தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Tips For Parents To Get Babies To Sleep Easily

Parenting: குழந்தைகளை எளிதாக தூங்க வைக்க பெற்றோருக்கான டிப்ஸ்கள்

Marimuthu M HT Tamil
Jan 21, 2024 05:13 PM IST

குழந்தைகளை எளிதாக தூங்க வைக்கும் டிப்ஸ்கள் குறித்துப் பார்க்கலாம்.

குழந்தைகளை எளிதாக தூங்க வைக்கும் டிப்ஸ்கள்
குழந்தைகளை எளிதாக தூங்க வைக்கும் டிப்ஸ்கள் (UNSPLASH)

ட்ரெண்டிங் செய்திகள்

படுக்கை நேரத்தில் கேட்ஜெட்கள் எனப்படும் மின்னணு சாதனைங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெற்றோர்கள், குழந்தைகளுக்கு அறிவுறுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும்.

இல்லையென்றால் குழந்தைகள், குறைந்த தூக்கத்தை அடைகிறார்கள். அடுத்த நாள் தங்கள் சக நண்பர்களைவிட, அதிக தூக்கம் வருவதை உணர்கிறார்கள். 

நியூசிலாந்து மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் 11 வயது முதல் 13 வயது வரை ஆய்வில், ஒடாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட  சர்வேயில் 163 மாணவர்களில் பெரும்பாலானோர் (72 சதவீதம்) ஒரு வாரத்தில் சராசரியாக 9 முதல் 11 மணிநேரம் இரவில் தூங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

ஆனால், இந்த வழிகாட்டுதல்கள் கிட்டத்தட்ட நான்கு மாணவர்களில் ஒருவர் தூக்கத்தை அடையவில்லை என்பதைக் காட்டுகிறது என்று ஆய்வு ஆராய்ச்சியாளர் கேட் ஃபோர்டு கூறுகிறார்.

கேட்ஜெட் பயன்பாட்டைக் குறைக்க வையுங்கள்:

ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள் மற்றும் டிஜிட்டல் கேஜெட்டுகள் நீல-ஒளி அலைநீளத்தை வெளியிடுகின்றன. இது உங்கள் உடலின் மெலடோனின் சுரப்பியின் அளவைப் பாதிக்கிறது. இது தூக்க சுழற்சியில் முக்கியமான ஹார்மோன் ஆகும்.

உங்கள் தூக்க-விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்தும் மெலடோனின் சுரப்பி, ஒளியால் கட்டுப்படுத்தப்படுகிறது. இருட்டாக இருக்கும்போது இது வெளியாகிறது. இது உங்களது தூக்கத்தைத் தூண்டவும் உடலை ஓய்வெடுக்கவும் தயார்படுத்துகிறது. ஆனால், கேட்ஜெட்களில் இருந்து வரும் நீல ஒளி உங்களை விழிப்புடன் வைத்திருக்கிறது. இது உங்களைத் தூங்கவிடாமல் வைப்பது மட்டுமல்லாமல், நீங்கள் இறுதியாக தூங்கும்போது நீண்டநெடிய தூக்கத்தையும் குறைக்கிறது. எனவே, குழந்தைகளின் கேட்ஜெட் பயன்பாட்டைக் குறைக்க பயிற்சி கொடுங்கள்.

நன்கு விளையாட வையுங்கள்: குழந்தைகள் படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, நன்கு விளையாட வையுங்கள். 

நாள்பட்ட தூக்கமின்மை, கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளைக் கொடுப்பது குழந்தைகளின் எடையை அதிகரிக்கிறது. எனவே, ஆரோக்கியமற்ற உணவுகள் குழந்தைகளின் தூக்கமின்மைக்குக் காரணமாகின்றன. 

படுக்கை விரிப்பு முதல் தலையணை வரை: படுக்கை துணி, தலையணைகள், போர்வைகள் ஆகியவற்றில் உள்ள நுண்ணிய தூசிப் பூச்சிகள் மற்றும் பிற ஒவ்வாமை தூண்டுதல்கள் உங்களைத் தும்மச் சொல்லும். தூங்கவிடாமல் வைத்திருக்கும். எனவே, படுக்கை துணிகளை வெதுவெதுப்பான நீரில் துவைக்கவும். தலையணை மற்றும் மெத்தைகளை வெயிலில் காயவைக்கவும்.

குழந்தைகளின் கழுத்துக்கு ஏற்ற சரியான தலையணைகளைப் பயன்படுத்துங்கள். மல்லாந்து படுக்கும் குழந்தைகள், இரவில் தங்களின் கால் வலியைக் குறைக்க முழங்கால்களுக்கு அடியில் தலையணையை செருகிக் கொள்வார்கள். அப்படியிருந்தால் அவர்களுக்குத் தூக்கம் நன்கு வரும். அதை அப்புறப்படுத்தவேண்டாம்.

குழந்தைகளுக்கான இரவு உணவு: குழந்தைகள் படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பு, முடிந்தவரை சீக்கிரம் சாப்பிட வைத்துவிடுங்கள்.

இரவு எண்ணெய் மற்றும் இறைச்சி உணவுகளுக்குப் பதிலாக காய்கறிகள், பயறு வகைகள், பால் உணவுகள் போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். படுக்கச் செல்லும்போது நொறுக்குத்தீனி தராதீர்கள். காஃபி, தேநீர் போன்ற பானங்களைத்தராதீர்கள். அது அவர்களைத் தூங்கவிடாமல் தடுக்கிறது.

குழந்தைக்கு தூக்கமின்மை நான்கு வாரங்களுக்கும் மேலாக நீடித்தால், மருத்துவரை அணுகி அவரது கருத்தைப் பெறுவது நல்லது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்