தக்காளி சட்னி : பாலக்காடு தக்காளி சட்னி; பசிக்காக இட்லி, தோசை சாப்பிட தோன்றாது; ருசிக்காக சாப்பிடுவீர்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தக்காளி சட்னி : பாலக்காடு தக்காளி சட்னி; பசிக்காக இட்லி, தோசை சாப்பிட தோன்றாது; ருசிக்காக சாப்பிடுவீர்கள்!

தக்காளி சட்னி : பாலக்காடு தக்காளி சட்னி; பசிக்காக இட்லி, தோசை சாப்பிட தோன்றாது; ருசிக்காக சாப்பிடுவீர்கள்!

Priyadarshini R HT Tamil
Published Jun 04, 2025 11:35 AM IST

தக்காளி சட்னி : ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சட்னியாகும். இதை ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தக்காளி சட்னி : பாலக்காடு தக்காளி சட்னி; பசிக்காக இட்லி, தோசை சாப்பிட தோன்றாது; ருசிக்காக சாப்பிடுவீர்கள்!
தக்காளி சட்னி : பாலக்காடு தக்காளி சட்னி; பசிக்காக இட்லி, தோசை சாப்பிட தோன்றாது; ருசிக்காக சாப்பிடுவீர்கள்!

தேவையான பொருட்கள்

• தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

• கஷ்மீரி மிளகாய் – 4

• இஞ்சி – கால் இன்ச்

• உளுந்து – ஒரு ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• தக்காளி – 2

• பெரிய வெங்காயம் – 2

• உப்பு – சிறிதளவு

• தேங்காய்த் துருவல் – கால் கப்

• மல்லித் தழை – சிறிதளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

• தேங்காய் எண்ணெய் – அரை ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

1. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில், கஷ்மீரி மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, உளுந்து என அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். இதை எடுத்து தனியாக ஆறவைத்துக் கொள்ளவேண்டும். உளுந்தை நன்றாக சிவக்க வறுத்து எடுக்கவேண்டும். கஷ்மீரி மிளகாய்க்கு பதில் சாதாரண வரமிளகாய் சேர்த்தால், இரண்டு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் மற்றம் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அது நல்ல குழைவாக மசிந்தவுடன், உப்பு, தேங்காய்த் துருவல் மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கிகொள்ளவேண்டும். வதங்கியதை ஆறவைத்துக்கொள்ளவேண்டும்.

3. ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்தவற்றை சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். அடுத்து வதங்கியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

4. ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இவற்றை நன்றாக கலந்துவிட்டால் சூப்பர் சுவையான பாலக்காடு ஸ்டைல் தக்காளிச் சட்னி தயார்.

இதை வைத்து சாப்பிட்டால் நீங்கள் எண்ணிலடங்கா இட்லி மற்றும் தோசைகளை சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சட்னியாகும். இதை ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.