தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Tomato Kichadi Tomato Kichadi With Kamagama Mana Salty Haters Will Also Run And Eat

Tomato Kichadi : கமகம மணத்துடன் தக்காளி கிச்சடி! உப்புமாவை வெறுப்பவர்களும் ஓடி வந்து சாப்பிடுவார்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 28, 2024 08:00 AM IST

Tomato Kichadi : கமகம மணத்துடன் தக்காளி கிச்சடி! உப்புமாவை வெறுப்பவர்களும் ஓடி வந்து சாப்பிடுவார்கள்!

Tomato Kichadi : கமகம மணத்துடன் தக்காளி கிச்சடி! உப்புமாவை வெறுப்பவர்களும் ஓடி வந்து சாப்பிடுவார்கள்!
Tomato Kichadi : கமகம மணத்துடன் தக்காளி கிச்சடி! உப்புமாவை வெறுப்பவர்களும் ஓடி வந்து சாப்பிடுவார்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

தக்காளி – 3 நறுக்கியது

நெய் – 3 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1 சிறு துண்டு

கிராம்பு - 2

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3 நறுக்கியது

கறிவேப்பிலை – ஒரு கொத்து

இஞ்சி-பூண்டு விழுது – அரை ஸ்பூன்

உடைத்த முந்திரி பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லித் தழை – டேபிள் ஸ்பூன்

கல் உப்பு – ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி, அது சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கி, பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன், இதில் கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து கிளறவேண்டும்.

வெங்காயம் பாதி வதங்கியதும் நறுக்கி வைத்த, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கிளறவேண்டும்.

தக்காளி நன்றாக குழைந்து வதங்கியதும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வறுத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, வாணலியை மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவேண்டும்.

இந்த நேரத்தில் எஞ்சிய நெய்யை ஒரு கடாயில் சேர்த்து முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மூடியைத் திறந்து கிச்சடியை நன்றாக கிளறிவிடவேண்டும். பின்னர் நெய்யோடு வறுத்த முந்திரியை கிச்சடியில் சேர்த்து, மல்லித்தழைகள் தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவேண்டும்.

ருசியான, மணமான கமகம தக்காளி ரவா கிச்சடி தயார். தேங்காய் சட்னி மற்றும் அரைத்து விட்ட சாம்பார் மற்றும் சூடான மெதுவடை சேர்த்து பரிமாற வேண்டும்.

ரவையை கொதிக்கும் நீர் சேர்த்து கிளறும் முறையிலும், இந்த கிச்சடியை செய்யலாம். எப்படி செய்தாலும் சுவை அள்ளும்.

தக்காளி நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இது தென்அமெரிக்காவை சேர்ந்த ஒரு பழம். என்றாலும் இதை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துகிறோம். இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். ஒரு தக்காளி 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் ஃபிலோகுயினோன் என்ற வைட்டமின் கே சத்து உள்ளது. இது ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இது கர்ப்பிணிகளுக்கு நல்லது.

இதில் உள்ள ஃபோலேட் என்ற வைட்டமின் பி, திசுக்கள் வளர்ச்சிக்கும், செல்களின் இயக்கத்துக்கும் உதவுகிறது. இதுவும் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து.

இதில் உள்ள லைக்கோபெனே என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது. உடலில் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது.

தக்காளியின் தோலில் உள்ள நரிஜெனின் என்ற ஃப்ளேவனாய்ட், அலர்ஜியை குறைக்க உதவுகிறது. பல்வேறு நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. கொலோரோஜெனிக் அமிலம் என்பது, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

லைக்கோபெனே, குளோரோஃபில்ஸ் மற்றும் கெரோட்டினாய்ட்ஸ் அகியவைதான், தக்காளியின் பளபள நிறத்துக்கு காரணமாகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்