST

Tomato Thokku : குக்கரில் இனி ஈசியா செய்யலாம் சூப்பர் சுவையில் தக்காளி தொக்கு. எப்படி என்று தெரிந்துகொள்ள கீழே ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.

Tomato Thokku : குக்கரில் இனி ஈசியா செய்யலாம் சூப்பர் சுவையில் தக்காளி தொக்கு? எப்படி தெரியுமா?
Tomato Thokku : குக்கரில் இனி ஈசியா செய்யலாம் சூப்பர் சுவையில் தக்காளி தொக்கு? எப்படி தெரியுமா?

தேவையான பொருட்கள்

தக்காளி – அரை கிலோ

(நல்ல பழுத்த நாட்டுத்தக்காளியை தேர்ந்தெடுத்து நன்றாக கழுவிவிட்டு நறுக்கிவைத்துக்கொள்ளவேண்டும்)

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகாய்த்தூள் – 4 ஸ்பூன்

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

வெல்லம் – சிறிதளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயப்பொடி – சிறிதளவு

செய்முறை

மிக்ஸி ஜாரில் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் என அனைத்தும் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு குக்கரில் நல்லெண்ணெயை சூடாக்க வேண்டும். அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பொரிந்தவுடன், அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது மற்றும் வெல்லம் சேர்த்து குக்கரை மூடி 10 விசில் விடவேண்டும்.

பின்னர் விசில் அடங்கியவுடன் திறந்து தொக்கு பதம் வரும் வரை கொதிக்கவிடவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் அப்போது இறக்கினால் சூப்பர் சுவையில் அள்ளும்.

குக்கரிலே ஈசியாக இந்த தக்காளி தொக்கை செய்துவிட முடியும். இதை சமையல் கற்பவர்கள் கூட எளிமையாகவும், சுவையாகவும் செய்துவிடலாம்.

குறிப்புகள்

தக்காளி நல்ல பழுத்த தக்காளியாக இருக்கவேண்டும்.

இதை நாட்டுத்தக்காளியில்தான் கட்டாயம் செய்யவேண்டும். பெங்களூர் தக்காளியில் முயற்சித்துவிடாதீர்கள். சுவை நன்றாக இருக்காது.

இந்த தொக்கை காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால், ஒரு மாதம் வரை கெடாது. தேவைப்படும்போது தேவையான அளவை எடுத்து, சிறிது நேரம் வெளியே வைத்துவிட்டு, குளிர்த்தன்மை போனவுடன், சுடவைத்து சாப்பிடலாம்.

இதை இட்லி, தோசை, சாப்பாத்திக்கு தொட்டுள்கொள்ளலாம். வெரைட்டி சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளலாம். சூப்பர் சுவையில் அசத்தும்.

தக்காளியின் நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

தக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.

இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.

ஒரு தக்காளி நாளைக்கு தேவையான அளவில் 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இத்தனை சத்துக்கள் நிறைந்த தக்காளியை நாம் பல்வேறு உணவுகளில் சேர்த்து செய்கிறோம். இதுபோல் தொக்கு செய்து சாப்பிடும்போது கூடுதலான சுவை கிடைக்கிறது.

தக்காளி நாம் அன்றாட உணவில் சேர்ப்பதுதான் என்றாலும், அதன் நன்மை கருதி, அதை தினமுமே உணவில் சேர்ப்பதை உறுதி செய்யுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.