தின்ன தின்ன தெவிட்டாத சுவை தரும் திருநெல்வேலி சொதி குழம்பு; ஆப்பம், இடியாப்பத்துடன் செம்ம காம்போ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தின்ன தின்ன தெவிட்டாத சுவை தரும் திருநெல்வேலி சொதி குழம்பு; ஆப்பம், இடியாப்பத்துடன் செம்ம காம்போ!

தின்ன தின்ன தெவிட்டாத சுவை தரும் திருநெல்வேலி சொதி குழம்பு; ஆப்பம், இடியாப்பத்துடன் செம்ம காம்போ!

Priyadarshini R HT Tamil
Nov 13, 2024 07:00 AM IST

தின்ன தின்ன தெவிட்டாத சுவை தரும் திருநெல்வேலி சொதி குழம்பு, ஆப்பம், இடியாப்பத்துக்கு ஏற்ற இந்த உணவை தயாரிப்பது எப்படி என்று பாருங்கள்.

தின்ன தின்ன தெவிட்டாத சுவை தரும் திருநெல்வேலி சொதி குழம்பு; ஆப்பம், இடியாப்பத்துடன் செம்ம காம்போ!
தின்ன தின்ன தெவிட்டாத சுவை தரும் திருநெல்வேலி சொதி குழம்பு; ஆப்பம், இடியாப்பத்துடன் செம்ம காம்போ!

தேவையான பொருட்கள்

தேங்காய் – 1

பாசி பருப்பு – கைப்பிடியளவு

கேரட் – 1

பீன்ஸ் – 5

பச்சை பட்டாணி – கைப்பிடியளவு

உருளைக்கிழங்கு – 1

முருங்கைக்காய் – 1

இஞ்சி – கால் இன்ச்

பச்சை மிளகாய் – 2

சின்ன வெங்காயம் – 10

பூண்டு – 10 பல்

வர மிளகாய் – 2

எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

பாசிபருப்பை நன்றாக அலசிவிட்டு, குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

தேங்காயில் இரண்டு பால் எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும். மிக்ஸியில் ஒவ்வொரு முறை அரைக்கும்போதும், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவேண்டும்.

அனைத்து காய்கறிகளையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவேண்டும். இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் பட்டாணி, நறுக்கிய காய்கறிகளை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கவேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு, சீரகம், உளுந்து போட்டு தாளித்துக்கொள்ளவேண்டும். வரமிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

அடுத்து, காய்கறிகள், உப்பு மற்றும் வேகவைத்த பாசிபருப்பு சேர்த்து மசித்து அதனுடன் நன்றாக கலந்துவிடவேண்டும்.

பின்னர் இரண்டாம் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிடவேண்டும். நன்றாக கொதி வந்தவுடன் முதலாம் தேங்காய் பாலை அதில் சேர்த்து கொதிக்க விடக்கூடாது. சூடானவுடனே இறக்கிவிடவேண்டும். இறக்கியுவுடன் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துவிடவேண்டும்.

இதை ஆப்பம் மற்றும் இடியாப்பத்துடன் சேர்த்து பரிமாறினால் சுவை அள்ளும். சாதத்தோடு சேர்த்து இஞ்சி துவையலையும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.