தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Tips For Single Child Parents

Parenting tips; ஒற்றைக் குழந்தை பெற்றோர் கவனிக்க வேண்டியவை

I Jayachandran HT Tamil
Mar 03, 2023 09:19 PM IST

ஒற்றைக் குழந்தை பெற்றோர் கவனிக்க வேண்டியவை குறித்து இங்கு காண்போம்.

ஒற்றைக் குழந்தை பெற்றோர்
ஒற்றைக் குழந்தை பெற்றோர்

ட்ரெண்டிங் செய்திகள்

‘ஒரு குழந்தை போதும்’ என முடிவெடுக்கும் பெற்றோர் அக்குழந்தையை மிகவும் கண்டிப்பாக வளர்ப்பார்கள். இது தவறு. இதனால் சமூகத்தில் சேர்ந்து வாழமுடியாமல் அந்தக் குழந்தை எதிர்காலத்தில் கஷ்டப்பட நேரிடும்.

அக்கா, தம்பி என உடன்பிறந்தவர்களுடன் வாழும் குழந்தைகளைவிட, வீட்டில் ஒற்றைக் குழந்தையாக வளர்கிறவர்களுக்கு எண்ணங்களை, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.

தனிக்குடும்பத்தில் வாழும் ஒற்றைக் குழந்தை அம்மா, அப்பா என அதன் உடமைகள் எதையும் பகிரவேண்டிய அவசியம் இருக்காது. எனவே, அக்குழந்தை பள்ளியிலோ, வெளியிடங்களிலோ பகிர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அந்த குழந்தை மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதனால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்.

கூட்டுக்குடும்பத்தில் வாழும் ஒற்றைக் குழந்தையை இதில் சேர்க்கக்கூடாது. அவர்கள் நிலை வேறு.)அவர்கள், சகோதர உறவுகளுடன் இணைந்து வாழ்வதால் ஒற்றைக் குழந்தை என்று நினைக்க வேண்டியதில்லை. அதுவே, மற்றவர்களுடன் தன்னுடைய உணர்வுகளையும், உடமைகளையும் கூட்டுக்குடும்பத்தில் வாழும் ஒற்றைக் குழந்தை பகிர்ந்துகொள்ளப் பழகியிருக்கும்.

இரண்டு அல்லது மூன்று வயதில், பெற்றோர், குழந்தை பராமரிப்பாளர் ஆகியோருடன் இதனுடைய கலந்துரையாடுதல் குறைவாகக் காணப்படும். தனியாக வளரும் குழந்தைகளுக்குத்தான் உதவி தேவைப்படும். எனவே பெற்றோர் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.

ஒரே குழந்தை என்ற அக்கறையில் டான்ஸ், பாட்டு என பல்வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிடுவதில் தவறு இல்லை. ஆனால், குழந்தைக்குத் தேவையற்ற அழுத்தம் தரக்கூடாது. அதற்குப் பதிலாக அதனுடன் கலந்துரையாட வேண்டும். அந்தந்த வயதுக்கு என்னென்ன தேவையோ, அதை பெற்றோர் முழுமையாக குழந்தைக்கு கிடைக்க செய்ய வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்