International Potato Day : முகம் பளபளக்க.. கொலஸ்ட்ராலைக் குறைக்க இது போதும்.. இன்று சர்வதேச உருளைக்கிழங்கு தினம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  International Potato Day : முகம் பளபளக்க.. கொலஸ்ட்ராலைக் குறைக்க இது போதும்.. இன்று சர்வதேச உருளைக்கிழங்கு தினம்!

International Potato Day : முகம் பளபளக்க.. கொலஸ்ட்ராலைக் குறைக்க இது போதும்.. இன்று சர்வதேச உருளைக்கிழங்கு தினம்!

Divya Sekar HT Tamil
May 30, 2024 06:15 AM IST

International Potato Day : மே 30 ஆம் தேதி சர்வதேச உருளைக்கிழங்கு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த முயற்சியானது உருளைக்கிழங்கின் ஊட்டச்சத்து, பொருளாதாரம், சுற்றுச்சூழல் உட்பட பல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

முகம் பளபளக்க.. கொலஸ்ட்ராலைக் குறைக்க இது போதும்.. இன்று சர்வதேச உருளைக்கிழங்கு தினம்!
முகம் பளபளக்க.. கொலஸ்ட்ராலைக் குறைக்க இது போதும்.. இன்று சர்வதேச உருளைக்கிழங்கு தினம்!

சர்வதேச உருளைக்கிழங்கு தினம்

இது பசி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வறுமையைப் போக்குவதற்கான முயற்சிகளை ஆதரிக்கிறது, இறுதியில் உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிக்கிறது. மேலும், உருளைக்கிழங்கு சாகுபடியானது பல்லுயிர்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.

மே 30 ஆம் தேதி சர்வதேச உருளைக்கிழங்கு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த முயற்சியானது உருளைக்கிழங்கின் ஊட்டச்சத்து, பொருளாதாரம், சுற்றுச்சூழல் உட்பட பல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

உருளைக்கிழங்கின் உலகளாவிய முக்கியத்துவத்தை ஒரு முக்கிய உணவு ஆதாரமாக அங்கீகரிப்பதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் (FAO) நியமிக்கப்பட்ட இந்த நாள், உலகளவில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து சவால்களை எதிர்கொள்வதில் உருளைக்கிழங்கின் முக்கிய பங்கைக் கொண்டாடுகிறது. 

உருளைக்கிழங்கின் பன்முகத்தன்மை, ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நிலையான விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான பங்களிப்பைப் பாராட்ட இது ஒரு வாய்ப்பு. இன்றைய நாளில் உருளைக்கிழங்கின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உருளைக்கிழங்கின் நன்மைகள்

உருளைக்கிழங்கு மாவுச்சத்துக்கள் நிறைந்தது. உருளைக்கிழங்கு வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது துவக்க காலத்தில் வாழ்வைக் காக்கும் உணவாகக் கருதப்பட்டது.

ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி அதற்கு காரணமானது. மேலும் இதில் உள்ள எலக்ட்ரோலைட்கள் நமது இதயம், தசைகள் மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவி செய்கிறது.

நமது உடலில் எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை காக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. வீக்கத்தை குறைக்கிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது.

உடல் எடையை குறைப்பதில் உதவி செய்கிறது. செரிமானத்தை ஏற்படுத்துகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பைப்கொடுக்கிறது.

சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உடலுக்கு பல்வேறு நன்மைகளைக்கொடுக்கும் உருளைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து பயன்பெறுங்கள்.

உருளைக்கிழங்கு தோலில் உள்ள நன்மைகள்

எல்லோர் வீட்டிலும் பெரும்பாலான சமையலில் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த உருளைக்கிழங்கைக் கொண்டு எதையும் செய்யும்போது முதலில் செய்ய வேண்டியது, அதை உரிக்க வேண்டும். அந்தத் தோலின் பலன்களை அறிந்தால், இனி அதைத் தூக்கி எறிய மாட்டீர்கள்.

உருளைக்கிழங்கு தோலில் சருமத்திற்கு தேவையான புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இந்த இரண்டு பொருட்களும் சருமத்தின் ஊட்டச்சத்திற்கு அவசியம். வைட்டமின் சி சருமத்தை வளர்க்க உதவுகிறது

உருளைக்கிழங்கின் தோல்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. பொட்டாசியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. வைட்டமின் பி3 உள்ளது. உணவு நார்ச்சத்துடன் கூடுதலாக ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பினாலிக் கலவைகள் மற்றும் தாதுக்கள் உள்ளன என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.

கரும்புள்ளிகள் அகலும்

உருளைக்கிழங்கு தோல்கள் அதிக உணவு நார்ச்சத்து காரணமாக கொலஸ்ட்ராலைக் குறைக்கும். உருளைக்கிழங்கு தோலில் உள்ள பொட்டாசியம் இதய நோயைக் கட்டுப்படுத்தும்.

கண்களுக்குக் கீழே கரும்புள்ளிகள் இருந்தாலோ அல்லது சூரிய ஒளியில் தோல் பழுப்பு நிறமாக இருந்தாலோ உருளைக்கிழங்கு தோலை மசித்து அதன் சாற்றை முகத்தில் தடவவும். கருப்பு விரைவில் மறையும்.

தோலுடன் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் ரத்தசோகை கட்டுப்படும். உருளைக்கிழங்கு தோல்களில் இரும்புச்சத்து உள்ளது. இது ரத்த சோகை அபாயத்தைக் குறைக்கிறது.

உருளைக்கிழங்கு தோல்களில் வைட்டமின் பி3 நிறைந்துள்ளது. தோலில் உள்ள நியாசின் கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலாக மாற்றுகிறது.

நாம் உண்ணும் உணவில் ஓரளவு நார்ச்சத்து இருக்க வேண்டும். உருளைக்கிழங்கில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதன் தோலில் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. இது செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் செயல்படுகிறது.

நீங்களும் வெள்ளை முடி பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால், 1 கிண்ணம் உருளைக்கிழங்கு தோலை அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அந்த நீரை உங்கள் தலைமுடியில் தடவவும். இப்படி பலமுறை செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.