Tomato Gravy: சட்னியும் சாம்பாரும் சாப்பிட்டு சலிச்சு போயிடுச்சா.. தெருவே கமகமக்கும் இந்த தக்காளி குழம்பை செஞ்சு பாருங்க
Tomato Gravy: பார்த்தாலே ருசிக்க தூண்டும் தக்காளி குழம்பு.. இட்லி, தோசைக்கு சரியான காம்பினேஷன் எக்ஸ்ட்ரா இரண்டு இட்லி கேட்டு சாப்பிடுவாங்க. வீட்டில் எல்லோருக்கும் சட்னியும் சாம்பாரும் சாப்பிட்டு சலித்து போயிடுச்சா..கவலையை விடுங்கள். தெருவே கமகமக்கும் தக்காளி குழம்பை எப்படி எளிதாக வைத்து அசத்தலாம்
Tomato Gravy: பார்த்தாலே ருசிக்க தூண்டும் தக்காளி குழம்பு.. இட்லி, தோசைக்கு சரியான காம்பினேஷன் எக்ஸ்ட்ரா இரண்டு இட்லி கேட்டு சாப்பிடுவாங்க. வீட்டில் எல்லோருக்கும் சட்னியும் சாம்பாரும் சாப்பிட்டு சலித்து போயிடுச்சா..கவலையை விடுங்கள். வெறுமனே ஐந்து தக்காளியை வச்சுக்கிட்டு தெருவே கமகமக்கும் ஒரு குழம்பை எப்படி எளிதாக வைத்து அசத்தலாம் என்று பார்க்கலாமா.. இந்த ஸ்டெயிலில் தக்காளி குழம்பு வச்சு பாருங்கள். ரொம்பவே ஆச்சரியப் படுவீங்க. இட்லியும் தோசையும் மளமளவென்று காலியாகிவிடும். வீட்டில் எல்லாரும் எக்ஸ்ட்ரா 2 இட்லி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. இட்லி தோசை மட்டும் இல்லை சப்பாத்தி, சூடான சாதத்திற்கும் சரியான காமிஷேன்தான். இந்த ரெசிபிக்கு தேவையான பொருட்களையும், செய்யும் முறையையும் பார்க்கலாம் வாங்க
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 5
பூண்டு - 8 பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கசகசா - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பட்டை - 1 துண்டு
சோம்பு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு கைபிடி
உப்பு - தேவையான அளவு
கொத்த மல்லி இலை - சிறிதளவு
தக்காளி குழம்பு செய்முறை
ஒரு கடாயில் சூடாக்கி அதில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். அதில் 2 துண்டு பட்டை, ஒரு ஸ்பூன் சோம்பு, சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும் சோம்பு பொரிந்த பின் 100 கிராம் அளவு சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பாதி வதங்கியதும். தோல் நீங்கிய இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து கலந்து விட வேண்டும். அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி பச்சை வாடை போன பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். கடைசியாக ஒரு கைபிடி அளவு தேங்காய் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
வதங்கிய பொருட்களை நன்றாக ஆற வைத்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து 100 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து கலந்து விட வேண்டும். ஏற்கனவே அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொத்திக்க விட வேண்டும். தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ள வேண்டும். தக்காளி நன்றாக கொதித்து வந்த பிறகு கடைசியாக ஒரு கைப்பிடி அளவு மல்லி இலையை சேர்த்து அடுப்பை அனைத்து விட வேண்டும். அவ்வளவு தான் அசத்தலான தக்காளி குழம்பு ரெடி.
இந்த குழம்பு பஞ்சு போன்ற இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தி உடன் சேர்த்து சாப்பிட ருசி அருமையாக இருக்கும். சூடான சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். ஒரு முறை செய்து தந்தால் அடிக்கடி கேட்பாங்க. அப்பறம் என்ன இன்றே செய்து அசத்துங்க.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்