Tirunelveli Sodhi : தின்ன தின்ன தெவிட்டாத சுவையில் திருநெல்வேலி சொதி செய்யலாம் வாங்க!
Tirunelveli Sodhi : திருநெல்வேலி சொதி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 25
பூண்டு – 5 பற்கள்
உருளைக்கிழங்கு – 1
பட்டாணி – ஒரு கப்
கேரட் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் – ஒரு கப்
முருங்கைக்காய் – 1
கத்தரிக்காள் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - இஞ்சி விழுது – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் பால் – 2 கப் (முதல் மற்றும் இரண்டாவது பால்)
வேகவைத்த பாசிப்பருப்பு – ஒரு கப்
எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம், நறுக்கிய பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவேண்டும்.
பின்னர் நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவேண்டும்.
பின்னர் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து கலந்துவிட்டு, பச்சை மிளகாய் இஞ்சி விழுது சேர்க்கவேண்டும்.
உப்பு சேர்த்து கலந்து, இரண்டாவது எடுத்த தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி 10 நிமிடம் வேகவிடவேண்டும்.
வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.
பின்னர் இறக்கி வைத்து 5 நிமிடம் ஆறவிட்டு பிறகு அதில் முதல் தேங்காய் பால் சேர்த்து கலந்துவிடவேண்டும்.
அடுத்து தாளிப்பதற்கு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவேண்டும்.
பின்னர் தாளிப்பை சேர்த்து கலந்துவிட்டு 2 நிமிடம் கழித்து சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டும்.
திருநெல்வேலி சொதி தயார்.
இந்த சொதியை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம், உப்புமா என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.
இந்த சொதியில் தேங்காய் பாலுக்கு பதில் பசும்பால் சேர்த்தும் செய்ய சுவை அள்ளும். இந்த சொதி இலங்கையில் மிகவும் பிரபலமான உணவு. அவர்கள் இதை இடியாப்பம், பிட்டு மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவார்கள்.
தமிழகத்தில் திருநெல்வேலி மக்களின் திருமண விருந்தில் இந்த சொதி பெரும்பாலும் பரிமாறப்படும். திருமணம் முடிந்து மணமகன் வீட்டார் விருந்தில் இந்த சொதி குறிப்பாக பரிமாறப்படுகிறது.
கிட்டத்தட்ட இதேபோல் செய்யப்படுவதுதான் கும்பகோணம் கடப்பாவும், அதற்கு நாம் இத்தனை காய்கறிகள் சேர்க்க தேவையில்லை. ஆனால் சேர்த்தாலும் தவறில்லை. கும்பகோணம் கடப்பாவில் தேங்காயை அரைத்தும் சேர்க்கலாம். பால் பிழிந்தும் சேர்க்கலாம்.
இது காரம் குறைந்த ஒரு சைட் டிஷ் உணவு என்பதால், இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக டிஃபனுக்கு வழக்கமான சைட் டிஷ்கள் செய்து அலுத்துவிட்டால், இதுபோன்ற சைட் டிஷ்கள் செய்து அசத்தலாம்.
இதில் அனைத்து காய்கறிகளும் சேர்த்து செய்யப்படுவதால் இது ஆரோக்கியமும் நிறைந்தது. கட்டாயம் உங்கள் வீட்டில் ஒருமுறை செய்து பாருங்கள். அடிக்கடி சாப்பிடவேண்டும் என்று ஆர்வம் ஏற்படும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்