தக்காளி புலாவ் : தக்காளி – பச்சை பட்டாணி புலாவ்; பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறுகிறதா? இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தக்காளி புலாவ் : தக்காளி – பச்சை பட்டாணி புலாவ்; பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறுகிறதா? இதோ ரெசிபி!

தக்காளி புலாவ் : தக்காளி – பச்சை பட்டாணி புலாவ்; பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறுகிறதா? இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated Apr 14, 2025 11:46 AM IST

தக்காளி புலாவ் : இதற்கு தொட்டுக்கொள்ள ரைத்தாவே போதுமானது. இந்த புலாவே அத்தனை சுவையானதாக இருக்கும் என்பதால் சிம்பிள் சைட் டிஷ்கூட போதும். இந்த தக்காளி பட்டாணி புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தக்காளி புலாவ் : தக்காளி – பச்சை பட்டாணி புலாவ்; பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறுகிறதா? இதோ ரெசிபி!
தக்காளி புலாவ் : தக்காளி – பச்சை பட்டாணி புலாவ்; பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறுகிறதா? இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

• பாஸ்மதி அரிசி – ஒரு கப்

• தக்காளி – 2 (நீளவாக்கில் நறுக்கியது)

• பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)

• இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

• பச்சை பட்டாணி – ஒரு கப்

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• கரம் மசாலாத் தூள் – கால் ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்

• பச்சை மிளகாய் – 2

• மல்லித்தழை – சிறிதளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் மற்றும் நெய் – தலா 2 டேபிள் ஸ்பூன்

• பிரியாணி இலை – 1

• ஏலக்காய் – 1

• பட்டை – 1

• கிராம்பு – 4

• ஸ்டார் சோம்பு – 1

செய்முறை

1. முதலில் பாஸ்மதி அரிசியை அலசி ஊறவைக்கவேண்டும். சாதாரண தண்ணீரில் என்றால் அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும். சூடான தண்ணீரில் ஊற வைத்தீர்கள் என்றால் 10 நிமிடங்கள் ஊறவைத்தால் போதும்.

2. ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அது சூடானவுடன் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், ஸ்டார் சோம்பு சேர்த்து பொரியவிடவேண்டும்.

3. அடுத்து பச்சை மிளகாயை முழுதாக சேர்க்கலாம் அல்லது கீறியும் சேர்க்கலாம். இது உங்களின் கார அளவைப்பொறுத்து சேர்த்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தையும் சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும.

4. அடுத்து இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். அதன் பச்சை வாசம் போனவுடன் பச்சை பட்டாணி சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவேண்டும்.

5. அடுத்து தக்காளியை சேர்த்து நன்றாக மசிய வதக்கவேண்டும். உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். தக்காளியை அரைத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.

6. அடுத்து அரிசியை வடித்து இதில் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவேண்டும். ஒரு ஒன்னே முக்கால் கப் தண்ணீர் மற்றும் மல்லித்தழை சேர்த்து குக்கரை மூடி குறைவான தீயில் 2 விசில் விடவேண்டும்.

7. விசில் அடங்கியவுடன் இறக்கி பரிமாறினால் சூப்பர் சுவையான தக்காளி புலாவ் தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காயப் பச்சடியே போதுமானது. அது இல்லாவிட்டால் பன்னீர் கிரேவி அல்லது மஸ்ரூம் கிரேவி செய்துகொள்ளலாம். இதை லன்ச் பாக்ஸிலும் கொடுத்து அனுப்பலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

குறிப்பு

• அரிசி நீண்ட நேரம் ஊறினால் சாதம் நல்ல மிருதுவாக வெந்து வரும்.

• குக்கரை குறைவான தீயில் வைத்து வேகவைத்தால் அடிபிடிக்காது. விசில் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் பயன்படுத்த தேவையில்லை. சாதாரணமாக மூடிவைத்தே வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம்.

• இஞ்சி – பூண்டை விழுதாகவும் சேர்க்கலாம். பொடியாக நறுக்கியும் சேர்த்துக்கொள்ளலாம்.

• தாளிக்கும்போது சீரகம் அல்லது சோம்பு மற்றும் கறிவேப்பிலைகளும் சேர்த்துக்கொள்ளலாம்.

• புதினா இலைகளும் சேர்த்துக்கொள்ளலாம். அதை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவேண்டும்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.