Tomato - Coconut Chutney : தக்காளி – தேங்காய் சட்னி; வித்யாசமான சிம்பிள் ரெசிபி; இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது!
தக்காளி - தேங்காய் சட்னி செய்வது எப்படி என்று பாருங்கள்.

ஒரு சிலருக்கு தேங்காய்ச் சட்னி பிடிக்கும். சிலருக்கு தக்காளிச் சட்னிதான் பிடிக்கும். ஆனால் தேங்காய் மற்றும் தக்காளி இரண்டையும் வைத்து, சூப்பர் சுவையில் ஒரு வித்யாசமான சட்னி செய்யலாமா?
தக்காளியின் நன்மைகள்
தக்காளியில் உங்கள் உடலுக்கு தேவையான அளவு பீட்டா கரோட்டின்கள், லைக்கோபென்கள், வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இவையனைத்தும் செல்களின் சேதத்தை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும். தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய்கள் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. தக்காளி அதன் பன்முக குணங்களுக்காக சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பச்சை, மஞ்சள், சிவப்பு என அனைத்து நிறங்களிலும் உள்ளது. இதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். நோய் எதிர்ப்பாற்றலை அகிகரிக்கிறது. புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. வளர்சிதை மாற்ற நோய்க்குறியை தடுக்கின்றன. மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உடற்பயிற்சியில் இழக்கும் ஆற்றலை மீட்கிறது. தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவுகளை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு தக்காளியில் கலோரிகள் 22.5, கொழுப்பு 0.25 கிராம்கள், சோடியம் 6.25 மில்லி கிராம்கள், கார்போஹைட்ரேட்கள் 4.86 கிராம்கள், நார்ச்சத்துக்கள் 1.5 கிராம்கள், 0 சர்க்கரை, புரதச்சத்துக்கள் 1.1 கிராம் உள்ளது.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட தக்காளியில் இருந்து நாம் எண்ணற்று உணவுகளை தயாரிக்க முடியும். இது அன்றாட பயன்பாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தக்காளியைப் பயன்படுத்தி தற்போது
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – ஒரு கப்
வர மிளகாய் – 2
(உங்கள் கார அளவுக்கு ஏற்ப அதிகம் அல்லது குறைவாக சேர்த்துக்கொள்ளலாம்)
தக்காளி – 1 (சிறியது)
உப்பு – தேவையான அளவு
தாளிக்கதேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் தேங்காய்த் துருவல், வர மிளகாய், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். அதை ஆறவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு, உளுந்து சேர்த்துக்கொள்ளவேண்டும். பொரிந்தவுடன், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கி வைத்து சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி, அது பொன்னிறமானவுடன் அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்க்கவேண்டும்.
நன்றாக கிளறி பரிமாறினால் சூப்பர் சுவையான தக்காளி, தேங்காய்ச் சட்னி தயார். இதை இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், ஆப்பம், ஊத்தப்பம் என அனைத்துக்கும் தொட்டுக்கொள்ள சூப்பர் சுவையானதாக இருக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்