திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்தஞ்சோறு; வறுத்து பொடித்து செய்ய சுவை அள்ளும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்தஞ்சோறு; வறுத்து பொடித்து செய்ய சுவை அள்ளும்!

திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்தஞ்சோறு; வறுத்து பொடித்து செய்ய சுவை அள்ளும்!

Priyadarshini R HT Tamil
Dec 27, 2024 05:35 PM IST

பெண்களுக்கு ஏற்ற கருப்பு உளுந்தஞ்சோறு செய்வது எப்படி என்று பாருங்கள்.

திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்தஞ்சோறு; வறுத்து பொடித்து செய்ய சுவை அள்ளும்!
திருநெல்வேலி ஸ்பெஷல் கருப்பு உளுந்தஞ்சோறு; வறுத்து பொடித்து செய்ய சுவை அள்ளும்!

அரிசி – ஒரு கப்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கடுகு – கால் ஸ்பூன்

வெந்தயம் – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

வரி மிளகாய் – 2

தட்டிய பூண்டு – 20 பற்கள்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துருவல் – ஒரு கப்

செய்முறை

முதலில் உளுந்தை நன்றாக வாசம் வறுத்துக்கொள்ளவேண்டும். அதை உரலில் சேர்த்து நன்றாக இடிக்கவேண்டும். உளுந்து இரண்டாக உடையும். அதையும் அரிசியையும் சேர்த்து நன்றாக அரை மணி நேரம் ஊறவிடவேண்டும்.

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அதில் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரியவிட்டு, தட்டிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். 6 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு சாதம் வெந்தவுடன் இறக்கவேண்டும். சூப்பர் சுவையான திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சாதம் தயார்.

இதற்கு வெஜ் மற்றும் நான்வெஜ் குருமாக்கள் நல்லது. அனைத்து காய்கறிகள் கூட்டு அல்லது அவியல் மிகவும் சுவையாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள, உருளைக்கிழங்கு, வாழைக்காய் வறுவல் கூட சுவையானதாக இருக்கும். இந்த சாதத்தை உங்கள் வீட்டில் உள்ள பெண்களுககு மாதவிடாய் காலங்களில் சமைத்துக்கொடுத்தால், அவர்களுக்கு மாதவிடாயால் ஏற்படும் உபாதைகள் குணமாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் இந்த உளுந்து சாதத்தை கட்டாயம் செய்து பார்த்து மகிழுங்கள்.

கருப்பு உளுந்தின் நன்மைகள்

சர்க்கரை நோயாளிகள் கருப்பு உளுந்தை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு முறையாக பராமரிக்கப்படும்.

கருப்பு உளுந்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுகிறது.

கருப்பு உளுந்து சருமத்துக்கு நல்லது.

கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்து போராட உதவும்.

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.

செரிமானத்துக்கு நல்லது. குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

மலச்சிக்கலுக்கு நல்லது. வயிற்றுப்போக்கை எதிர்த்து போராட உதவுகிறது.

உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை வழங்குகிறது.

உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது.

எலும்புகளை வலுவாக்குகிறது.

மூட்டு வலி மற்றும் எலும்பு பிரச்னைகளை தடுக்கிறது.

உடலில் இரும்புச்சத்தை அதிகப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நல்லது.

உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.