தக்காளி பச்சடி : தக்காளி கொட்டிமீரா பச்சடி; தக்காளியை வைத்து செய்யப்படும் வித்யாசமான ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தக்காளி பச்சடி : தக்காளி கொட்டிமீரா பச்சடி; தக்காளியை வைத்து செய்யப்படும் வித்யாசமான ரெசிபி!

தக்காளி பச்சடி : தக்காளி கொட்டிமீரா பச்சடி; தக்காளியை வைத்து செய்யப்படும் வித்யாசமான ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Published Jun 04, 2025 12:31 PM IST

தக்காளி கொட்டிமீரா பச்சடி : இதை இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சவை அள்ளும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவீர்கள்.

தக்காளி பச்சடி : தக்காளி கொட்டிமீரா பச்சடி; தக்காளியை வைத்து செய்யப்படும் வித்யாசமான ரெசிபி!
தக்காளி பச்சடி : தக்காளி கொட்டிமீரா பச்சடி; தக்காளியை வைத்து செய்யப்படும் வித்யாசமான ரெசிபி!

தேவையான பொருட்கள்

• எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

• பச்சை மிளகாய் – 4

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• தக்காளி – 4

• மல்லித்தழை – இரண்டு கைப்பிடியளவு

• உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – அரை ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• கடலை பருப்பு – கால் ஸ்பூன்

• வர மிளகாய் – 2

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாயை வதக்கி எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

2. அடுத்து தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தழை சேர்த்து மூடிவைத்து நன்றாக வதங்கி குழைவாக வரும் வரை விடவேண்டும். அது நன்றாக வதங்கியவுடன் எடுத்து ஆறவைத்துக்கொள்ளவேண்டும்.

3. மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும். இதை நன்றாக வதக்கியுள்ளதால், உரலில் சேர்த்து கூட இடித்து எடுத்துக்கொள்ளலாம்.

4. ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். அது சிவந்தவுடன், அதில் கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

5. அனைத்தும் பொரிந்து வந்தவுடன், அதை தக்காளிச் சட்னியில் சேர்த்து கலந்துவிட்டு சாப்பிடவேண்டும். சூப்பர் சுவையான தக்காளி கொட்டிமீரா பச்சடி தயார்.

இதை இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சவை அள்ளும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவீர்கள்.