Tomato Chutney : தக்காளி சேர்த்து தளதளன்னு இப்டி செய்ங்க தேங்காய் சட்னி!
Tomato Chutney : தக்காளி சேர்த்து தளதளன்னு இப்டி செய்ங்க தேங்காய் சட்னி!
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு பற்கள் - 4
மிளகாய்வற்றல் - 4
புளிக்கரைசல் - ஒரு ஸ்பூன்
தேங்காய்த்துருவல் – அரை கப்
பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்
கடுகு & உளுந்து – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் மிளகாய் வற்றல் சேர்த்து லேசாக வறுத்து, பூண்டு பற்கள் மற்றும் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவேண்டும். தக்காளி மசிந்து வந்ததும் பொட்டுக்கடலை மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைக்கவேண்டும்.
வதக்கிய பொருட்கள் ஆறியதும், அதனுடன் மிக்ஸி ஜாரில் தேவையான உப்பு, புளிக்கரைசல் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும். சட்னி கெட்டியாக இருக்கும் என்பதால், சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து சிறிது கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் சட்னியில் கலந்து கொள்ளவேண்டும்.
சூப்பர் சுவையில் தக்காளி தேங்காய் சட்னி ரெடி. இட்லி, தோசை, சப்பாத்தி என எதற்கு வேண்டுமானாலும் பரிமாறிக்கொள்ளலாம். சுலை அருமையாக இருக்கும். சாதாரணமான சட்னி செய்து 2 தோசை சாப்பிடுபவர்கள் கூட இந்த சட்னியுடன் இரண்டு தோசை கூடுதலாக சாப்பிடுவார்கள். அப்படி சுவை நிறைந்ததாக இருக்கும்.
தக்காளி நன்மைகள்
தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இது தென்அமெரிக்காவை சேர்ந்த ஒரு பழம். என்றாலும் இதை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துகிறோம்.
இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.
100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.
தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். ஒரு தக்காளி 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் ஃபிலோகுயினோன் என்ற வைட்டமின் கே சத்து உள்ளது. இது ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இது கர்ப்பிணிகளுக்கு நல்லது.
இதில் உள்ள ஃபோலேட் என்ற வைட்டமின் பி, திசுக்கள் வளர்ச்சிக்கும், செல்களின் இயக்கத்துக்கும் உதவுகிறது. இதுவும் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து.
இதில் உள்ள லைக்கோபெனே என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது. உடலில் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது.
தக்காளியின் தோலில் உள்ள நரிஜெனின் என்ற ஃப்ளேவனாய்ட், அலர்ஜியை குறைக்க உதவுகிறது. பல்வேறு நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. கொலோரோஜெனிக் அமிலம் என்பது, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
லைக்கோபெனே, குளோரோஃபில்ஸ் மற்றும் கெரோட்டினாய்ட்ஸ் அகியவைதான், தக்காளியின் பளபள நிறத்துக்கு காரணமாகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்