தக்காளி - மிளகு ரசம் : தக்காளி – மிளகு ரசம்; சாதத்தில் சேர்த்து அல்ல, சூப்போல் சுவைப்பீர்கள்; அத்தனை சுவையானது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தக்காளி - மிளகு ரசம் : தக்காளி – மிளகு ரசம்; சாதத்தில் சேர்த்து அல்ல, சூப்போல் சுவைப்பீர்கள்; அத்தனை சுவையானது!

தக்காளி - மிளகு ரசம் : தக்காளி – மிளகு ரசம்; சாதத்தில் சேர்த்து அல்ல, சூப்போல் சுவைப்பீர்கள்; அத்தனை சுவையானது!

Priyadarshini R HT Tamil
Published Jun 10, 2025 10:54 AM IST

தக்காளி - மிளகு ரசம் : தக்காளி – மிளகு ரசம் செய்வது எப்படி என்று பாருங்கள். இதை சாதத்தில் சேர்த்து சாப்பிட்டாலும், சூப் போல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

தக்காளி - மிளகு ரசம் : தக்காளி – மிளகு ரசம்; சாதத்தில் சேர்த்து அல்ல, சூப்போல் சுவைப்பீர்கள்; அத்தனை சுவையானது!
தக்காளி - மிளகு ரசம் : தக்காளி – மிளகு ரசம்; சாதத்தில் சேர்த்து அல்ல, சூப்போல் சுவைப்பீர்கள்; அத்தனை சுவையானது!

தேவையான பொருட்கள்

• தக்காளி – 4 (நறுக்கியது)

• புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• மிளகு – ஒரு ஸ்பூன்

• சீரகம் – ஒரு ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• சின்ன வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)

• கட்டிப் பெருங்காயம் – சிறியது

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• பச்சை மிளகாய் – 2

• பூண்டு – 6 பல்

• வர மிளகாய் – 1

• மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

• உப்பு – தேவையான அளவு

• மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் புளி சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு கடாயை அடுப்பில் அதில் அரைத்த தக்காளி, புளி விழுதை சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவேண்டும்.

3. ஒரு உரலில் மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து தட்டிக்கொள்ளவேண்டும்.

4. ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து சேர்த்து பொரியவிடவேண்டும். அடுத்து கறிவேப்பிலை, பெருங்காயக்கட்டி, வரமிளகாயையும் சேர்த்து தாளிக்கவேண்டும்.

5. அடுத்து இடித்து வைத்துள்ளவற்றை சேர்துது நன்றாக வதக்கவேண்டும். பின்னர் அதில் கொதிக்கும் தக்காளி, புளி கலவையை சேர்த்துக்கொள்ளவேண்டும். மஞ்சள் பொடி மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.

6. ரசம் நுரை கட்டி வரும்போது, அதில் மல்லித்தழை மற்றும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து இறக்கவேண்டும். சூப்பர் சுவையான தக்காளி – மிளகு ரசம் தயார்.

சூடான சாதத்தில் இதை சேர்த்து சாப்பிடும்போது சூப்பர் சுவையானதாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம், ஊறுகாய் கூட போதும். வேறு எதுவும் தேவையில்லை. உருளைக்கிழங்கு வறுவல் வைத்துக்கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். பெரியவர்களுக்கும் பிடிக்கும். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.