Tomato Chat : தளதளன்னு தக்காளிசாட்! பனராசி டமாட்டார் சாட்! வித்யாசமான மாலை நேர சிற்றுண்டி!
Tomato Chat : தளதளன்னு தக்காளிசாட்! பனராசி டமாட்டார் சாட்! வித்யாசமான மாலை நேர சிற்றுண்டி!

தக்காளி வைத்து எதைச்செய்தாலும், அது கட்டாயம் சுவை நிறைந்ததாக இருக்கும். தக்காளியில் செய்யும் சாட்டும் மிகுந்த சுவை நிறைந்ததாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
சுகர் சிரப் (சர்க்கரை கலவை)
தண்ணீர் - ஒரு கப்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
கருப்பு உப்பு - தேவையான அளவு
காஷ்மீரி மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
பனராசி சாட் செய்ய தேவையான பொருட்கள்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
கசகசா - ஒரு ஸ்பூன்
முந்திரி பருப்பு - 2 ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
காஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்
தக்காளி – 6
தண்ணீர் – தேவையான அளவு
வேகவைத்த உருளைக்கிழங்கு – 1
கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்
அம்சூர் பவுடர் – ஒரு ஸ்பூன்
சாட் மசாலா – ஒன்றரை ஸ்பூன்
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
எலுமிச்சைப்பழச்சாறு – அரை பழம்
செய்முறை
இதற்கு முதலில் ஃப்ளேவர்ட்டு சர்க்கரை பாகு செய்துகொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, அதில் 3 ஸ்பூன் சர்க்கரை, சர்க்கரை கரைந்தவுடன் சீரகத்தூள், கருப்பு உப்பு, அரை ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள். கருப்பு உப்பு இல்லாவிட்டால் சாதாரண உப்பு சேர்த்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் சாட் மசாலா சேர்த்துக்கொள்ளலாம். 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு தனியாக எடுத்து வைத்துவிடவேண்டும்.
கடாயை சூடாக்கி, நெய், முந்திரிபருப்பு, சீரகம், கசகச சேர்த்து வதக்கவேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். பின்னர் ஒரு பெரிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது. 4 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சேர்க்க வேண்டும். காரத்துக்கு ஏற்றவாறு மிளகாய் சேர்ததுக்கொள்ளலாம்.
பின்னர் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வகக்கவேண்டும். அடுப்பு குறைவான தீயில் இருக்க வேண்டும்.
பின்னர் தக்காளியை சேர்த்து நன்றாக வதங்கியவுடன், தண்ணீர் சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து, கரம் மசாலா தூள், ஆம்சூர் தூள் என அனைத்தும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கடைசியாக மல்லித்தழை சேர்த்து, அடுப்பை அணைத்துவிட்டு, எலுமிச்சை தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் தயாரான தக்காளி மசாலாவை வைத்து, அதன் மேல் நெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், புளி சட்னி, தயாரான சர்க்கரை பாகு, மிளகாய் தூள், சாட் மசாலா, ஓமப்பொடி, காராபூந்தி, மல்லித்தழை தூவி அனைத்தையும் கலந்து சாப்பிட சுவைஅள்ளும்.
மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. வழக்கமாக மாலை நேரத்தில் எதையாவது செய்து சாப்பிடாமல், இதுபோல் தளதளன்னு தக்காளி சாட் செய்து சாப்பிட்டால் சுவை அள்ளும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்கி சாப்பிடுவார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்