Tomato Kuruma : சுடச்சுட தளதளன்னு தக்காளி குருமா; குக்கரில் வைத்து இப்டி செஞ்சு பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tomato Kuruma : சுடச்சுட தளதளன்னு தக்காளி குருமா; குக்கரில் வைத்து இப்டி செஞ்சு பாருங்க!

Tomato Kuruma : சுடச்சுட தளதளன்னு தக்காளி குருமா; குக்கரில் வைத்து இப்டி செஞ்சு பாருங்க!

Priyadarshini R HT Tamil
Published Feb 15, 2024 07:00 AM IST

Tomato Kuruma : சுடச்சுட தளதளன்னு தக்காளி குருமா; குக்கரில் வைத்து இப்டி செஞ்சு பாருங்க!

Tomato Kuruma : சுடச்சுட தளதளன்னு தக்காளி குருமா; குக்கரில் வைத்து இப்டி செஞ்சு பாருங்க!
Tomato Kuruma : சுடச்சுட தளதளன்னு தக்காளி குருமா; குக்கரில் வைத்து இப்டி செஞ்சு பாருங்க!

தக்காளி – 3 பொடியாக நறுக்கியது

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்

தனியாதூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்

கொத்தமல்லி தழை - சிறிதளவு

பட்டை – ஒரு துண்டு

கிராம்பு – 4

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய்த்துருவல் – அரை கப்

கசகசா – ஒரு ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

மிளகு – அரை ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

இவற்றை சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

செய்முறை

குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் லேசாக வதங்கியதும், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.

தக்காளி பாதி வதங்கியதும், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் தனியாதூள் சேர்த்து வதக்கவேண்டும். பின் கரம்மசாலாதூள் சேர்த்து கலந்துவிட வேண்டும்.

இப்போது அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மேலும் ஒரு கப் அளவு தண்ணீர் கலந்து மூடி வைத்து மிதமான சூட்டில் ஒரு விசில் வந்ததும் இறக்க வேண்டும்.

குக்கரில் இருக்கும் ஆவி அடங்கிய பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து மெதுவாக கலந்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும்.

சுடச்சுட தளதளன்னு சுவையான தக்காளி சாதம். தோசை, சப்பாத்தி, பூரிக்கு தக்காளி குருமாவை நீங்களும் செய்து ருசித்து மகிழுங்கள்

நன்றி – விருந்தோம்பல்.

தக்காளி நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இது தென்அமெரிக்காவை சேர்ந்த ஒரு பழம். என்றாலும் இதை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துகிறோம்.

இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். ஒரு தக்காளி 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் ஃபிலோகுயினோன் என்ற வைட்டமின் கே சத்து உள்ளது. இது ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இது கர்ப்பிணிகளுக்கு நல்லது.

இதில் உள்ள ஃபோலேட் என்ற வைட்டமின் பி, திசுக்கள் வளர்ச்சிக்கும், செல்களின் இயக்கத்துக்கும் உதவுகிறது. இதுவும் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து.

இதில் உள்ள லைக்கோபெனே என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது. உடலில் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது.

தக்காளியின் தோலில் உள்ள நரிஜெனின் என்ற ஃப்ளேவனாய்ட், அலர்ஜியை குறைக்க உதவுகிறது. பல்வேறு நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. கொலோரோஜெனிக் அமிலம் என்பது, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

லைக்கோபெனே, குளோரோஃபில்ஸ் மற்றும் கெரோட்டினாய்ட்ஸ் அகியவைதான், தக்காளியின் பளபள நிறத்துக்கு காரணமாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9