Tips for Constipation Issue: மலச்சிக்கல் பிரச்னையா? காலை பொழுதை இனிமையாக்க எளிய வழிகள் இதோ
காலை நேரத்தில் மலம் கழித்தல் என்பது அனைவரும் பின்பற்றக்கூடிய வாடிக்கையான விஷயமாகவே இருந்து வருகிறது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானதாகவும் உள்ளது. ஆனால் இதில் சிலர் பல்வேறு சிரமங்களையும் சந்திக்க நேரிடுகிறது. இதை தவிர்ப்பதற்கான சில வழிகளை தெரிந்து கொள்ளலாம்.
இரவு தூங்கி விழித்த பின்னர் காலை நேரத்தில் சீராக மலம் கழித்துவிட்டாலே அன்றைய நாள் நல்ல மனநிலையுடன் சிறப்பாக அமையும் என்பது பலரது நம்பிக்கையாகவே உள்ளது. அந்த வகையில் ஒரு நாளின் முதல் வேலையாக மலம் கழித்தலை செய்து விட்டாலே மனதுக்கும், உடலுக்கும் ஒரு வித புத்துணர்ச்சி ஏற்படுவதை உணரலாம்.
ஏன் காலை நேரத்தில் மலம் கழித்தல் முக்கியமாக பார்க்கப்படுகிறது?
உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதில் குடல் இயக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. குடல் இயக்கம் சரியாக நடைபெற்றால் மலம் கழிப்பது என்பது இயல்பாக நடைபெறும். பலருக்கும் குடல் இயக்கம் நிகழ்ந்த மலம் கழித்தல் காலையிலேயே நடைபெறும். சிலரும் வேறொரு நேரத்தில் இவ்வாறு ஏற்படலாம்.
ஆனால் இரவு உணவுக்கு பின் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால் குடல் இயக்கம், செரிமானம் போன்றவை சிறப்பாக நடைபெற்று காலையில் கழிவுகளை வெளியேற்றுவதற்கான சிறந்த நேரமாக உள்ளது. சீரான மற்றும் சரியான நேரத்தில் குடல் இயக்கம் இருந்தால், குடலில் உள்ள பாக்டீரியாவின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது, இது செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர், மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து உறிஞ்சுதல், நோய் எதிர்ப்பு செயல்பாடு மற்றும் பிற நோய்களின் ஆபத்துகளை குறைக்க உதவுகிறது.
குடல் இயக்கம் வழக்கத்தை விட தாமதமாகும் போது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும், இது அசௌகரியம், வீக்கம் மற்றும் தீவிர சிக்கல்களை ஏற்படுத்தும்.
காலை நேரத்தில் மலசிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கான சில வழிமுறைகளை காணலாம்.
உடலுக்கு மட்டுமல்ல குடலுக்கும் தேவை நீரேற்றம்
குடல் இயக்கத்துக்கு தேவையான அளவில் நீரேற்றம் குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும். எனவே காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு, சிறிய நடை மேற்கொண்டாலே செரிமான அமைப்பு தூண்டப்படும். இதனால் குடல் இயக்கமும் ஏற்பட்டு மலம் கழித்தலில் சிரமத்தை குறைக்கும்
நார்சத்து உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்
நார்ச்சத்து உணவுகள் குடல் இயக்கத்தை நன்கு செயல்படுத்தும். எனவே முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளை சாப்பிடும்போது செரிமான அமைப்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் அவற்றின் செயல்பாடும் சீராக இருக்கும்
சீரான வழக்கத்தை கடைப்பிடித்தல்
ஒவ்வொரு நாளும் மாற்றத்தோடு இல்லாமல் சீரான வழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் குடல் இயக்கத்திலும் சிக்கல் ஏற்படாமல் செரிமானத்தை மேம்படுத்தும். உடலில் இயற்கையாக இருக்கும் சர்க்காடியன் ரிதம் நீங்கள் பின்பற்றும் வழக்கமான அட்டவணைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும். காலப்போக்கில் உங்கள் உடலின் வழக்கத்துக்கு ஏற்பட செயல்முறையை மென்மையாக செயல்படுத்தும்.
உடல் ரீதியான செயல்பாடு
உடற்பயிற்சி செய்வதன் மூலம் பல்வேறு விதமான நன்மைகளை பெறலாம். இதில் செரிமான மேம்பாடும் ஒன்றாக உள்ளது. எனவே குறைந்தபட்ச உடல் ரீதியான செயல்பாடான நடைபயிற்சி, யோகா போன்றவற்றை செய்வதன் மூலம் வயிற்றில் உள்ள தசைகள் தூண்டப்பட்டு குடல் இயக்கத்துக்கு வழி வகுக்கும்
மனஅழுதத்ததை நிர்வகித்தல்
மனஅழுத்தம், கவலை போன்ற மனம் சார்ந்த பிரச்னைகளால் செரிமான செயல்பாட்டிலும் பாதிப்பு ஏற்படலாம். இதன் விளைவாக வழக்கத்துக்கு மாறான குடல் இயக்கம் ஏற்படலாம். எனவே இதை தடுக்க தியானம், மூச்சு பயிற்சி போன்ற மனம் மற்றும் உடலை ரிலாக்ஸாக வைக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்
இயற்கையாக தூண்டுதல் அளிக்கும் விஷயங்களை பின்பற்றுதல்
மூலிகை டீ, இஞ்சி டீ போன்ற இயற்கையாக தூண்டுதல் அளிக்ககூடிய பானங்களை அருந்துவதன் மூலம் குடல்கள் சுருங்குவது தவிர்க்கப்பட்டு கழிவுகளை முழுவதுமாக வெளியேற்ற உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை கலந்து குடித்தால் கூட செரிமான அமைப்பு தூண்டப்பட்ட குடல் இயக்கத்தை செயல்பட வைக்கும்
பாத்ரூம் சூழ்நிலையை ரிலாக்ஸாக வைப்பது மிக அவசியம்
மலம் கழிக்கும் இடம்தானே என்று எண்ணாமல் பாத்ரூமையும் சுத்தமான சூழ்நிலையில் போதி அளவில் காற்று வெளியேறும் விதமாகவும், உள்ளே புகும் விதமாகவும் வைத்திருந்தால் குடல் இயக்கமானது சீராக இருப்பதுடன், மலம் கழிப்பதற்கு அதிக நேரமும் ஆகாது.