TN Forests : தமிழக காடுகளில் உள்ள மண்வளத்தின் அவல நிலை – அச்சுறுத்தும் அண்ணா பல்கலை. ஆய்வு!
TN Forests : அத்தகைய கழிவிலிருந்து தயாரிக்குப்படும் உரங்களை வனத்துறைக்கு அனுப்பி, தமிழக வனப்பரப்பை உயர்த்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்க வேண்டும்.
தமிழகத்தின் காடுகளில் உள்ள மண்வளம் 42 சதவீத பரப்பில் கெட்டுப்போயுள்ளது (Degraded) - 8.19 லட்சம் எக்டேர்கள் என்றும், 21 சதவீதம் வனப்பகுதி கெட்டுப்போகும் வாய்ப்பு (Vulnerable) அதிகம் இருப்பதும் (1.72 லட்சம் எக்டேர்கள் என்றும்) கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவை இரண்டையும் சீர்செய்ய கார்பன் வளம் அதிகமுள்ள மண் (Organic Carbon) 22.9 லட்சம் தேவைப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
தமிழக காடுகளில் மண்வளம் கார்பன் குறைந்துள்ளதால், தாவரங்களின் வளர்ச்சி கணிசமாக பாதிக்கப்படும் என ஆய்வு முடிவுகள் சொல்வதால், அதை சீர்செய்ய, குறைந்தபட்சம் 16 லட்சம்டன் பயோமைன்ட் (Bio-mined) மண் தேவைப்படுகிறது என அண்ணா பல்கலைக்கழக காலநிலைமாற்ற ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
காடுகளின் வனப்பரப்பை அதிகரிக்கவும், மண்வளத்தைக் கூட்டவும், மத்திய அரசு 16 லட்சம் பயோமைன்ட் மண் தேவைப்படும் என வலியுறுத்தி வருகிறது.
மண்வளம் கெட்டுப்போன தமிழக காடுகளில் கார்பன் வளம் வெறும் 0.2 சதவீதம் முதல் 10 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளதென்றும், இதனால் அம்மண்ணில் உள்ள 10 சதவீதம் தாவரங்கள் மட்டுமே உயிர் பிழைக்கும் என்றும், உயிர் பிழைத்தாலும் வளர்ச்சி குறைபாடுகளுடன் இருக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு கிலோ உரம் அல்லது மண்ணில், 18 சதவீதம் கார்பன் உள்ளதென்றும், அதை பயன்படுத்தினால் தமிழகத்தில் வளமான காடுகளின் பரப்பை கணிசமாக அதிகரிக்க முடியும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் திடக்கழிவுகளில் 56 சதவீதம் மட்டுமே முறையான மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுவதாகவும், அதன் வாயிலாக, ஆண்டுக்கு 2.87 லட்சம் டன் உரம் (Compost) உற்பத்தி செய்யப்படுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
அண்ணா பல்கலைக்கழக ஆய்வும் தமிழகக் காடுகளின் மண்வளத்தை அதிகரிக்க, குறைந்தது16 லட்சம் டன் பயோமைன்ட் மண் தேவைப்படுகிறது எனத் தெளிவாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு காடுகளின் மண்வளம், கார்பனை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கினால், அடுத்த 8 ஆண்டுகளில் தமிழக காடுகளின் சீர்கெட்டுள்ள மண்வளத்தை அதிகரித்து, வழக்கமான மற்றும் தேவையான மண்வள இலக்கை தமிழகத்தில் எளிதில் அடைய முடியும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழக உள்ளூராட்சி அமைப்புகள் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரத்தை விவசாயிகளுக்கும், தோட்டத்துறை மற்றும் வேளாண் துறைக்கும் வழங்கி வந்தாலும், சிலசமயம் அவை முழுமையாக விற்கப்படாமல் போகும் சூழலும் தமிழகத்தில் உள்ளது.
அத்தகைய கழிவிலிருந்து தயாரிக்குப்படும் உரங்களை வனத்துறைக்கு அனுப்பி, தமிழக வனப்பரப்பை உயர்த்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்க வேண்டும்.
அத்தகைய கழிவுகளில் கன உலோகங்கள் (ஈயம், குரோமியம்) அதிகம் இருப்பவதால் வேளாண் துறை பயிர்களுக்கு அவை பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அதை உண்ணும் மனிதர்கள், கால்நடைகளுக்கும் சுகாதார பாதிப்பை எற்படுத்த முடியும்.
ஆனால் காடுகள் வளர்ப்பில், வனப்பரப்பை அதிகரிக்க அவற்றை பயன்படுத்தினால், காடுகளில் வளரும் மரங்களின் கட்டைகளில் (Wood) அவை பிடுத்தெடுக்கப்படுவதால், அவற்றின் அளவு (Bio-magnification) குறைவாக உள்ளது எனத் தெரியவந்துள்ளது.
தமிழக வனத்துறை உயரதிகாரிகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகம், "Enhancing Carbon Sink in Tamilnadu"என்ற முயற்சியின் கீழ் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
புவிவெப்பமடைதல் பிரச்னை தமிழகத்தில் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், தமிழக அரசு வனப்பரப்பையும், திடக்கழிவு மேலாண்மையையும், கழிவிலிருந்து பயோமைனிங் மூலம் உரங்களை தயாரித்து, அதை பயன்படுத்தி வனப்பரப்பை அதிகரிக்கவும் தாமதிக்காமல் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்